சி.எஸ்.பி வங்கியின் (CSB
Bank) இயக்குநர்கள் குழு, 31.03.2020 உடன் முடிவடைந்த
நிதி ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை 15.06.
2020 தேதி நடந்த கூட்டத்தில் பதிவு செய்தது.
சொத்து தரத்தில் (Asset Quality) மிகச் சிறப்பான
முன்னேற்றம்
·
மொத்த வாராகடன் (Gross NPA) 31.03.2019 நிலவரப்படி ரூ. 531 கோடியாக
இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி ரூ. 409 கோடியாக
குறைந்துள்ளது. இது 23% குறைவாகும்.
மொத்த வாராகடன் குறைவு, வழங்கப்பட்ட கடன்களில் 4.9% லிருந்து 3.5% ஆக குறைந்தது.
·
நிகர வாராகடன் (Net NPA) 31.03.2019 நிலவரப்படி ரூ.
241 கோடியாக
இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி ரூ. 217 கோடியாக குறைந்தது. இது 10% குறைவாகும். நிகர வாராகடன் குறைவு, வழங்கப்பட்ட கடன்களில் 2.3% லிருந்து 1.9% ஆக குறைந்தது.
· வாராகடன் ஓதுக்கீடு விகிதம் (Provision Coverage) 78% லிருந்து 80% ஆக மேம்பட்டுள்ளது
மூலதன தன்னிறைவு
விகிதம்
(Capital Adequacy Ratio) 31.03.2019 நிலவரப்படி
6.7 சதவிகிதமாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி 22.5 சதவிகிதமாக மேம்பட்டுள்ளது. கடன் விகிதம் (Leverage Ratio) 31.03.2019 நிலவரப்படி 6.6 சதவிகிதமாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி 8.9 சதவிகிதமாக மேம்பட்டிருக்கிறது.
வசதியான பணப்புழக்க நிலை (Comfortable Liquidity Position). பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (Liquidity Coverage Ratio) ஆர்பிஐயின் தேவையான 100% ஐ விட 245% வசதியாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பிறகு, கோவிட் காலங்களில் கூட வைப்புத்
தொகை (Deposits) ரூ.430 கோடி அதிகரித்துள்ளது.
ஒள) காசா கலவை
(CASA mix) 31.03.2020 நிலவரப்படி 29.2% ஆக உயர்ந்திருக்கிறது. இது 31.03.2019 நிலவரப்படி 27.8% ஆக இருந்தது.
வழங்கப்பட்ட
கடன் வளர்ச்சி (Advance Growth),
·
தங்க நகைக் கடன்கள் ரூ. 841 கோடி அல்லது 28.4% வளர்ச்சியைக் காட்டி இருக்கிறது.
·
எல்.சி.பி.டி (LCBD) கடன்
மூலமான வருமானம் ரூ. 367 கோடி அல்லது 46% குறைவு
·
வேளாண் மற்றும் நுண்கடன் (Agri & MFI) பிரிவு வளர்ச்சியில் சுமார்
ரூ. 160 கோடி பங்களித்துள்ளது.
·
2019- 20 ஆம் ஆண்டில் எச்சரிக்கையான கடன் வழங்கும் உத்தியை
தொடர்ந்து
வழங்கப்பட்ட கடன் ஒட்டு மொத்த வளர்ச்சி ஆண்டு கணக்கில்
7% முன்னேற்றத்தில் பதிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக