மொத்தப் பக்கக்காட்சிகள்

சி.எஸ்.பி வங்கி எதிர்கால திட்டங்கள்

சி.எஸ்.பி வங்கி 
எதிர்கால திட்டங்கள் (Future Plans):
சி.எஸ்.பி வங்கி , நடப்பு நிதி ஆண்டில் 103 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதுஇந்தக் கிளைகள் வங்கியின்  உத்திகளுக்கு ஏற்ப தங்க நகைக் கடன்வேளாண் மற்றும் நுண் கடன்எம்.எஸ்.எம். மற்றும் காசா திறன் கொண்ட பகுதிகளில் திறக்கப்படும். மேலும் முதல் ஆண்டு செயல்பாட்டில் கூட 75% லாபத்துக்கு வந்துவிடும்.

முதன்மை செயல் அதிகாரியின் கருத்து:

செயல்திறன் குறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திருசி விஆர்.ராஜேந்திரன் (Mr.C VR Rajendran, Managing Director & CEO கூறும் போது,’’ 2019- 20 ஆம் ஆண்டு வங்கியின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆண்டாக உள்ளது. அந்த ஆண்டில் நாங்கள் பங்குச் சந்தையில் வங்கியின் பங்குகளை பட்டியலிடப்பட்டுள்ளோம். மேலும், பல வருட தொடர்ச்சியான இழப்புகளுக்குப் பிறகு மீண்டும் லாபத்திற்கு வந்துள்ளோம். புதிய வரி  முறையை (new tax regime) வங்கி தேர்வு செய்யாவிட்டால் லாபம் மிக அதிகமாக இருக்கும். புதிய வரி   முறையைப் பற்றி முடிவு செய்ய 2020 செப்டம்பர் வரை எங்களுக்கு நேரம் இருந்தபோதிலும்சரியான பகுப்பாய்வுக்குப் பிறகுபுதிய வரி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு பயனடைவதைக் கண்டறிந்தோம்அதன்படி 2019-20 ஆம் ஆண்டிலேயே வெற்றிபெற விரும்பினோம். 2020- 21 என்பது வங்கியின் நூற்றாண்டு ஆண்டு. 2019- 20 ஆம் ஆண்டில் எங்கள் பணி முடிவுகளில் பல நேர்மறைகளைக் காணலாம். மேலும் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான நிலையில் இருக்கிறோம்எங்கள் முக்கிய நோக்கம்  தற்போதைய சூழலில் ஒரு நிலையான சொத்து தளத்தை கவனமாக உருவாக்குவதாகும். எங்கள் நிதி தளத்தை பல்வகைப்படுத்துதல்செலவுகளைக் குறைத்தல் மற்றும் லாப வரம்புகள் மற்றும் கட்டண வருமானத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இது வங்கியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.” என்றார்.

சி.எஸ்.பி வங்கி லிமிடெட் பற்றி (About CSB Bank Limited):

இந்தியாவின் மிகப் பழமையான தனியார் துறை வங்கிகளில் நூற்றாண்டு  வரை அணிவகுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய வங்கியாக இந்த வங்கி நீண்ட காலமாக செயல்பாட்டு  வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும்தற்போது  முழுமையான வங்கிச் சேவை அளிக்கும் புதிய தனியார் துறை வங்கியாக திறமையாக செயல்பட வணிக மாதிரி உத்திகளை செயல்படுத்துவதில்  கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கேரளாவில் இந்த வங்கிக்கு வலுவான தளம் உள்ளதுதமிழகம்கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் குறிப்பிடத்தக்க  அளவில் செயல்பட்டு வருகிறது. மார்ச் 31, 2020 நிலவரப்படிவங்கியின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  1.5 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது ஏராளமான திட்டங்கள் மற்றும் சேவைகளை  வழங்கி வருகிறதுகுறிப்பாக  எஸ்.எம்.இ (SME), சில்லறை வணிகம் மற்றும் என்.ஆர். வாடிக்கையாளர்களுக்கு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா முழுக்க 411 கிளைகள் (மூன்று சேவை கிளைகள் மற்றும் மூன்று சொத்து மீட்பு கிளைகளைத் தவிரமற்றும் நாடு முழுவதும் 300 ஏ.டி.எம் மையங்கள் மற்றும் மைக்ரோ ஏ.டி.எம்கள்டெபிட் கார்டுகள்இணைய வங்கிமொபைல் வங்கி,  சேவை மையங்கள், யு.பி.ஐ போன்ற பல்வேறு மாற்று சேனல்கள் உட்பட பல சேனல்கள் மூலம் திட்டங்களையும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

சி.எஸ்.பி வங்கியின் பங்குகள், என்.எஸ். மற்றும் பி.எஸ்.இ (NSE and BSE) இரண்டு பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளதுமேலும் விவரங்களுக்குதயவுசெய்து பார்வையிடவும்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...