கோவிட் பெருந்தொற்று நெருக்கடி காலத்தின்போது புதிய நம்பிக்கையை விதைக்கும் இந்தியாவின் முன்னோடித்துவ மனிதவள சேவைகள் நிறுவனமான மா ஃபா
• மா ஃபா எட்யூட் (Ma Foi Etude) என்ற பெயரில் எளிய கட்டணத்தில் வேலைவாய்ப்பை இலக்காக கொண்ட மின்-கற்றல் செயல்தளம் அறிமுகம்
• காலத்தின் கட்டாயம் மற்றும் தேவைக்கேற்ப பதில்வினையாற்றும் மா ஃபா!
சென்னை,
14, ஆகஸ்ட் 2020: கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடி பல்வேறு
துறைகளில் வேலை வாய்ப்புகளை சீர்குலைத்து முடக்கிப் போட்டிருக்கின்ற
நிலையில் புதிய திறன்களை உருவாக்கிக்கொள்வதும், ஏற்கனவே இருக்கும் திறன்களை
புதுப்பித்துக் கொள்வதும், பணி வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கின்ற
லட்சக்கணக்கான மக்களுக்கு புதிய நம்பிக்கையாக இருக்கிறது. இந்தியாவில்
முறைப்படுத்தப்பட்ட மனிதவள சேவைகள் துறையில் முன்னோடியாக போற்றப்படும் மா
ஃபா குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் புரட்சிகரமான மின்-கற்றல்
செயல்தளமான மா ஃபா எட்யூட் (Ma Foi Etude), இந்த நம்பிக்கை ஒளிக்கீற்றை
உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அநேகமாக இருக்கக்கூடும்.
வேலைவாய்ப்பை
இலக்காக கொண்ட நவீன, மின்-கற்றல் செயல்தளமான மா ஃபா எட்யூட், அறிமுகம்
செய்யப்படும் நிகழ்வை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர்
கருத்தரங்கில், மா ஃபா குழுமத்தின் நிறுவனர்களான திரு. கே. பாண்டியராஜன்
மற்றும் திருமதி லதா ராஜன் ஆகியோரோடு கவின்கேர் குழுமத்தின் தலைவர் திரு.
சி.கே. ரங்கநாதன், ஜோஹோ – ன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான திரு.
ஶ்ரீதர் வேம்பு, ஐஐடி -மெட்ராஸ் – ன் இயக்குனர் புரொஃபசர் பாஸ்கர்
ராமமூர்த்தி, ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் & ஹோல்டிங் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குனரும் தேசிய தலைவருமான திரு. ஜோஷ் ஃபோல்கர் – மற்றும் கிரியா
பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் கபில் விஸ்வநாதன், ஆகியோரும் இணைந்து
பங்கேற்றனர். இந்த மெய்நிகர் கருத்தரங்கில் இந்தியாவிலிருந்தும் மற்றும்
வெளிநாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பங்கேற்றனர்.
வேலைவாய்ப்புத்
திறனை மேம்படுத்தும் சமத்துவக்கல்வி என்பதை தனது மைய வாக்குறுதியாக கொண்டு
(கல்வி என்ற பொருள்படும் ஒரு ஃபிரெஞ்சு சொற்றொடர்), அதிரடி உருமாற்றம்
நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில் தனது திறனை மேம்படுத்துவதில் பேரார்வம்
மிக்க ஒவ்வொரு நபரின் பயணத்திலும் அங்கம் வகிப்பதற்கென்று மா ஃபா எட்யூட்
உருவாக்கப்பட்டுள்ளது. கற்பவர் கண்ணோட்டத்தில் பொருத்தமானவையாகவும்
மற்றும் பணிக்கு அமர்த்தப்படும் தகுதி மீது தெளிவான கூர்நோக்கம் கொண்டு
நமது நாட்டிலும் மற்றும் உலகிலும் வெவ்வேறு வயது பிரிவினர், பாலினத்தவர்
மற்றும் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மாணவராலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக
இருக்கின்ற தேவை அடிப்படையிலான செயல் திட்டங்களை தொகுத்து வழங்குவது மீது
எட்யூட் சிறப்பு கவனம் செலுத்தும்.
மா ஃபா
குழுமத்தின் இணை நிறுவனர் திருமதி. லதா ராஜன் இந்த அறிமுகம் குறித்து
பேசுகையில், “இந்த உலகிற்கு மா ஃபா எட்யூட் தளத்தை அறிமுகம் செய்திருப்பது
பெரும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. மின்-கற்றல் (E-Learning)
செயல்தளத்தில் இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கப்போகிறது. மனிதவளத்
துறையில் பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மற்றும் பணி வழங்குனர்கள்
உலகை சரியாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில், புதிய போக்குகளுக்கு
வழிவகுத்த ஊற்றுக்கண்ணாக மா ஃபா உருவெடுத்தது போலவே, நடப்பு தலைமுறையைச்
சேர்ந்த மாணவர்களுக்கு, முக்கியமாக கிராமப்புற மற்றும் சிறு
நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் நடப்புத்
தேவைகளை துல்லியமாக அறிந்துணர்ந்திருக்கின்ற எமது ஆய்வு
மதிப்பீடுகளிலிருந்து எதிர்கால தேவைகளை எதிர்கொள்ளக்கூடிய அளவில்
திறனதிகாரம் பெற்றவர்களாக அவர்களை ஆக்குவதில் மா ஃபா எட்யூட் மிகமுக்கிய
பங்காற்றும். பணியமர்த்தப்படுவதற்கான திறன் அளவில் நிலவுகின்ற இடைவெளியை
உணர்ந்திருக்கும் நிலையில், எளிய மற்றும் படித்து பயன்படுத்துகின்ற
வழிமுறையில் திறன் பயிற்சி திட்டங்களை வடிவமைப்பதற்கு தொழில்துறையைச்
சார்ந்த நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டிருப்பது மீது சிறப்பு
கவனம் செலுத்தப்படும். அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலை மற்றும் எளிய
அணுகுவசதி என்ற இச்செயல்திட்டத்தின் அம்சங்கள், தனது திறன்களை
மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும்
உகந்த அமைவிடமாக இதனை ஆக்கியிருக்கின்றன,” என்று கூறினார்.
பிராண்டின் முக்கிய வாக்குறுதிகள்:
சிறப்பான
அணுகுநிலை வசதி: ஆன்லைன் விளக்க உரைகள், பைட் அளவிலான வீடியோக்கள்,
சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளடக்கம், கற்றல் மேலாண்மை அமைப்பின் வழியாக
நேரடி செய்முறை கற்றல் ஆகிய அம்சங்களின் சரியான கலவையோடு வழங்கப்படும்
ஆன்லைன் கோர்ஸ்கள், மாணவர்களுக்கு எளிமையான, ஆனால், அதே நேரத்தில்
உயர்தரமான திறன் மேம்பாடு செயல்திட்டங்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய
வடிவத்தில் வழங்குகின்றன. தங்களது வீடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டே
இதனைப்பெற முடியும். ஜென்நெக்ஸ்ட் என்று அழைக்கப்படும் இளைய
தலைமுறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், எந்த
இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் கற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்திறனை
இச்செயல்திட்டம் அவர்களுக்கு வழங்குகிறது.
அனுபவம்
மிக்க, திறன் வாய்ந்த தொழில்துறையைச் சேர்ந்த வழிகாட்டுனர்கள்:
இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் சிறந்த தகுதிவாய்ந்த ஆசிரியர்களை
கண்டறிவது அரிதானதாகும். இதன் விளைவாக தங்களது கரியர் விருப்பத்தேர்வுகள்
மற்றும் திறன்களுக்கான தேவைகள் பற்றியும் சரியான வழிகாட்டுதல் அல்லது
மிகக்குறைவான வழிகாட்டுதல் கிடைக்கப்பெறுவதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த
மாணவர்கள் அவதியுறுகின்றனர். மா ஃபா எட்யூட் – ன் அனைத்து ஆன்லைன்
கோர்ஸ்களும், தொழில்துறையைச் சேர்ந்த திறன்மிக்க ஆசிரியர்களை
கொண்டிருக்கின்றன. அவர்கள் படித்திருக்கின்ற மற்றும் செயலாற்றுகின்ற
துறையில் பல ஆண்டுகள் நிபுணத்துவத்தை இவர்கள் கொண்டிருப்பதோடு, வலுவான
இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இவர்களுக்கு
இருக்கிறது என்பது மிக முக்கியமானது.
கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களின்
மிக நுட்பமான, சிக்கலான விஷயங்களில் மாணவர்களுக்கு இவர்கள் விளக்கமளித்து
வழிகாட்டுகின்றனர். கற்பிக்கப்படுவது மீது சிறப்பான அறிவை மாணவர்கள்
உருவாக்கிக்கொள்ள இது ஏதுவாக்குகிறது. கற்றவை மீது வலுவான புரிதல்
இருப்பதனால் சிறப்பான வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் வகையில் தங்களது
முழுமையான செயல்திறன்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும்.
குறைவான
செலவு: கிராமப்புற பகுதிகள் மற்றும் பெருநகரங்களின் புறநகர்ப்பகுதிகளில்
வசிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் பண வசதியற்ற பின்னணிகளிலிருந்து
வருபவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான ஆன்லைன் கோர்ஸ்களுக்கு
வசூலிக்கப்படும் மிகப்பெரிய அளவு கட்டணத்தொகையை இந்த மாணவர்களால் செலுத்த
இயலாது. இந்த சிரமமான காலத்தின்போது மாணவர்களுக்கு கட்டுபடியாகக்கூடியவாறு
மிக எளிய கட்டணத்தில் மா ஃபா எட்யூட் – ன் ஆன்லைன் கோர்ஸ்கள்
வழங்கப்படுகின்றன. அதிக கட்டணம் என்ற சுமை தரும் மனஅழுத்தமின்றி குறைவான
ஊதியம் பெறும் பெற்றோர்களைக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்களது திறன்
மேம்பாட்டு கற்றலைத் தொடர இத்திட்டம் அவர்களை ஏதுவாக்கும்.
பணியமர்த்தப்படுவதற்கான
திறன்: மாஃபோய் எட்யூட் வழியாக வழங்கப்படும் ஒவ்வொரு பாடத்திட்டமும்,
மாணவருக்கு பணி அமர்த்தப்படும் திறனை வழங்குவதையும் மற்றும் அதில் தற்போது
நிலவுகின்ற இடைவெளியை நிரப்புவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
மா
ஃபா எட்யூட் - ன் தலைமை அலுவலர் திருமதி. பத்மா ஜெயராமன் பேசுகையில்,
“ஆன்லைன் முறையில் பயிற்றுனரால் முன்னெடுக்கப்படும் இக்கல்வித் திட்டத்தில்
ஒரு வலுவான, மெய்நிகர் மாணவர் – ஈடுபடுத்தல் உத்தியை மா ஃபா எட்யூட்
குறிக்கோளாக கொண்டிருக்கிறது. எங்களது அனைத்து கோர்ஸ்களும் ஒரு ஆன்லைன்
அறிமுக திட்டத்தோடு தொடங்கப்படும். அசைன்மென்ட்கள், கேஸ் ஸ்டடிகள்,
மதிப்பீடுகள் மற்றும் ஒரு தினசரி தகவல் அமர்வு ஆகிய ஆன்லைன் அல்லாத
ஈடுபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறப்பான கற்றல் மேலாண்மை அமைப்புடன்
சேர்த்து, ஒரு வலுவான உள்ளடக்க திட்டமும் இணைந்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு கோர்ஸ் முடிவடையும்போதும் மாணவர்களின் பின்னறித்தகவல் மற்றும்
மீளாய்விற்காக ஒரு திறந்தநிலை கலந்தாலோசனை நிகழ்வும் நடத்தப்படும்.
பயனளிக்கும் குறிக்கோள் கொண்ட மாணவர் அனுபவத்தை உறுதிசெய்ய LMS வழியாக
கட்டமைக்கப்பட்டுள்ள நேரடி அனுபவத்துடன் நேரலையாக, தேவையின் அடிப்படையில்
வழங்கப்படும் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பாடத்திட்ட உள்ளடக்கத்தின்
அர்த்தமுள்ள கலவையை மாணவர்கள் பெறுவதற்கு இந்த கோர்ஸ் வழிவகுக்கிறது,”
என்று கூறினார்.
மா ஃபா குறித்து:
மா
ஃபா, 1992 ஆம் ஆண்டில் தொழில்முனைவோர்களான திரு. கே. பாண்டியராஜன் மற்றும்
திருமதி. ஹேமலதா ராஜன் ஆகியோரால் பணிகளுக்கு உரிய நபர்களை தேர்வு செய்யும்
ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டது. அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்குள், ஒரு
முழு அளவிலான பிசினஸ் கலந்தாலோசனை வழங்கல் பெருநிறுவனமாக மா ஃபா
வளர்ச்சியடைந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் செயல்படுகின்ற
வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்ற மா ஃபா, 400-க்கும் அதிகமான
புராஜெக்ட்களை இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. கீழ்வரும்
மூன்று முக்கிய அம்சங்கள் மீது சிறப்பு கவனம் கொண்டு முக்கிய செயல்உத்தி
மேலாண்மை, பிசினஸ் உருமாற்ற மேலாண்மை, இயக்க மேலாண்மை மற்றும் மனிதவள ஆதார
மேலாண்மை ஆகிய பிரிவுகளில் கலந்தாலோசனை சேவைகளை மா ஃபா நிறுவனம் இன்று
வழங்கிவருகிறது:
• கட்டுபடியாகக்கூடிய கட்டணத்தில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேலாண்மை தொடர்பான கலந்தாலோசனை தேவைகளை பூர்த்தி செய்வது.
• ஆழமான, செயல்பாட்டுக்குரிய நிபுணத்துவத்தை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளருக்கு மதிப்பினை வழங்குவது.
• வாடிக்கையாளரின் நலனை தலையாயதாகக் கொண்டிருப்பது.