ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட், பொதுமக்களுக்கு பங்கு வெளியீடு 22 செப்டம்பர் 2020 அன்று ஆரம்பம்
· ரூ.10 முக மதிப்பு கொண்ட
பங்கு ஒன்றின் விலைப் பட்டை ரூ .305 முதல் ரூ.306
· பங்கு வெளியீடு 22 செப்டம்பர்
2020 அன்று ஆரம்பித்து 24 செப்டம்பர் வரை நடக்கிறது.
சென்னை, 20, செப்டம்பர் 2020: ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட் (Angel Broking Limited), ஜூன் 30, 2020 நிலவரப்படி,
என்.எஸ்.இ-யில் செயலில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைப்படி இந்தியாவின் மிகப்பெரிய
சில்லறை பங்குத் தரகு நிறுவனங்களில் ஒன்றாகும் (ஆதாரம்: கிரிசில் அறிக்கை).
இந்த நிறுவனம், 2020 செப்டம்பர் 22 ஆம் தேதி, தலா 10 ரூபாய் முக மதிப்பு (“ஈக்விட்டி
பங்குகள்” மற்றும் அத்தகைய ஆரம்ப பொது மக்களுக்கான விற்பனை) கொண்ட புதிய பங்கு விற்பனை
(initial public offer) ஆரம்பிக்கிறது. பங்கு வெளியீடு செப்டம்பர் 24, 2020 அன்று நிறைவு
பெறும். பங்கு ஒன்றின் விலைப் பட்டை (price band) ரூ.305 முதல் ரூ.306 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான விற்பனையில் இந்த நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் ரூ.6,000.00
மில்லியன் விற்பனை செய்யப்படுகிறது.இதில், மொத்தம் ரூ.3,000.00 மில்லியன் (“புதிய வெளியீடு”
- “Fresh Issue”) மற்றும் பங்குச் சந்தை மூலமான விற்பனை ரூ.3,000.00 மில்லியன் (““Offer for Sale””) ஆக இருக்கும். அசோக் டி.தக்கர் ரூ.183.35 மில்லியன் மற்றும் சுனிதா ஏ. மாக்னானி
ரூ. 45.00 மில்லியன் (இருவரும் சேர்ந்து ஒன்றாக, “நிறுவனர் விற்பனை செய்யும் பங்குதாரர்”),
மற்றும் ஐ.எஃப்.சி (“முதலீட்டாளர் விற்பனை செய்யும் பங்குதாரர்”) ரூ.1,200.02 மில்லியன்
மற்றும் ரூ. தனிநபர் பங்குதாரரால் ரூ.1,571.63 மில்லியன் (நிறுவனர் விற்பனை செய்யும்
பங்குதாரர் மற்றும் முதலீட்டாளர் விற்பனை பங்குதாரர், “விற்பனையாளர் பங்குதாரர்கள்”)
உடன் விற்பனை நடக்கிறது.
குறைந்தபட்சம் 49 ஈக்விட்டி பங்குகள்
மற்றும் அதன் பின்னர் 49 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளில் ஏலம் எடுக்க முடியும். இந்த ஈக்விட்டி பங்குகள் பி.எஸ்.இ லிமிடெட் மற்றும்
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (“என்.எஸ்.இ”) இரண்டிலும் பட்டியலிட
உத்தேசிக்கப்பட்டுள்ளன. பங்கு வெளியீட்டுக்கு, என்.எஸ்.இ நியமிக்கப்பட்ட சிறப்பு பங்குச்
சந்தை ஆகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட்,
எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்
லிமிடெட் ஆகியவை இந்தப் பங்கு விற்பனைக்கு
(BRLMs- “பிஆர்எல்எம்”) முன்னணி மேலாளர்களாக இயங்குகிறார்கள்.
1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள் (Securities
Contracts (Regulation) 19(2)(b)(ii) படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு
உட்பட்டு இந்தப் பங்கு வெளியீடு நடக்கிறது. குறைந்தபட்சம் ரூ.4,000 மில்லியன் திரட்டப்படுகிறது. மேலும் ஏலமுறையில் (Book Building Process) பங்கு
விற்பனை நடக்கிறது. மொத்தப் பங்கு விற்பனையில் குறைந்தபட்சம் 50.00%, தகுதி வாய்ந்த
நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers -QIBs) ஒதுக்க வேண்டும். இதில், 60.00 சதவிகிதம் விருப்பத்தின் அடிப்படையில் பெரிய
முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) ஒதுக்கப்படலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு,
பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தால்
அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பங்குகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள
பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில்
(ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு தவிர்த்து) 5.00% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில்
உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.
மொத்தப் பங்கு வெளியீட்டில்
15.00 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும்
(Non-Institutional Investors), 35.00 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில்
சிறு முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) பங்குகள் ஒதுக்கப்படும்.
வெளியீட்டு விலை அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி விதிமுறைகள்
2018-ன் படி இப்படி பங்குகள் ஒதுக்கப்படும்.
அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர்
முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த
முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து ((including UPI ID for RIBs
using UPI) பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள்
இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.