எஸ்.பி.ஐ, ‘ அனைவருக்கும் வங்கிச் சேவை & நுண் கடன் சந்தை’தனிப் பிரிவு அறிமுகம்
·
அனைவருக்கும் வங்கிச் சேவை, வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிகங்களில் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக தனிப் பிரிவு.
·
கிட்டத்தட்ட 8,000 கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புற கிளைகள் மூலம் நுண் கடன் வழங்க வங்கி முடிவு.
·
அனைவருக்கும் வங்கிச் சேவை & நுண் கடன் தனிப் பிரிவு, முக்கியமாக விவசாயம் மற்றும் சிறு கடன் வாங்குபவர்களின் முதலீட்டுக் கடன் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது
·
புதிய தனிப் பிரிவுக்கு துணை நிர்வாக
இயங்குநர் தரவரிசை அதிகாரி தலைமை தாங்குவார்
ஒரு பெரிய மறுசீரமைப்பு முயற்சியாக, நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ (SBI), அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும்
நுண் கடனுக்கு (FI&MM) ஒரு தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது, குறிப்பாக, கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண் கடன் சந்தைகளில் (Financial Inclusion & Micro markets) பிரத்யேக கவனம் செலுத்துகிறது.
உள்நாட்டிலுள்ள குடிமக்களுக்கான வாடிக்கையாளர் அனுபவத்தை பெரிதும் மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பிரிவின் கீழ், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் நுண் / சிறு நிறுவனங்களுக்கு முக்கியமாக கடன்களை வழங்கும்.
சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளுக்கு நுண் கடன் (micro credit) உள்ளிட்ட நுண் கடன் பிரிவுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் சிறிய
நகர்ப்புறங்களில் சுமார் 8,000 கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிராமப்புற, சிறிய
நகர்ப்புற, நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் 63,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் (Customer Service Points) வங்கியின் பரந்த நெட்வொர்க் மூலம் வங்கி சேவைகள் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதும் ஒரு
நோக்கமாகும். புதிய தனிப் பிரிவு, நுண் கடன் துறைக்கு ஓர் ஊக்கத்தை வழங்கும்.