திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆரோக்யா சஞ்சீவனி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் இந்தியாவெங்கும் எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை அளிக்கிறது.
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலமை செயல் அதிகாரியுமான புஷான் மகாபத்ரா கூறினார், “ஆரோக்யா சஞ்சீவனியின் அறிமுகம் ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும், ஏனென்றால் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு அளவுகள் மற்றும் குறைந்த தவணைத் தொகை ஆகியவற்றோடு இணைந்த ஒன்றாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மருத்துவக் காப்பீட்டின் ஊடுருவலை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறை நோக்கத்தை அடைய இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். எஸ்பிஐ என்ற நம்பகமான ஒரு முத்திரை பெயர் மற்றும் எங்களது ஈடு இணையற்ற விநியோக எல்லைகள் ஆகியவற்றைக் கொண்டு 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்கள் அத்தோடு ஊரகப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை சந்தைப்படுத்தும் வலுவான நிலையை நாங்கள் பெற்றிருக்கிறோம்.இந்தத் திட்டம் எங்களது அனைத்து விநியோக அமைப்புக்களிலும் கிடைக்கப் பெறுவதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்”
அவர் மேலும் கூறினார், “இந்தக் காப்பீட்டுத் திட்டம் மூலம், அதிகமான வாடிக்கையாளர்களை காப்பீட்டு அமைப்புக்குள் கொண்டு வர முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆரோக்ய பிரீமியர், ஆரோக்ய பிளஸ் மற்றும் ஆரோக்ய டாப் அப் போன்ற எங்களது பிற மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களைப் போன்றே எஸ்பிஐ ஜெனரல் வழங்கும் ஆரோக்கிய திட்டங்களில் சஞ்சீவனியையும் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறோம். ”
கோவிட்-19 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளை ஆரோக்ய சஞ்சீவனி ஏற்கும். இது இம்மாதிரியான இடர்பாடு சமயங்களில் மருத்துவ செலவினங்களை இலகுவாக சமாளிக்க உதவும்.
இந்தக் காப்பீடுத் திட்டம் பற்றிய மேலும் அதிக தகவல்களைப் பெற, கீழ்கண்ட எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ்ஸின் வலைத் தளத்திற்கு வாடிக்கையாளர்கள் வருகை தரலாம் - https://www.sbigeneral.in/portal/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக