மொத்தப் பக்கக்காட்சிகள்

கோவெஸ்ட்ரோ முதன்மை செயல் அதிகாரி ஐரோப்பிய பிளாஸ்டிக் சங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்


கோவெஸ்ட்ரோ முதன்மை செயல் அதிகாரி டாக்டர் மார்கஸ் ஸ்டீல்மேண் 


பிளாஸ்டிக்ஸ்யூரோப் அமைப்பின் தலைவராக மார்கஸ் ஸ்டீல்மேண் தேர்வு

 

கோவெஸ்ட்ரோ  முதன்மை செயல் அதிகாரி ஐரோப்பிய பிளாஸ்டிக் சங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்

 

·        நிலைத்தன்மை மற்றும் மறுபயன்பாடு பொருளாதாரத்தில் சிறப்பு கவனம்

 

கோவெஸ்ட்ரோ (Covestro) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) டாக்டர் மார்கஸ் ஸ்டீல்மேண் (Dr. Markus Steilemann) ஐரோப்பாவில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் சங்கமான பிளாஸ்டிக்ஸ்யூரோப் (PlasticsEurope)-ன் புதிய தலைவராக உள்ளார்ஐம்பது வயதான இவர் புதன்கிழமை இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். பிளாஸ்டிக்ஸ்யூரோப் அமைப்பில் அடிப்படை மறுசீரமைப்பை மேற்கொண்ட டவ் கெமிக்கல் (Dow Chemicalநிறுவனத்தின் ஜாவிர் கான்ஸ்டான்டே (Javier Constante) என்பவரை தொடர்ந்து இந்தப் பதவிக்கு வருகிறார். திரு. ஸ்டீல்மேண் சங்கத்தின் பணிகளை நீடித்த தன்மை மற்றும் குறிப்பாக  மறுபயன்பாடு பொருளாதாரத்தை (circular economy) மேம்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்த விரும்புகிறார். 

"பல உலகளாவிய சவால்களைக் கருத்தில் கொண்டு, உண்மையான நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மறுபயன்பாடு பொருளாதாரத்தை புதிய வழிகாட்டும் கொள்கையாக மாற்றுவதற்கும் பிளாஸ்டிக் மிக முக்கியமானது" என்று ஸ்டீல்மேண் கூறினார்.

"இந்தச் சூழலில், புதிய தயாரிப்புகளுக்கான  ஆதாரமாக  பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கழிவுகளையும் பயன்படுத்துவது முக்கியம். எந்த சூழ்நிலையிலும் அவை கட்டுப்பாடில்லாத சூழலுக்குள் தொடர்ந்து செல்லக்கூடாது. மேலும், பிளாஸ்டிக் குறிப்பாக நிலையான பொருளாக முடிந்தவரை பல பகுதிகளில் பயன்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பா நீடித்த தன்மையை நோக்கி நகர்த்துவதற்கு இது நமது தொழிலுக்கு உதவும்.


பிளாஸ்டிக்ஸ்யூரோப் -ல் தனது புதிய பதவி தவிர கூடுதலாக, ஸ்டீல்மேண் சமீபத்தில் ஜெர்மன் வேதியியல் தொழில்கள் சங்கத்தின் (German Association of Chemical Industries -VCI)) துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவர்  யூரோப்பிய வேதியியல் தொழில்துறை கவுன்சில் (European Chemical Industry Council - Cefic) உறுப்பினராகவும், நிலையான வேதியியலுக்கான ஐரோப்பிய தொழில்நுட்ப தளமான சஸ்கெம் (SusChem) அமைப்பின் தலைவராகவும் உள்ளார். பிரஸ்ஸல்ஸ், ஃப்ராங்ஃபர்ட், லண்டன், மாட்ரிட், மிலன் மற்றும் பாரிஸ் ஆகிய மையங்களைக் கொண்ட பிளாஸ்டிக்ஸ்யூரோப், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் (27 EU member states,), நார்வே, சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் 90% க்கும் மேற்பட்ட பாலிமர் உற்பத்தி செய்யும்  சுமார் நூறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


கோவெஸ்ட்ரோ பற்றி (About Covestro):


2019
ஆம் ஆண்டில் யூரோ 12.4 பில்லியன் (EUR 12.4 billion) விற்பனையுடன், கோவெஸ்ட்ரோ உலகின் மிகப்பெரிய பாலிமர்  உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். உயர் தொழில்நுட்ப பாலிமர் பொருட்களின் உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளுக்கான புதுமையான தீர்வுகளை மேம்படுத்தும் வணிக நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது. முக்கிய பிரிவுகளாக வாகனம், கட்டுமானம், மர பதப்படுத்துதல் மற்றும் ஃபர்னிச்சர் மற்றும் மின் மற்றும் மின்னணு தொழில்கள் ஆகியவை உள்ளன. 

இதர துறைகளில் விளையாட்டு மற்றும் ஓய்வு, அழகுசாதன பொருட்கள், சுகாதாரம் மற்றும் ரசாயனத் தொழில் ஆகியவை அடங்கும். கோவெஸ்ட்ரோ சர்வதேச அளவில் 30 உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 17,200 பேரை (முழுநேர பணியாளர்களுக்கு இணையானவர்கள் கணக்கிடப்படுகிறது) வேலை செய்கிறார்கள்..
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...