பி.என்.பி மெட்லைஃப் கேரண்டீட் ஃப்யூச்சர் பிளான் (PNB MetLife Guaranteed Future Plan), ஓர் உத்தரவாத சேமிப்பு ஆயுள் காப்பீடு திட்டம். இந்த பாலிசி நீண்ட கால உத்தரவாத நன்மைகளின் இரட்டை பலன்களையும், பாலிசிதாராருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் வாடிக்கையாளருக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது.
வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் அவர்களின் பண வசதிக்கு ஏற்ப சேமிப்பு பிரத்யேகமாக உதவுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் எதிர்கால உத்தரவாத
தொகையை
மொத்தமாக, வருமானம் அல்லது அதன் கலவையாகத் தேர்வுசெய்யும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. இது பல்வேறு இலக்குகளுக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.
இந்த நிறுவனம், ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் (Religare Health Insurance) நிறுவனத்துடன் இணைந்து, மேரா மெடிக்ளைம் பிளான் (Mera Mediclaim Plan) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு பாலிசியின் கீழ் ஆரோக்கிய காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டின் (health and life insurance) நன்மைகளை ஒருங்கிணைக்கிறது. இந்தப் புதிய தீர்வு வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் நல்ல உடல்நலம், பணமில்லா மருத்துவமனை செலவு ஆகியவற்றை வழங்குகிறது
கூடுதலாக, பி.என்.பி மெட்லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினம் பிளஸ், (PNB MetLife Smart Platinum Plus,) முழு ஆயுள் சேமிப்பு சார்ந்த யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Unit-Linked Insurance Plan - ULIP) தொடங்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India - IRDAI)) ஒப்புதலை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தத் திட்டம் பாலிசிதாரரின் எதிர்பாராத மரணத்தின் போது குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்குகிறது. அதேபோல் குறிக்கோள்களை அடைவதற்கு ஏற்றவாறு தீர்வுகளையும் வழங்குகிறது.
இதில் விருப்பம் உட்பட, செல்வம் உருவாக்குவது, (wealth creation) சிக்கலான நோய்களுக்கு (critical illness) சிகிச்சை
பெறுவது போன்றவை உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக