ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டம்
அறிமுகம்
·
இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு 6.55%* வட்டி வழங்குகிறது, பொது மக்களை விட 0.8% அதிகம்.
·
இது புதிய எஃப்டிகள் மற்றும் எஃப்டிகள் புதுப்பித்தலுக்கு கிடைக்கிறது.
மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (ICICI Bank), மூத்த குடிமக்களுக்காக சிறப்பு நிலையான வைப்பு (எஃப்.டி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. ‘ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோல்டன் இயர்ஸ் எஃப்.டி’ (ICICI Bank Golden Years FD) என்று பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், மூத்த குடிமக்களுக்கு ரூ.2 கோடி வரை வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 6.55% வட்டி விகிதம் வழங்குகிறது. இதன் முதிர்வு
காலம் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையாகும்.
‘ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோல்டன் இயர்ஸ் எஃப்.டி’, இதில், மே 20 முதல் செப்டம்பர் 30, 2020 வரை முதலீடு செய்யலாம். இதில், மூத்த குடிமக்களுக்கு 0.8% கூடுதல் வட்டி
வழங்கப்படுகிறது. மேலும், இது இந்த வங்கி இதற்கு முன் வழங்கிய வட்டியை விட 0.3% அதிகம் அளிக்கிறது. குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்கள், புதிய எஃப்.டி போடும் போது, பழைய எஃப்.டி-ஐ புதுப்பிக்கும் போது
இந்தத் திட்டத்தின் பயனைப் பெறலாம்.
இ
ந்த முன்முயற்சி குறித்து, திரு.பிரணவ் மிஸ்ரா, தலைவர் - சில்லறை பொறுப்புகள் குழு (Mr. Pranav Mishra, Head – Liabilities
Group, ICICI Bank) பேசும் போது, “ ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்-ல் நாங்கள் எப்போதும் மூத்த குடிமக்களுடனான எங்கள் உறவை மதிக்கிறோம். பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி வட்டி வருமானம் ஒரு முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதை நாங்கள் அறிவோம். இதைக் கருத்தில் கொண்டுதான், குறைந்துவரும் வட்டி விகித சூழலில் கூட, புதிய திட்டத்தின் மூலம் அவர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறோம். இந்தத் திட்டம் அவர்களின் நீண்ட கால வைப்புத்தொகையில் ஒரு நல்ல ஓய்வூதிய தொகையை உருவாக்க உதவுகிறது, இதன் மூலம் அவர்களின் வசதி மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.“