மோதிலால் ஆஸ்வால் மல்டி அஸெட்
ஃபண்ட்
மோதிலால் ஆஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மல்டி அஸெட் ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதில், 2020, ஜூலை 24 வரைக்கும்
விண்ணப்பிக்கலாம்.
இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி,
பங்குகள்
சர்வதேச இண்டெக்ஸ் ஃபண்ட்கள்
ஈக்விட்டி ஈ.டி.எஃப்கள்
நிதிச் சந்தை ஆவணங்கள்
கடன் பத்திரங்கள் மற்றும்
கோல்டு
ஈ.டி.எஃபளில் முதலீடு செய்யப்படுகிறது.
இது ஓப்பன் எண்டெட் வகையை சேர்ந்ததாகும்.
இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான்கள் இருக்கிறது. குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் உள்ளது.
குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.500 ஆகும்.
நுழைவுக் கட்டணம் கிடையாது.
மூன்று மாதங்களுக்கு முன் முதலீட்டை வெளியே எடுத்தால் வெளியேறும் கட்டணம் 1% இருக்கிறது.
இதில் எக்ஸ்பென்ஸ் ரேசியோ 2%.
இந்தத்
திட்டத்தில் பங்குகள், ஈ.டி.எஃப்கள், கடன் பத்திரங்கள் மற்றும் கோல்டி ஈ.டி.எஃப்கள்
என முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் ஓரளவு குறைவு.