மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் : உடல் நலப் பாதுகாப்பு, நிதிப் பாதுகாப்பு


எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் : உடல் நலப் பாதுகாப்பு, நிதிப் பாதுகாப்பு PoornaSuraksha

 

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், இரட்டைப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதிப் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாகApno ki #PoornaSuraksha என்ற விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

·         அப்னோகி #பூர்ணசுரக்ஷா [‘Apno ki #PoornaSuraksha’ campaign] விளம்பரத்தில் பிரபல பின்னணி பாடகர் ஷான் [popular playback singer Shaan] மற்றும் அவரது மகன் ஸூப் [Shubh] ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த விளம்பரப் படம், உடல் நலப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு என இரண்டையுமே பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

 

சென்னை, ஜூலை 13, 2020:-

 

இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தனது புதிய காப்பீட்டுத் திட்டமான எஸ்பிஐ லைஃப் பூர்ணசுரக்ஷா  (SBI Life’s Poorna Suraksha) என்ற பெயரிலான காப்பீட்டுத் திட்டத்துக்கான விளம்பரமாக 'அப்னோ கி # பூர்ண சுராக்ஷா' (உங்கள் அன்புக்குரியவர்களின் முழு பாதுகாப்பு) என்ற தலைப்பிலான விளம்பரத்தை ஜூலை 12, 2020 வெளியிட்டுள்ளதுஇந்த காப்பீட்டுத் திட்டம் இரட்டை பாதுகாப்பு அம்சத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. தன்னியக்க மறுசீரமைப்பு அம்சத்துடன் ஒரே திட்டத்தில் ஆயுள் பாதுகாப்பு மற்றும், 36 சிக்கலான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை இது வழங்குகிறது. தற்போதைய காலங்களைக் கடந்து செல்ல இது மிகவும் தேவைப்படுகிறது.

 

இந்த விளம்பரப் படத்தில் பிரபல பின்னணி பாடகர் ஷான் தனது மகன் ஸூப் உடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். படம் அழகான தந்தை மகன் பாத்திரங்களின் தலைகீழ் உரையாடலுடன் துவங்குகிறது. ஷான் தினசரி செயல்பாடுகளைச் செய்யும்போது பல்வேறு சமயங்களில் ஸூப் குறுக்கிடுகிறார். எல்லா நேரங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள் நினைவூட்டப்படுகிறது. தற்போதைய காலத்தில் குழந்தைகள் எவ்வாறு பெற்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியைச் சொல்லித் தரும் நிபுணர்களாக மாறிவிட்டார்கள் என்பதை ஷான் வெளிப்படுத்துகிறார். இதேபோல், வாழ்க்கை முறைகளால் வரும் நோய்கள் அல்லது பிற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் பண சிக்கலில் இருந்து தன்னையும் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க ஒரு பாதுகாப்பை உருவாக்க உதவும் ஒரு நிதிப் பாதுகாப்பு அம்சத்தின் முக்கியத்துவத்தை அவர் தொடர்ந்து எடுத்துரைக்கிறார்.

 

விளம்பர வீடியோவுக்கான இணைப்பு: https://youtu.be/x6Tf7ZrHLeU

இன்று, சிக்கலான நோய்கள் இந்தியாவில் 60 சதவீத இறப்புகளுக்கு காரணமாகின்றன என்றுக்ளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்ஆய்வு தெரிவிக்கிறது.

 சிக்கலான நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழக்கமாக நீண்ட காலம் கொண்டதாகவும் அதிக செலவை ஏற்படுத்தக்கூடியவையாகவும் உள்ளன. இவை குடும்பத்தினருக்கான செலவுகளைச் சமாளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி நிதிச் சுமையை உருவாக்குகின்றன. எனவே, கடினமான காலங்களில் ஒருவரின் நிதி பாதுகாப்பு சக்தியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானது. இதன் மூலம் வாழ்க்கை முறை நோய் அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் மன திடத்துடன் அதை எதிர்கொள்ள இயலும்.

 

அப்னோகி #பூர்ணசுரக்ஷா  விளம்பரத்தை அறிமுகம் செய்து பேசிய எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின், பிராண்ட் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் தலைவர் ரவீந்திர சர்மா [Mr. Ravindra Sharma, Chief of Brand and Corporate Communication, SBI Life] கூறுகையில்,புதிய நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கவனம் நம்மில் பெரும்பாலோருக்கு இயல்பாக ஏற்பட்டுள்ளது, மக்கள் உணர்வுபூர்வமாக உடல்நலம், ஆரோக்கியம் மற்றும் பொதுவான வாழ்க்கையை அணுகி கவனத்துடன் இருக்கின்றனர். சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் உள்ள அனைவரும் மேற்கொள்ளும் இந்த உள்ளார்ந்த பாதுகாப்பு நடத்தையை ஆழ்ந்து ஆராயும்போது, ஒரு காப்பீட்டு நிறுவனமாக, நுகர்வோருக்கு பாதுகாப்பை வழங்குவதில் எங்கள் பங்கு அதற்கேற்ப அதிகரிக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். காப்பீட்டு வகைக்கு ஒரு எளிய தகவல்தொடர்பு அணுகுமுறையுடன், அனைவருக்கும் புரியும் வகையில் சுகாதார நோய் எதிர்ப்பு சக்தி என்ற கருத்தாக்கத்தின் மூலம் அதற்கு இணையாக நிதிப் பாதுகாப்பு சக்தி என்ற திட்டத்தை நாங்கள் வரைந்துள்ளோம். இதன் மூலம் ஒருவரின் உடல்நலத்தைப் போலவே ஒருவரின் நிதிப் பாதுகாப்பு சக்தியைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நுகர்வோருக்குக் கற்பித்து தெளிவாக எடுத்துரைப்போம் என்று நம்புகிறோம். எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின் பூர்ணசுரக்ஷா காப்பீட்டுத் திட்டம், ஒரு தனித்துவமான காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒரே தொகுப்பில் ஆயுள் காப்பீடு மற்றும் 36 சிக்கலான நோய்களுக்கு எதிராக நிதிக் காப்பீடு இரண்டையும் இணைத்து வழங்குகிறது. இந்த இரட்டை பாதுகாப்பு தனிநபர்களுக்கு ஒரு முழுமையான நிதிப் பாதுகாப்பு சக்தியை உருவாக்க உதவும். இது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எந்தவொரு சிக்கலையும் எதிர்த்துப் போராட ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.” என்றார்.

 

முல்லன் லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைமை படைப்பாற்றல் அதிகாரி கரிமா காண்டேல்வால் கூறுகையில்,உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு இன்று அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எல்லோரும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விழிப்புடன் இருக்கிறார்கள். நல்ல ஆரோக்கியத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம், மேலும் நமது அன்றாட நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளோம், சுய பாதுகாப்பு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இந்தச் சூழலில், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இணையாக குடும்பத்தின் நிதி பாதுகாப்பு சக்தியை அறிமுகப்படுத்த நாங்கள் விரும்பினோம். இந்தச் சூழலில் இது மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. உடல்நலப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஒரு எளிய இணையை ஏற்படுத்தி இரண்டின் தேவையை வலியுறுத்தியுள்ளோம். நடப்புச் சூழலில் இருந்து விஷயங்களை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்”. என்றார்.

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...