வாய்ப்பு மற்றும் பரவலாக்கம் மூலம், முதலீட்டாளர்களாகிய நாம் மிகவும் உகந்த நீண்ட கால போர்ட்ஃபோலியோ நன்மைகளை அடைய வேண்டும். இதற்கு
எந்தவொரு நீண்ட கால முதலீட்டு ஆலோசனையையும் விட்டு விடக் கூடாது. இந்திய முதலீட்டாளர்கள், உலகளாவிய பங்கு முதலீட்டு வாய்ப்புகளில் 97%-ஐ இழந்துவிட்டனர். ஏனெனில் அவர்களின் முதலீட்டுக் கலவையில் பெரும்பகுதி இந்திய பங்குச் சந்தைகளில் இருக்கின்றன. (இந்தியப்
பங்குச் சந்தை என்பது, உலகளாவிய பங்குச் சந்தைகளில் சுமார் 3% மட்டுமே*). எல்லா இடங்களிலும் முதலீட்டாளர்கள், முதலீடு செய்யும்போது “நாடு சார்பு” (“home bias”) என்று அழைக்கப்படுவதை வெளிப்படுத்துகிறார்கள். முதலீட்டாளர்களாகிய நாம் நமது சொந்த நாட்டில் உள்ள பங்குச் சந்தைகளில் அதிகமாக முதலீடு செய்கிறோம் என்ற உண்மையை இந்தச் சொல் குறிக்கிறது. இருப்பினும், நாடு சார்புகளின் அளவு வெவ்வேறு சந்தைகளில் வேறுபடுகிறது மற்றும் முதலீட்டாளர்களும் பங்குச் சந்தைகளும் முதிர்ச்சியடையும் போது காலப்போக்கில் இது குறைகிறது.
இந்திய முதலீட்டாளர்கள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் முதலீடுகளைச் செய்யத் தொடங்குவதற்கும், அவர்களின் முதலீடுக் கலவைகளில் (portfolios) நாடு சார்புகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இதுதான் சரியான நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் அதிக வளர்ச்சி காணும் பங்கு சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் பங்குச்
சந்தை பங்களிப்பு என்பது உலக ஒட்டு மொத்த பங்குச் சந்தைகளின் பங்களிப்பு
உடன் ஒப்பிடும் போது சிறிய பகுதியாகும்.
பல பெரிய உலகளாவிய துறைகள் மற்றும் கருப்பொருள்கள் (themes) உள்ளன. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்
பட்டியலில் பல சிறப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் இல்லை. குறிப்பாக, நுகர்வோர் தொழில்நுட்பம், இணையம் மற்றும் மின் வணிகம் (consumer technology, Internet and e-Commerce) போன்றவை இல்லை. எனவே, உலகளாவிய முதலீட்டு ஒதுக்கீடு (allocation to global products), இந்திய முதலீட்டாளர்களுக்கு இரண்டு முக்கிய நன்மைகளை வழங்குகிறது.
முதலாவதாக, இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு வெளியே கிடைக்கும் பரந்த முதலீட்டு வாய்ப்பைப் பயன்படுத்த அவை அனுமதிக்கின்றன.
இரண்டாவதாக, அவர்கள் தங்கள் பங்கு ஒதுக்கீடுகளின் இடர்ப்பாடு – வருவாயை (risk-return) பரவலாக்கவும் மேம்படுத்தவும் அனுமதிக்கிறது.
உலகளாவிய முதலீட்டு ஒதுக்கீட்டிலிருந்து சிறந்ததைப் பெற, முதலீட்டாளர்கள் ஒரு நாடு அல்லது துறை அல்லது கருப்பொருளுக்கு தங்களை மட்டுப்படுத்தாமல் உலகளவில் சிறந்த திட்டங்களில் / பங்குகளில் நீண்ட கால இலக்குகளுடன் முதலீடு செய்ய வேண்டும்.
ஆக்ஸிஸ்
குளோபல் ஆல்பா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்
(Axis Global Equity Alpha Fund of Fund): ஆக்ஸிஸ் ஏ.எம்.சி (Axis AMC) புதுமையான முதலீட்டுத்
திட்டங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால வருமான செயல்திறனை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்ட ஒரு வலுவான முதலீட்டு செயல்முறையை உருவாக்கி உள்ளது. அதன் உலகளாவிய திட்ட முன்முயற்சிக்காக, ஆக்சிஸ் ஏ.எம்.சி, ஷ்ரோடர்ஸ் (Schroders) நிறுவனத்துடன் (ஆக்சிஸ் ஏ.எம்.சி-ல் சுமார் 25% பங்குதாரராக உள்ளது) இணைந்துள்ளது.
ஷ்ரோடர்ஸ் என்பது உலகத் தரம் வாய்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமாகும்,
ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஜி.பி.பி 525.8 பில்லியன் (AUM of GBP 525.8 bn) தொகையை நிர்வகித்து வருகிறது.
ஆக்சிஸ் ஏ.எம்.சி ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளில் 2 வெற்றிகரமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு சில உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது – ஆக்சிஸ் குரோத் ஆப்பர்சூனிட்டீஸ்
ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் ஈ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட் (Axis Growth Opportunities Fund and Axis ESG
Equity Fund) ஆகியவை அந்த இரண்டு மியூச்சுவல் ஃபண்ட்களாகும்.
ஆக்சிஸ் குளோபல் ஈக்விட்டி
ஆல்பா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Axis Global Equity Alpha
Fund of Fund), இந்திய சந்தையில் ஆக்சிஸ் ஏ.எம்.சி அறிமுகப்படுத்திய முதல் உலகளாவிய ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (ஒரு மியூச்சுவல் ஃபண்ட்,
இன்னொரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது) இதுவாகும்.
ஆக்சிஸ் குளோபல் ஈக்விட்டி ஆல்பா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் என்பது ஷ்ரோடர் இன்டர்நேஷனல் செலக்ஷன் ஃபண்ட் குளோபல் ஈக்விட்டி ஆல்பா (Schroder
International Selection Fund Global Equity Alpha) திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு ஓப்பன் எண்டெட் திட்டமாகும்.
இந்த ஃபண்ட்-ன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
· இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதி, புவியியல் மற்றும் துறை ரீதியாக பரவலாக்கப்பட்ட (geographically and sectorally diversified) நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது.
· பங்குச் சந்தையால் தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் நிலையான போட்டி நன்மையுடன் தரமான வளர்ச்சி நிறுவனங்களைக் கண்டுபிடித்து அவற்றின் பங்குகளில் முதலீடு செய்கிறது. இந்த ஃபண்ட் கீழ் - நிலை அடிப்படை (bottom-up fundamental) ஆராய்ச்சி முறையைப் பயன்படுத்தி முதலீட்டுக்கான
பங்குகளைத் தேர்வு செய்கிறது.
· இந்த ஃபண்டை லண்டனை சேர்ந்த ஷ்ரோடர்ஸ் குளோபல் ஈக்விட்டிஸ் குழு (Schroders Global Equities team) நிர்வகிக்கிறது.
ஆக்சிஸ் ஏ.எம்.சி-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சந்திரேஷ் குமார் நிகம் (Mr.
Chandresh Kumar Nigam, MD & CEO, Axis AMC) கூறும்போது, ‘ஆக்சிஸ் ஏ.எம்.சி எப்போதும் பொறுப்பான முதலீட்டின் தத்துவத்தை ஆதரித்து வருகிறது. இன்று உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகள், இந்திய முதலீட்டாளரின் முதலீட்டு உலகத்தை கணிசமாக விரிவுபடுத்துவதோடு, பரவலாக்கத்தின் நன்மைகள் மூலம் அவர்களின் முதலீட்டுக் கலவையை மேம்படுத்தவும் உதவும். எங்கள் புதிய ஃபண்ட், 200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு சொத்து மேலாண்மை நிறுவனமான ஷ்ரோடர்ஸ் உடன் இணைந்து, இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தளத்தின் எளிமை மற்றும் வசதி மூலம் உயர் தரமான உலகளாவிய முதலீட்டுக் கலவையை அணுக உதவும்.’ என்றார்.
ஷ்ரோடர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு
அதிகாரி மற்றும் உலகளாவிய மற்றும் கருப்பொருள் ஈக்விட்டீஸ் பிரிவின் தலைவர் திரு அலெக்ஸ் டெடர் (Mr
Alex Tedder, CIO, Head of Global & Thematic Equities, Schroders Investment
Management) கூறும்போது,‘ இந்த ஃபண்ட் வெளியீட்டில் ஆக்சிஸ் ஏ.எம்.சி உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய முதலீடு, செல்வம் உருவாக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. மற்றும் ஆக்சிஸ் குளோபல் ஈக்விட்டி ஆல்பா
ஃபண்ட், ஆலோசகர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் ஷ்ரோடர்ஸின் சிறந்த உலகளாவிய நிறுவனப் பங்குகளின் அற்புதமான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எங்கள் முதலீட்டு அணுகுமுறை, ஆக்சிஸ் ஏ.எம்.சி நிறுவனத்தின் உள்நாட்டு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களை மிகவும் வெற்றிகரமாக செயல்பட உதவுகிறது. எங்கள் கருத்துப்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்கு மேலாண்மையின் மிகச் சிறந்ததை நாங்கள் ஒன்றாக
வழங்குகிறோம்.’ என்றார்.
புதிய ஃபண்ட் வெளியீடு (New
Fund Offer- NFO) 2020 செப்டம்பர் 04 தொடங்கி 2020 செப்டம்பர் 18 வரை நடக்கிறது.
· ஆதாரம்:
உலக வங்கி. 31 மார்ச்
2020 நிலவரப்படி
திட்ட வகைப்படுத்தல் (Product
Labelling):
திட்டத்தின் பெயர் |
|
திட்ட வகை |
ஆக்ஸிஸ் குரோத் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் (ஓப்பன் எண்டெட், ஈக்விட்டி ஃபண்ட், லார்ஜ் கேப் மற்றும்
மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது) |
|
இந்தத் திட்டம் இந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது * · நீண்ட காலத்தில் மூதன அதிகரிப்பு · பரவலான முதலீடுகளில் பிரதானமாக பங்குச் சந்தை, பங்குச்
சந்தை ஆவணங்களில் இந்தியா மற்றும் உலக அளவில் செயல்படும் நிறுவனப் பங்குகளில் முதலீடு
செய்கிறது. |
ஆக்ஸிஸ் ஈ.எஸ்.ஜி ஃபண்ட் (ஓப்பன் எண்டெட், ஈக்விட்டி
ஃபண்ட் திட்டம். நிலையான கொள்கைகளை கொண்ட சுற்றுச்சூழல், சமூகம், நியாயமான
நிர்வாகம் (Environment, Social and Governance -ESG) கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது. |
|
இந்தத் திட்டம் இந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது *: · நீண்ட காலத்தில் மூலதன அதிகரிப்பு · நிலையான கொள்கைகளை கொண்ட சுற்றுச்சூழல், சமூகம், நியாயமான
நிர்வாகம் (Environment, Social and Governance -ESG) கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது. |
விரிவான சொத்து ஒதுக்கீடு (asset allocation) மற்றும் முதலீட்டு உத்தி, திட்ட தகவல் ஆவணத்தை (scheme information document) தயவுசெய்து பார்க்கவும்.
ஆக்ஸிஸ் ஏ.எம்.சி பற்றி
(About Axis AMC):
ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம் (Axis AMC), மியூச்சுவல் ஃபண்ட்கள் (பரஸ்பர நிதிகள்), போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் (alternative investments) என ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை வழங்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்
ஷ்ரோடர்ஸ் பற்றி (About Schorders):
ஷ்ரோடர்ஸ் ஒரு முன்னணி உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமாக உள்ளது. இது பல்வேறு சொத்து பிரிவுகள் மூலம் 526 பில்லியன் யூரோவுக்கும் (£526 billion) அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
இது 37 நாடுகளில் இயங்குகிறது. மற்றும் உலகளாவிய சொத்துகளை நிர்வகிப்பதில் தனித்துவமாக
திகழ்கிறது. 200
ஆண்டுகளுக்கும் மேலான சந்தை நிபுணத்துவத்துடன், இந்திய முதலீட்டாளர்களுக்கு உலகளாவிய பங்கு முதலீடுகளின் மூலம் அவர்களின் முதலீட்டுக் கலவையை பரவலாக்க தனித்துவமான சலுகையை வழங்குகிறது. ஷ்ரோடர்ஸ் ஆக்ஸிஸ் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (Axis Asset Management Company Limited) –ன் கூட்டு நிறுவனத்தின் (JV) ஒரு பகுதியாகும்.