மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ கோவிட் 19 அவசர கடன்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ), ‘ அனைவருக்கும் வங்கிச் சேவை நுண் கடன் சந்தைதனிப் பிரிவு அறிமுகப்படுத்தி இருக்கிறது. 


இந்தத் தனிப் பிரிவை ஆரம்பித்து வைத்து, எஸ்.பி.ஐ சேர்மன் ரஜ்னிஷ் குமார் (Rajnish Kumar, Chairman, SBI) பேசும் போது,  எஸ்.பி.ஐ நாட்டின் குடிமக்களுடன், அனைத்து பிரிவுகளிலும்  துணை நிற்கிறது என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான எங்கள் தீர்வில் இன்று ஒரு முக்கியமான நாள். அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் & நுண் கடன் சந்தைக்கு தனிப் பிரிவு உருவாக்குவதற்கான முக்கிய கூறுகள், வெவ்வேறு வணிகங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவதும், கிளைகளில் வாடிக்கையாளர்களுடனான உறவுகளின் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும்.

எஸ்.பி.ஐ தனது அனைவருக்கும்  நிதிச் சேவை பயணத்தின் ஒரு பகுதியாக நாட்டின் உள் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய முயற்சியாகும்,இது.

 

அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும்  & நுண் கடன் சந்தைக்கு தனி பிரிவு, சிறு வணிகம், வேளாண் மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகளுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை வழங்கும், இதனால் அவர்கள் தங்கள் வணிகங்களை சீராக குறிப்பாக தற்போதைய நிச்சயமற்ற காலங்களில் நடத்த முடியும்.

அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும்  & நுண் கடன் சந்தைக்கு தனி பிரிவு உருவாக்கம் வங்கியிலே சிந்திக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது.” என கூறினார்.  

 

தேசிய அளவில், அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும்  & நுண் கடன் சந்தைக்கு தனி பிரிவு திரு. சஞ்சீவ்  நவ்டியால், டி.எம்.டி (Shri. Sanjeev Nautiyal, DMD)  தலைவராக இருப்பார்.

 

உள்ளூர் அளவில் சிறப்பு கவனம் மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, கடன் விநியோக முறையை வலுப்படுத்துவதற்காக அனைவருக்கும் வங்கிச் சேவை & நுண் கடன் சந்தை தனிப் பிரிவுக்கு, தலைமை பொது மேலாளர், பொது மேலாளர், பிராந்திய வணிக அலுவலகங்களில் (ஆர்.பி.) ஆர்.எம்கள் மற்றும் மாவட்ட விற்பனை மையங்களில் நான்கு அடுக்கு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்  விரைவாக சிறு கடன்கள் வழங்குவது மேம்படும். இதன் முதன்மை முக்கியத்துவம் மாவட்ட அளவிலான செயல்பாட்டை ஒருங்கிணைப்பதாகும். அனைவருக்கும் வங்கிச் சேவை & நுண் கடன் சந்தை தனிப் பிரிவு, நெட்வொர்க்கில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு நிலையான விற்பனை மற்றும் மீட்பு ஆதரவை வழங்கும்.

 

மாவட்ட விற்பனை மையங்கள் (District sales Hubs –DSHs), வாடிக்கையாளர் சேவை மையங்களின் (Customer Service Points - CSP) அணுகலை வலுப்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

 

கோவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில், தற்போது எஸ்.எம்.இ (SME) கடன் வாங்கியிருப்பவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதில் எஸ்.பி.ஐ முன்னணியில் உள்ளது. அதாவது சி.சி.ஈ.சி.எல் (பொதுவான கோவிட் 19 அவசர கடன் - Common COVID 19 Emergency Credit Line - CCECL)  மூலம் அடிப்படை  நடைமுறை மூலதன (working capital) வரம்புகளில் 10%  கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன், குறித்த கால கடன்களுக்கான (term loans) தவணைக் கட்டுதல் மற்றும் நடைமுறை மூலதன செலவை எளிதாக்குவதற்காக வழங்கப்படுகிறது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...