மொத்தப் பக்கக்காட்சிகள்

2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எல்.வி.பி நிகர லாபம் ரூ.92 கோடி

 

எல்.வி.பி,  2020,  மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டு /  நிதி ஆண்டுக்கான  நிதி நிலை முடிவுகள்

 

2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் எல்.வி.பி நிகர லாபம் ரூ.92 கோடி; மூலதன திரட்டலுக்காக முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருக்கிறது

 

முக்கிய நிதி நிலை முடிவுகள்

ü 2019-20 நான்காம் காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ.70.32 கோடியை வங்கி பதிவு செய்துள்ளது. இது, 2019-20 மூன்றாம் காலாண்டில்  ரூ.19.85 கோடி இழப்பாக இருந்தது. 

ü 2019-20 நான்காம் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ. 92.86 கோடியாகும். 2019-20 மூன்றாம் காலாண்டில் நிகர இழப்பு ரூ. 334.48 கோடியாக இருந்தது

ü வங்கியின்  மொத்த வணிகம் ரூ. 38,116  கோடி

ü 31.3.2020 நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 26.63% ஆக அதிகரித்துள்ளது. இது 31.3.2019 நிலவரப்படி 25.67% ஆக இருந்தது. மற்றும் 31 டிசம்பர் 2019 நிலவரப்படி 25.88% ஆக இருந்தது

ü   மொத்த  வைப்புத் தொகையில் மொத்த கால வைப்பு  தொகை (Bulk Term Deposit) 4.86% ஆகும்.

ü  பணப்புழக்க  கவரேஜ் விகிதம் (Liquidity Coverage Ratio - LCR) 273.21%

ü  செலவு வருமான விகிதம் 71.10% Vs 110.38%

ü  வாராக் கடன் ஒதுக்கீடு விகிதம் (PCR) 71.25%.

  1. பணப்புழக்க நிலை (Liquidity position) 

வங்கியின் பணப்புழக்க நிலை எல்.சி.ஆர் உடன் சுமார் 273.21% என வசதியாக உள்ளது.  இது ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச 100% விட அதிகமாக உள்ளது. வங்கிக்கு எந்தவொரு சொத்து-பொறுப்பு பொருந்தாத தன்மை இல்லை மற்றும் வைப்புத் தொகையாளர்கள், கடன் பத்திரதாரர்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கடன் வழங்கியர்களுக்கான கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.

 

  1.  மூலதனம் திரட்டுதல் (Capital raise)

1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, வங்கியும் அதன் நிர்வாகமும் அதன் வைப்புத் தொகையாளர்கள் மற்றும் அதன் சிறுபான்மை பங்குதாரர்களின் நலன்களை மிக உயர்ந்ததாகவும், முதன்மையாகவும் நிலைநிறுத்துவதற்கு கடினமாக உழைத்து வருகிறது. கடந்த  ஐந்தாண்டுகளில், வங்கி கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி பல்வேறு  வடிவங்களில் 2,002 கோடி ரூபாய் பங்கு மூலதனத்தை திரட்டி உள்ளது.

நிதியாண்டு முடிவு

முறை

வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை

 

தொகை,  ரூ. கோடி

ஆகஸ்ட், 2014-15

பங்குதாரர்களுக்கு உரிமை பங்குகள் வெளியீடு

8,12,60,919

 

406.0

ஜனவரி, 2016-17

தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு

1,19,85,138

 

167.8

ஜனவரி, 2017-18

பங்குதாரர்களுக்கு உரிமை பங்குகள் வெளியீடு

6,39,87,006

 

780.6

மார்ச், 2018-19

தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு

6,38,31,945

 

459.6

மே, 2019-20

பங்குதாரர்களுக்கு முன்னுரிமை பங்குகள் வெளியீடு

1,68,00,000

 

188.2

மொத்தம்

 

23,78,65,008

 

2,002.2

 

தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் பரவல் இருந்தபோதிலும், எங்கள் இடைவிடாத பின்தொடர்தல், கிளிக்ஸ் கேப்பிட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (Clix Capital Services Private Limited) மற்றும் அதன் துணை நிறுவனத்தை வங்கியுடன் இணைக்க  கிளிக்ஸ் குழுமத்திடமிருந்து 12-ஜூன் 2020 தேதியிட்ட  நோக்க   கடிதத்தை (LOI) வங்கி பெற்றது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.  15 ஜூன் 2020 அன்று நடைபெற்ற வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் நோக்க   கடித செயல்படுத்தப்பட்டது, மேலும் இது ஆர்.பி.ஐ-க்கும் தெரிவிக்கப்பட்டது.

 

நோக்க கடிதத்தின்படி, கிளிக்ஸ் கேப்பிட்டல் சர்வீஸ் பிரைவேட்  லிமிடெட் மற்றும் கிளிக்ஸ் ஃபைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை வங்கியுடன் 45 நாள்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரஸ்பரம் முடிக்கப்பட்டது. மற்றும் இது ஒழுங்குமுறை மற்றும் பிற வழக்கமான ஒப்புதல்களுக்கு உட்பட்டது. இந்த 45 நாள்களுக்குப் பிறகு, வணிக ரீதியான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் பரிசீலனைக்கு வழக்கமான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுகிறது. தற்போது, உரிய செயல்முறை நடைபெற்று வருகிறது. கிளிக்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் மூலதனத்தின் மொத்த பங்குதாரர்களின் நிதி சுமார் 1,900 கோடி ரூபாயும், மொத்த சொத்துகள் சுமார் 4,600 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்தவுடன், வங்கியில் இணைக்கப்படும்.

 

எனவே, ஆலோசகர்களின் தற்போதைய விரைவு மதிப்பீடுகளின்படி, கிளிக்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை ஒன்றிணைத்த பின்னர், வங்கியின் சி..டி -1 (CET-1) தற்போதைய சொத்துகள் மற்றும் மூலதனத்தின் அடிப்படையில் தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான வரம்பு அளவை எட்டக்கூடும்.

 

மேலும், கிளிக்ஸ் குழுமத்தின் முன்மொழிவுக்கும் மேலாக வங்கியின் ஆலோசகர்களின் ஆலோசனைப்படி, சில பெரிய நீண்ட கால முதலீட்டாளர்களையும் பரஸ்பர நுகர்வுகளையும் நாங்கள் தேடுகிறோம்.முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள், அவை எப்போது செயல்படுகின்றன என்பதை பொதுதளத்தில் பகிர்வோம்.

 

  1. லாபத்தை மேம்படுத்த நடவடிக்கை (Steps taken to improve profitability)

செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (efficiency improvement plan) நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்  பலனை முதல் முழு ஆண்டில் அடைவதற்கான பாதையில் உள்ளோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

 

i)                    வைப்புநிதி திரட்டும் செலவு (Deposit cost) –  இதர போட்டி வங்கிகளுடன் ஒப்பிடக்கூடிய நிலையில்  வைப்புத்தொகையின் வட்டி விகிதத்தைக் குறைத்ததால் வைப்பு நிதி திரட்டும் செலவு கணிசமாக குறைந்திருக்கிறது.  எங்கள் கருவூலத்தின் சுறுசுறுப்பும் அணுகுமுறையும், ஒட்டுமொத்த  நிதித் திரட்டும் செலவு குறைந்துள்ளது. இது, 2019 மார்ச் மாதத்தில் 5.91 சதவிகிதமாக இருந்தது. இது 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கு 5.51 சதவிகிதமாக வெற்றிகரமாக குறைந்துள்ளது. நிதித் திரட்டும் செலவுக் குறைப்பு முதன்மையாக காரணமாக இருந்தது -

a.      காசா நிதிகளின் பங்களிப்பு அதிகரிப்பு, இது மார்ச் 31, 2019 நிலவரப்படி மொத்த வைப்புத்தொகையில் 25.67% ஆக இருந்தது. இது 2020 மார்ச் 31 நிலவரப்படி 26.63% ஆக அதிகரித்துள்ளது.

b.      மொத்த வைப்புத் தொகை (Bulk Deposit) 31 மார்ச் 2019 –ல் ரூ. 3,606 கோடியாக இருந்தது. இதில், ரூ.2,563 கோடி குறைக்கப்பட்டு 31 மார்ச் 2020 நிலவரப்படி சுமார் ரூ.1,043  கோடியாக உள்ளது.

c.       அனைத்து முதிர்வு  காலங்களிலும் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது

 

ii)                  நிறுவன செலவுகள்  (Establishment costs) –

அனைத்து பங்குதாரர்களுடனும் (stakeholders), குறிப்பாக, எங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான நீண்டகால உறவுகள் தொடரும் என நாங்கள் நம்புகிறோம்.  வங்கி தனது ஊழியர்களின் அதிக உற்பத்தித் திறன் மற்றும் வணிக உற்பத்தியில் சிறந்த செயல்திறன், மோசமான கடன்களை மீட்பது மற்றும் அதிக கட்டண வருமானம் ஆகியவற்றை அங்கீகரித்து அதனை  மேற்கொள்பவர்களுக்கு வெகுமதி அளிக்க விரும்புகிறது. இதையொட்டி, பணியாளர்களின் செயல்திறன் / வணிகம் மற்றும் லாபத்தை மேம்படுத்த நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், அதாவது -

a.      கிளைக்கு ஒரு ஊழியர்என்று பல்வேறு பணிகளை மேற்கொள்ள, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி இருக்கிறோம்.

b.      எங்கள்தன் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (VRS)  நல்ல வரவேற்பு கிடைத்தது. 69 தகுதி வாய்ந்த ஊழியர்கள் தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்தனர்.

c.       வி.ஆர்.எஸ் மற்றும் மறு-பயிற்சி ஊழியர்கள் தவிர சுமார் 350 ஊழியர்கள் தங்கள் பணியை தொடரத் தேர்வு செய்தனர்

d.      வங்கி அதன் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் ஊழியர்களுக்காக அதன் சார்பாக ஊதிய திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த  இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) வழங்கிய ஆணையையும்  திரும்ப பெற்றுள்ளது.

 

iii)                இதர செயல்பாட்டு செலவுகள்  குறைப்பு (Reduce other operating costs)

a.      நடப்பு நிதியாண்டில், பல கிளைகள் வாடகை குறைவான இடத்துக்கு மாற்றப்பப்பட்டன அல்லது வங்கி கட்டிட அளவை குறைத்தன. மேலும் பல கிளைகளில் வாடகை ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாடகை குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இணையாக, தொடர்ச்சியான செலவு  குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்ப்பட்டு வருகிறது. வங்கி பயன்பாட்டு கிளைகளிலும், அதாவது, பொறுப்புக் கிளை, சொத்து கிளை, கலப்பு பயன்பாட்டுக் கிளை (iability branch, assets branch, mixed use branch) ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியுள்ளது.

b.      ஏ.டி.எம் மையங்களின் பாதுகாப்பை மேம்படுத்தி, செயல்திறனை அடைந்துள்ளோம். ஏ.டி.எம் மையங்களில் மின் கண்காணிப்பை செயல்படுத்துவதன் மூலமாகவோ அல்லது ஆன்-சைட் ஏ.டி.எம்களுக்கான காவலாளிகள் மேம்படுத்துவதன் மூலமாகவும், அதிக பயன்பாடு இல்லாத ஏ.டி.எம் மையங்களில் இரவு நேரங்களில் திறந்திருக்கும்  நேரம் குறைப்பது மூலமும் செலவு குறைக்கப்படுகிறது.

c.       ஏ.எம்.சி (AMC) செலவுகளை குறைக்க மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

iv)                கட்டண வருமான மேம்பாடு (Improve fee income)

a.      வங்கி அதன் அனைத்து ஏ.டி.எம் மையங்களையும் ஒபெக்ஸ் மாடலுக்கு (opex model) மாற்றுகிறது, இதன் மூலம் அவை அடையாளம் காணப்பட்ட விற்பனையாளர்களால் (vendors) சொந்தமாக இயக்கப்படும்.  இந்த விற்பனையாளர்கள் குறிப்பிட்ட நேர இலக்குகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.இது கட்டண வருமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

b.      வங்கி தனது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் திட்டங்களை பயன்படுத்த அதிக முயற்சியை எடுத்து வருகிறது. ஊரடங்கு முடக்கம் தொடர்ந்தால், அத்தகைய டிஜிட்டல்  திட்டங்களின் பயன்பாடு எங்கள் கட்டண வருமானத்தை அதிகமாக்குகிறது.

c.         சரியான சந்தை நிலைமைகளில், வங்கி அதன் லாபத்தை மேம்படுத்துவதற்காக அதன் கருவூலத்தின் மூலம் வர்த்தக லாபத்தை எதிர்பார்க்கி

  1. கோவிட் - இன் போது செயல்பாடுகள் (Operatins during COVID)

வங்கி தொடர்ந்து சமூகத்திற்கு பொறுப்பாக இருப்பதுடன், சமூகத்தின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது. தற்போதைய முன் உதாரணம் இல்லாத தொற்றுநோயின் கீழ், எங்கள் அனைத்து கிளைகள், அலுவலகங்கள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் சமூக விலகல் தூரத்தை  நாங்கள் கவனமாக பின்பற்றுவதோடு ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறோம். எங்கள் வங்கி கிளைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முககவசத்தை விநியோகிறோம். ஊரடங்கு பூட்டுதல் காலத்தில் வங்கி தொடர்ந்து செயல்பட்டது. 99% கிளைகள் செயல்பட்டு வந்தன. 90% ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வந்தன மற்றும்  ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் சேனல் 99.5% க்கும் அதிகமான நேரம் செயல்பட்டது.

 

 முக்கிய நிதி நிலை முடிவுகள் (Performance Highlights):

தென் இந்தியாவை சேர்ந்த தனியார் துறை வங்கியான  லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB), 31.03.2020 உடன் முடிந்த  இறுதி காலாண்டு / நிதி ஆண்டு நிதி நிலை முடிவுகளை  அறிவித்துள்ளது

 

± வங்கியின் மொத்த வணிகம் 31/03/2020 நிலவரப்படி ரூ. 38,116  கோடியாக உள்ளதுஇது, 2019 மார்ச் 31 நிலவரப்படி ரூ. 51,235 கோடியாக இருந்தது.

± மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 31/3/2020 நிலவரப்படி 26.63% ஆக உயர்ந்தது,  இது, 31.3.2019 நிலவரப்படி 25.67% ஆக இருந்தது.

± வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் (Gross Advances), 31/03/2019 -ல் ரூ. 21,956 கோடியாகக இருந்தது. 2020 மார்ச் 31-ல் ரூ. 16,673 கோடியாக குறைந்துள்ளது. அதாவது, 24.06% குறைந்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட மொத்தக் கடன்களை குறைத்தது மற்றும் இடர்ப்பாடு குறைவான கடன்களை தேர்வு செய்தது ஆகியவை இதற்கு காரணங்களாகும்.

± மொத்த வைப்புத்தொகை (Bulk Deposits) சுமார் ரூ. 2,563 கோடி குறைந்து ரூ.1,043 கோடியாக  உள்ளது. இது, 31 மார்ச் 2019 நிலவரப்படி ரூ. 3,606 கோடியாக இருந்தது.

± வங்கியின் செயல்பாட்டு லாபம் (Operating Profit) 2020  மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 70.32 கோடியாக உள்ளது.,  2019  டிசம்பர்  31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ. 19.85 கோடியாக இருந்தது. இந்த இழப்பு 2019  மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ. 21.18 கோடியாக இருந்தது.

± செலவு, வருமானத்துக்கான விகிதம் (Cost to Income ratio),  2020  மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நான்காம் காலாண்டில்  71.10%  ஆக உள்ளது. இது, முந்தைய மூன்றாம் காலாண்டில் 110.38%  ஆக இருந்தது. செலவு, வருமானத்துக்கான விகிதம்,  2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டில்  110.72%%  ஆக உள்ளது.

± வரி ஒதுக்கீட்டிற்கு முந்தைய (before tax provision) இழப்பு 31/3/2020 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.233.15 கோடியாக இருந்தது. இது 31/12/2019 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.334.48 ஆகவும் இருந்தது.  வரிக்கு முந்தைய நிகர இழப்பு 31/3/2019 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 499.96 கோடியாகும்.

± வரிக்குப் பிந்தைய நிகர லாபம் (Net Profit after Tax) மார்ச் 31  2020 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.92.86 கோடியாக உள்ளது. 2019 டிசம்பருடன் முடிவடைந்த முந்தைய காலாண்டில் நிகர இழப்பு ரூ. 334 48  கோடியாக இருந்தது.

± மார்ச் 31, 2020 உடன் முடிந்த நிதி ஆண்டில் நிகர வட்டி லாபம் Net Interest Margin -NIM) 1.56% ஆக உள்ளது. இது, மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதி ஆண்டில் 1.65% ஆக இருந்தது.

மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy):

வங்கியின் நிகர மதிப்பு (before DTA) ரூ .996.14 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio  - CAR), பேசல் III விதிமுறைகளின் படி (Basel III guidelines) 2020  மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 1.12%  ஆக உள்ளது. இது 2019  டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 3.46%  ஆக இருந்தது. இது 2019  மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 7.72%  ஆக இருந்தது.

 

வாராகடன் (NPA)

மொத்த வாராக் கடன் (Gross NPA) 31/03/2020 –ல் 25.39% ஆக உள்ளது. இது 2019 டிசம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 23.27 %    ஆக இருந்தது. மொத்த வாராக் கடன் 31/03/2019  -ல் 15.30%  ஆக இருந்தது.  நிகர வாராக் கடன் (Net NPA) 31/03/2020 –ல்  10.04% ஆக உள்ளது.  இது 2019 டிசம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 9.81%    ஆக இருந்தது . நிகர வாராக் கடன், 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 7.49% ஆக இருந்தது.

வாராகடன் ஒதுக்கீடு கவரேஜ் விகிதம் provision coverage ratio) 71.25%   ஆக  அதிகரித்துள்ளது . (30-டிசம்பர் 2019 நிலவரப்படி 68.70% மற்றும் 31-மார்ச் 2019 நிலவரப்படி 62.08%). உடனடி திருத்த செயல் திட்டம் (Prompt Corrective Action - PCA) திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச வாராகடன் ஒதுக்கீட்டு விகிதம் (PCR) 70% - விட அதிகமாக உள்ளது

இதர மேம்பாடுகள் (Other Developments):

இந்த வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அடல் பென்ஷன்  திட்ட (Atal Pension Yojana) செயலாக்கத்துக்காக, சிறந்த செயல்திறன் கொண்ட தனியார் வங்கி விருதை  (Best Performing Private Bank Award) பெற்றிருக்கிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.), இந்தியாவின் ஓய்வூதிய ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய அரசால் நிறுவப்பட்டது  மற்றும் நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறையால் அங்கீகரிக்கப்பட்டது.

தேசிய பணப்பட்டு வாடா நிறுவனம் (NPCI) மற்றும்  எலெக்ட்ரானிஸ்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அதிகரித்து வரும் பற்று அட்டை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் (Debit and Digital transactions) அடிப்படையில் 100%-க்கும்  அதிகமாக சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் சிறந்த பத்து வங்கிகளில்  ஒன்றாக இந்த வங்கி இடம்  பிடித்துள்ளது.

 

கோவிட் -19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கியவர்களுக்கு எந்தவொரு கடன் சேவையையும் எளிதாக்க உதவும் வகையில், மார்ச் 27, 2020 முதல் மே 31, 2020 வரை மூன்று மாத கால கடன் தவணை நீடிப்பு  நிவாரணத்தை (moratorium ) அனுமதிக்க அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆர்.பி.ஐ அனுமதி அளித்தது. இது ஆகஸ்ட் 31, 2020 வரை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐயின் தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, தங்க நகைக் கடன்கள், வைப்பு நிதி கடன்கள் போன்ற கடன்களில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். இந்தக் கடன்களில் இடர்ப்பாட்டு (risk) என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வங்கி,  இந்தக் காலாண்டில் தங்கக் கடன் ரூ..190 கோடி வழங்க அனுமதித்தது. லட்சுமி கேரண்டீட் எமெர்ஜென்சி கிரெடிட் லைன் (Lakshmi Guaranteed Emergency Credit Line) என்கிற கடன், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.662 கோடிக்கு  வழங்க முன் உத்தரவாதம் அளிக்கப்பட்டு, ரூ. 143 கோடி கடன் வழங்க வங்கி  ஒப்புதல் அளித்தது.

 

வங்கியால் எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் (Steps Taken by the Bank and future Plan):-

 

1.      கடன் வழங்குவதில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து எம்.ஆர்.சி (MRC - (MSME,Rural,Commerial)) மற்றும் சில்லறை கடன்களுக்கு கவனத்தை மாற்றும் பணியில் வங்கி ஏற்கனவே இறங்கி உள்ளது. எனவே, பி.சி.ஏ காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடு எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 

2.       தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கும் வணிக மேம்பாட்டிற்கும் சேவை செய்வதற்காக டிஜிட்டல் வாடிக்கையாளர் (Digital Customer) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மற்றும் டிஜிட்டல் வழி கடன் போன்றவற்றின் விரிவான பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது . இணையம், மொபைல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வழியாக வழங்கப்படும் முழு அளவிலான பல சேனல் டிஜிட்டல் வங்கி சேவைகளை இந்த வங்கி கொண்டுள்ளது. வங்கிச் சேவையில் சிறந்தவற்றுடன் ஒப்பிடக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை இந்த வங்கி அதிகமாக பயன்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டில் புதிய கிளைகளை திறக்க வேண்டிய  தேவையை வங்கி உணரவில்லை.

3.   சாத்தியமான இடங்களில் செலவு குறைப்பு, தலைமை அலுவலகத்தில் செலவுகளை மையப்படுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. மற்றும்  இதர வருமானத்தை (other income) அதிகரிக்க  நடவடிக்கை எடுத்தது. வங்கி ஊழியர்களின் எண்ணிகையைக் குறைத்துள்ளது. நிர்வாக அலுவலக பணியாளர்களை குறைத்து அவர்களை கிளைகளில் பணி அமர்த்தி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் வேலையில் ஈடுபடுத்தி வருவதோடு, கடன் மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள விகிதத்தை குறைக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிப் பற்றி..!

இந்த வங்கிக்கு 31/3/2020 நிலவரப்படி, 566 கிளைகள், 5 விரிவாக்க கவுண்டர்கள், 19 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசத்தில் 918 .டி.எம் மையங்கள்  உள்ளன. இந்த வங்கி பல்வேறு நிதித் திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. நீண்ட காலத்தில் நிலையான மற்றும் உயர் தரமான வணிகத்தை மேற்கொள்ள இந்த வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வங்கியின் வணிகத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.

லஷ்மி விலாஸ் பேங்க்-ன், 2020 மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2020 ஜூலை 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...