எல்.வி.பி, வங்கியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் குழுவுக்கு, ஆர்.பி.ஐ- ஒப்புதல்
- வசதியான பணப்புழக்க நிலை மற்றும் வைப்புத்தொகையாளர்களின் பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது
சென்னை – லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB) - ன் அன்றாட விவகாரங்கள், மூன்று தனிப்பட்ட இயக்குநர்களைக் (independent directors) கொண்ட இயக்குநர்கள் குழுவால் கவனித்துக் கொள்ளப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) 2020 செப்டம்பர் 27 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இயக்குநர்கள் குழு, இடைக் காலத்தில் எம்.டி மற்றும் சி.இ.ஓ.வின் அதிகாரத்துடன் செயல்படும்.
1. திருமதி. மீட்டா மக்ஹான் (Smt. Meeta Makhan) - இயக்குநர்கள் குழுவின் தலைவர்
2. திரு. சக்தி சின்ஹா (Shri Shakti Sinha) - உறுப்பினர்
3. திரு. சதீஷ் குமார் கல்ரா (Shri Satish Kumar Kalra) – உறுப்பினர்
2020 செப்டம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (Liquidity Coverage Ratio - LCR)) சுமார் 262% ஆக உள்ளது, ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி இது குறைந்தபட்சம் 100% ஆக இருந்தால் போதும். இது, மிக அதிகமாக இருப்பதால், வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள், கடன் பத்திரங்களில்
முதலீடு செய்திருப்பவர்கள், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கிக்கு கடன் வழங்குபவர்கள் நன்கு பாதுகாக்கப்படுகிறார்கள். லட்சுமி
விலாஸ் பேங்க், பொருந்தக்கூடிய
சட்டத்தின் படி, வங்கியில் ஏற்பட்ட
முன்னேற்றங்கள் மற்றும் அவை எப்போது செயல்படுகின்றன என்பது
குறித்த தகவல்களை தொடர்ந்து பொது களத்தில் பகிர்ந்து கொள்ளும்.