சிறு கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் சிட்டி - Shriram City Union Finance Limited - Shriram City) 2019-2020 ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் 2019-2020 ம் நிதி ஆண்டிடிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் நிதி ஆண்டில் தனித்த வழங்கப்பட்ட கடன்கள் (Standalone disbursements) 5.6%, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (Assets under Management) 1.7% குறைந்துள்ளன.
அதேநேரத்தில், எம்.எஸ்.எம்.இ கடன்கன் வழங்குது தொடர்ச்சியான அடிப்படையில் 24.9% வளர்ச்சிக் கண்டிருக்கிறது. தனித்த நிகர லாபம் (Standalone Net Profit), தொடர் ஊரடங்கு காரணமாக நான்காம் காலாண்டில் 39.1% குறைந்தது
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு ஒய்.எஸ். சக்ரவர்த்தி, (Mr. Y.S. Chakravarti, MD & CEO, Shriram City Union Finance) கூறும் போது “இது மற்றொரு ஏற்ற இறக்க (rollercoaster) ஆண்டாக அமைந்தது. கோவிட் -19 பரவல், நிதியாண்டின் இறுதியில் வணிக மனநிலைகளை (business sentiments) பாதித்திருக்கிறது. அதேநேரத்தில், 2020-21 ஆம் ஆண்டில் எழும் சவால்களை சமாளிக்க ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் போதுமான அளவில் தயாராகி இருக்கிறது. எங்கள் துணை நிறுவனத்துடன் சேர்ந்து பணப்புழக்கம் மற்றும் மீண்டு வருவதில் (liquidity and recovery) நாங்கள் வலுவாக இருக்கிறோம். இவை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் வெற்றியை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன.” என்றார்.
ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் பற்றி.. (About Shriram City Union Finance Ltd. BSE: SHRMCITY, NSE: SHRIRAMCIT): ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (Shriram City Union Finance Ltd) என்பது 34 ஆண்டுகளாக இயங்கி வரும், சிறு கடன் பிரிவில் நிதிச் சேவை அளிக்கும் நிறுவனமாகும். நாட்டில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் (MSMEs) மற்றும் இரு சக்கர வாகனக் கடன் வங்கும் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இது பல்வேறு நிதித் திட்டங்களை, வர்த்தக வாகனக் கடன்கள், பயணிகள் வாகனக் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகிறது.
இவை தவிர, தங்க நகை அடமானக் கடன் மற்றும் தனிநபர் நுகர்வோர் கடன்களையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. டெபாசிட் ஏற்றுக்கொள்ளும் என்.பி.எஃப்.சி, ஸ்ரீராம் சிட்டி ரூ. 1 லட்சம் கோடி மதிப்பு கொண்ட சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமத்தை (Shriram Group) சேர்ந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக