பி.என்.பி மெட்லைஃப், அதன் திட்டங்களின் கலவையை விரிவுப்படுத்தி சிறு வாடிக்கையாளர்களுக்காக மூன்று தனித்துவமான புதிய பாலிசிகள் அறிமுகம்
ஓர் உத்தரவாதமான சேமிப்புத் திட்டம், இது வாடிக்கையாளர்களுக்கு மொத்த தொகை
அல்லது துணை வருமானமாக பணம்
பெறும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது
·
கோவிட் -19 க்கு எதிரான பாதுகாப்புடன், ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீட்டை உறுதிப்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்த திட்டம்
·
ஒரு புதிய யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் (யுலிப்), இது முழு ஆயுட்கால காப்பீடு மற்றும் செல்வம் உருவாக்குவதற்கான தனிப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது
பி.என்.பி மெட்லைஃப் இன்சூரன்ஸ் (PNB
MetLife Insurance) நிறுவனம், அதன் திட்டங்களின்
கலவையை மூன்று புதிய தனித்துவமான பாலிசிகளுடன் விரிவுபடுத்துகிறது: பி.என்.பி மெட்லைஃப் கேரண்டீட்
ஃப்யூச்சர் பிளான்; மேரா மெடிக்ளைம் பிளான் மற்றும் பி.என்.பி மெட்லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினம் பிளஸ்.
(PNB MetLife Guaranteed Future Plan; Mera Mediclaim Plan and PNB MetLife Smart
Platinum Plus) ஆகியவை அந்தப் புதிய பாலிசிகளாகும்.
பி.என்.பி மெட்லைஃப் வாடிக்கையாளர் மையத்
தன்மை என்பது அனைத்து செயல்பாடுகளையும் இணைப்பதாகும்.
இந்தச் சலுகைகள் நிறுவனத்தின் "வாழ்க்கை வட்டம்" (Circle of Life) என்ற கருத்தை நிறைவு செய்கிறது. இது வாடிக்கையாளர்களின் தேவைகளை மதிப்பிடுகிறது மற்றும் பிள்ளைகளின் கல்வி, குடும்ப பாதுகாப்பு, நீண்ட கால சேமிப்பு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நிதித் தேவைகள் குறித்த தீர்வுகளை அவர்களுக்கு வழங்குகிறது.
வெவ்வேறு பிரிவுகளில் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.