மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ. லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் டேக்ஸ் சேவிங் ரூ. 1,200 கோடி, 1.70 லட்சம் முதலீட்டாளர்கள்..!

செல்வம் உருவாக்குதல் மற்றும் வரிச் சேமிப்பு-  இரட்டை பலன்கள்

தற்போதைய  கோவிட்-19 தொற்று (COVID-19 pandemic) பாதிப்பு நிவாரண நடவடிக்கையாக மத்திய நிதி அமைச்சகம், பங்குச் சந்தையுடன் இணைந்த சேமிப்பு திட்டத்தின் (Equity Linked Saving Schemes - ELSS) வரி சேமிப்பு முதலீடுகளின் காலக்கெடுவை 2020 மார்ச் 31 முதல் 2020 ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே, நீங்கள் .எல்.எஸ்.எஸ் (ELSS) ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவறவிட்டிருந்தால், 2019-20 நிதியாண்டிற்கான வரியைச் சேமிப்பதற்கான  இரண்டாவது  வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகையாகும். இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டின் பல்வேறு பலன்களைப் பெற உதவுகிறது. .எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள், வழங்கும் வரிச் சலுகை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும், நிறுவனப் பங்குகளில் (equity securities) முதலீடு செய்வதன் பலன்களும் இந்த ஃபண்டின் மூலம் கிடைக்கும்.

இதே போன்ற வரிச் சலுகையை வழங்குவதால்,பெரும்பாலானவர்கள் பி.பி.எஃப், என்.எஸ்.சி, எஃப்.டி போன்ற பிற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், .எல்.எஸ்.எஸ் மற்ற வரிச் சேமிப்பு திட்டங்களை விடப் பல்வேறு பலன்களைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், .எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், வரிக்கு உட்பட்ட மொத்த வருமானத்தில் ரூ. 1.50 லட்சம் கழித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது செல்வத்தை உருவாக்கி  ஒருவரின் எதிர்கால தேவைகள் / குறிக்கோள்களை நிறைவேற்ற  உதவக்கூடும். மேலும், .எல்.எஸ்.எஸ் -ன் முதலீட்டு பூட்டு (Lock-in period) காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகும். இது பங்குச் சந்தை ஏற்படும் குறுகிய ஏற்ற இறக்கம் மூலம் ஏற்படும்  இடர்ப்பாட்டைக் குறைக்கும்.

யூ.டி.. லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (டேக்ஸ் சேவிங்) {UTI Long Term Equity Fund (Tax Saving)}, இது போன்ற வரிச் சலுகையை 1999 டிசம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. இந்த ஃபண்ட், பங்குச் சந்தையுடன்  இணைந்த சேமிப்பு திட்டம்  (Equity Linked Savings Scheme -ELSS) ஆகும்.  இது, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நல்ல வருமானத்துக்கான வாய்ப்பு மற்றும் வரியைச் சேமிப்பு என இரட்டை பலன்களை வழங்குகிறது. இந்த ஃபண்ட் 2020  ஜூன் 30, நிலவரப்படி 1,200 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இதில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 1.70 லட்சத்துக்கும் அதிகமாகும்.

இதில், இடர்ப்பாட்டை (Risk) ஈடு செய்த சிறந்த வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன், நல்ல  வருமான விகிதங்கள், பணப்புழக்கம் மற்றும் சிறந்த நிர்வாகம் கொண்ட  நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.

 

இந்த ஃபண்ட், அனைத்து பிரிவு பங்குச்  சந்தை மதிப்பு (market capitalization) கொண்ட நிறுவனப் பங்குகளில் அதாவது லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படுகிறது. 2020 ஜூன் 30, நிலவரப்படி, இந்த ஃபண்டில் திரட்டப்பட்ட நிதியில் சுமார் 63%  மிகப் பெரிய நிறுவனப் பங்குகளிலும் மீதி மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட், .சி..சி.. பேங்க் லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி  லிமிடெட், .டி.சி லிமிடெட், ஆக்சிஸ் பேங்க் லிமிடெட்,  குஜராத் கேஸ் லிமிடெட், க்ராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர்  எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் மற்றும் எல்&டி இன்ஃபோடெக் லிமிடெட் ஆகிய நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு 42%-க்கும் அதிகமாக  இருக்கிறது.

யூ.டி.. லாங்க் டேர்ம்  ஈக்விட்டி  ஃபண்ட் (டேக்ஸ் சேவிங்),  லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளோடு இதர மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும், அதிக  இடர்ப்பாட்டை சந்திக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் உள்ள மூன்றாண்டு கால முதலீட்டுப் பூட்டுக் காலம் நீண்ட காலத்தில் இடர்ப்பாட்டை ஈடு செய்து நல்ல வருமானத்தை பெற்றுத் தரக்கூடும். மேலும், இந்தத் திட்டத்தில்செய்யும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80சி கீழ்  நிதி ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை பெற முடியும்.

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...