கடன் ஃபண்ட்கள் மூடல்: ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் தலைவர் சஞ்சய் சாப்ரே விரிவான விளக்கம்..!
சஞ்சய் சாப்ரே, நிறுவனத் தலைவர்,
ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் அஸெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பி. லிட்.
அன்பார்ந்த முதலீட்டாளருக்கு,
பல்வேறு மீடியா சேனல்களில் உண்மையில் நல்ல நோக்கத்திற்காக ஒளிபரப்பப்பட்ட, செய்திகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றி சில விஷயங்களை ஒவ்வொன்றாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்:
1: செய்தி: ஸ்கீம்களை மூடுவதால் பணம் நஷ்டமாகும்
உண்மை: இது உண்மையல்ல. மிகக் கடினமான இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு எங்களைத் தள்ளிய காரணங்களையும் மார்கெட் சூழ்நிலைகளையும் பற்றி நாங்கள் தெரிவித்திருந்தோம். மேலும் எங்கள் முதலீட்டாளர்களின் விழுமியங்களைக் காக்கவே இந்த முடிவும் எடுக்கப்பட்டது. ஸ்கீம்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ளவற்றை லிக்விடேட் செய்யும் திறனானது மார்கெட் நிலைகள், ரிசீவ் கூப்பன் பேமெண்ட்கள் மற்றும் ஷெட்யூல்டு மெச்சூரிட்டிகள் ஆகியவற்றைப் பொறுத்தது என்பதால், SEBI (மியூச்சுவல் ஃபண்ட்) கட்டுப்பாடுகள் 1996-இன் விதி 41 (2)(b)-க்கு இணங்க, முதலீட்டாளர்களுக்கு ட்ரஸ்ட்டீக்கள் கூடுமானவரை முன்கூட்டியே பணம் வழங்கத் தொடங்கிவிடுவார்கள்.
2: செய்தி: இந்த ஸ்கீம்கள் ரிஸ்க் அதிகமுள்ள ரேட்டிங் இல்லாத பேப்பர்களில் முதலீடு செய்துள்ளன
உண்மை: பல்வேறு கிரெடிட் ரேட்டிங் பிரிவுகளிலும் உள்ள இன்வெஸ்ட்மென்ட் கிரேடு பேப்பர்களில் (உதாரணத்திற்கு AAA முதல் A ரேட்டிங் கொண்ட பேப்பர்கள் வரை) சீராக முதலீடு செய்யும் உத்தியையே இந்த ஸ்கீம்கள் பின்பற்றின. இந்த உத்தியே சமீப காலம் வரை ஸ்கீம்களுக்கும் அவற்றின் முதலீட்டாளர்களுக்கும் செயல்பட்டு வந்தது. கிரெடிட் மார்கெட்களுக்கு மிகுந்த பிரச்னை மிக்க காலகட்டம் எனக் கருதப்படுகிற கடந்த 6 மாத காலத்திலும் கூட, இந்த ஸ்கீம்கள் குறிப்பிடத்தக்க அளவு பணப்புழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, போர்ட்ஃபோலியோவில் உள்ளவற்றில் இருந்து ஸ்கீம்களால் குறிப்பிடத்தக்க அளவு பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, அவற்றில் பெரும்பாலானாவை AA மற்றும் அதற்கும் குறைவான ரேட்டிங் கொண்ட பேப்பர்களில் இருந்து கிடைத்தவை.
3: செய்தி: லிக்விடிட்டி பிரச்னையானது Covid-19 பெருந்தொற்றுடன் சம்பந்தப்பட்டது அல்ல
உண்மை: இந்த ஸ்கீம்கள் கிரெடிட் ரேட்டிங் பிரிவுகள் பலவற்றில் சீராக முதலீடு செய்யும் உத்தியையே பின்பற்றியது. பல ஆண்டுகளாக பல்வேறு மார்கெட் சைக்கிள்களில் இவ்வாறே செய்யப்பட்டு வந்தது. இந்த ஸ்கீம்கள் பல்வேறு சைக்கிள்களையும் சமாளித்து தினசரி லிக்விடிட்டியை உருவாக்க முடிந்தது. இவற்றில் பல ஸ்கீம்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற உத்தியையே பயன்படுத்தி வந்துள்ளன. தற்போதைய Covid-19 பெருந்தொற்று மிகப் பெரிய மார்கெட் மாற்றத்தை உருவாக்கியுள்ளது, குறிப்பாக இந்த ஸ்கீம்கள் செய்திருக்கும் முதலீடுகளின் வகைகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ரிஸ்க் தயார்நிலை இல்லாமல் போனதால் கார்ப்பரேட் பாண்ட்களுக்கான அளவுகளையும் லிக்விடிட்டியையும் குறைத்தது பெரிய அளவிலான மார்கெட் சிக்கலாகும். ஸ்கீம்கள் தினசரி ரிடெம்ப்ஷன்களை சமாளிக்க முடியாமல் போனது, COVID-19 பெருந்தொற்று உருவாக்கிய மார்கெட் சூழ்நிலை மற்றும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் நேரடி விளைவே ஆகும்.
4: செய்தி: ஸ்கீம்களால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை நீண்ட காலம் திருப்பி வழங்க முடியாது
உண்மை: ஒவ்வொரு ஸ்கீமுக்கும் மெச்சூரிட்டி புரொஃபைல் ஒன்று உள்ளது, பொதுவாக குறுகிய கால ஸ்கீம்களால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வேகமாக வழங்க முடியும். ஸ்கீம்கள் வழக்கமான கூப்பன் பேமெண்ட்களையும் மெச்சூரிட்டிகளையும் தொடர்ந்து பெறும். மேலும், போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து அசெட்களையும் பணமாக்குவதற்கான எல்லா வழிகளையும் ஸ்கீம்கள் கண்டறிந்து முயற்சிக்கும். அதுவும் முதலீட்டாளர்களுக்கு கூடிய விரைவில் பணம் வழங்குவதற்காக, துரித விற்பனை முறைக்கு மாறாமலே இதைச் செய்யும். ஸ்கீம்களில் உள்ள செக்யூரிட்டிகளின் முதிர்வுத் தேதிக்கு முன்பாகவே பணம் வழங்குவதே ஸ்கீம்களின் முக்கியமான முயற்சியாக இருக்கும்.
5: செய்தி: பிற ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் ஸ்கீம்களும் விரைவில் நிறுத்தப்படலாம் என்பதால் அவற்றிலிருந்து பணத்தை ரிடீம் செய்துகொள்ள வேண்டும்.
உண்மை: பலன்-சார்ந்த ஆறு ஸ்கீம்களின் தொகுப்பை நிறுத்தும் முடிவானது, மிகவும் கடினமான ஒன்று. அதுவும் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவே எடுக்கப்பட்டது. இப்படி சூழ்நிலை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது எங்கள் முதலீட்டாளர்களின் லிக்விடிட்டி திறனை பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்கள் யூனிட்-ஹோல்டர்களின் விழுமியத்தைக் காக்க அந்த முடிவு அவசியமாக இருந்தது.
இன்னும் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ரிடெம்ப்ஷன் செய்யக் கூடிய எங்கள் பிற ஃபிக்ஸட் இன்கம் ஸ்கீம்கள், கவர்ன்மென்ட் செக்யூரிட்டிகள், AAA ரேட்டிங் பெற்ற பாண்ட்கள் மற்றும் கேஷ் ஈக்வலன்ட்கள் போன்ற அதிக லிக்விடிட்டி திறன் கொண்ட செக்யூரிட்டிகளிலேயே முதலீடு செய்கின்றன. இந்த போர்ட்ஃபோலியோக்கள் ரிடெம்ப்ஷன்களை சமாளிக்கக் கூடிய அளவு தேவையான லிக்விட்டி திறனை வழங்குகின்றன. வர வாய்ப்புள்ள ரிடெம்ப்ஷன் கோரிக்கைகளை நிறைவுசெய்யப் போதுமான அளவு லிக்விடிட்டியை இந்த போர்ட்ஃபோலியோக்களில் ஏற்கெனவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
எங்கள் ஈக்விட்டி ஸ்கீம்கள் பாதிக்கப்படாமலே உள்ளன. மேலும் சென்னையிலுள்ள எங்கள் அனுபவமிக்க, நீண்ட காலம் பணியாற்றி வரும் குழுவே, முதலீட்டு வழிமுறைகள் மற்றும் நிதி மேலாண்மைத் தத்துவத்திற்கு இணங்க இவற்றை நிர்வகிக்கின்றன.
6: செய்தி: ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாவில் தனது வணிகத்தை மூடுகிறது
உண்மை: ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் பல காலமாக இந்தியாவில் வணிகம் செய்துவருகிறது, மேலும் மிகப் பொறுமை மிக்க முதலீட்டாளராகவும் திகழ்கிறது. இந்திய வரலாற்றில் 25க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உழைத்து நீண்டகால வணிக உறவுகளைக் கட்டமைத்துள்ளது. எங்கள் உலகளாவிய பணியாளர்களில் 33% இந்தியர்கள் என்பதும் இதையே காட்டுகிறது. எங்கள் உலகளாவிய CEO ஜென்னி ஜான்சன் கூறியது போல, ஃபிராங்க்ளின் டெம்பிள்டனின் இந்தியா குறித்த உறுதிப்பாடு மாற்றமில்லாமல் தொடர்கிறது. எங்கள் பிராண்டின் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்காக, நாங்கள் நிறுத்திய ஸ்கீம்களில் முதலீடு செய்தவர்களுக்கு எல்லாம் கூடுமான விரைவில் அவர்களது பணத்தைத் திருப்பி வழங்கத் தேவையான எல்லாவற்றையும் அர்ப்பணிப்புடன் செய்துவருகிறோம்.
நாங்கள் உருவாக்க உதவிய பிரிவின் கீழ் வரும் ஆறு ஸ்கீம்களை மூடுவது என்ற முடிவு மிக மிகக் கடினமானதாக இருந்தது. மேலும் தற்போதைய எதிர்பாராத சவாலான சூழ்நிலையில் எங்கள் முதலீட்டாளர்களின் விழுமியத்தைக் காக்க அதுவே ஒரே வழியாக இருந்தது.
ஃபிராங்க்ளின் டெம்பிள்டனில் மூடப்பட்ட ஸ்கீம்களிலோ தொடர்ந்து சப்ஸ்ரிப்ஷன் மற்றும் ரிடெம்ப்ஷன்களுடன் செயல்படக்கூடிய பிற ஸ்கீம்களிலோ நீங்கள் செய்துள்ள முதலீடுகள் பற்றிய ஒரு ஆறுதல் உணர்வை இந்தக் கடிதம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் அவசரமான, முக்கியமான கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக உங்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிப்பதில் உறுதியோடு இருக்கிறேன்.
மேலும் உதவி தேவைப்பட்டால், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை 1-800-258-4255 அல்லது 1-800-425-4255 எனும் எண்களில் உதவி மையத்தை தாராளமாகத் தொடர்புகொள்ளலாம். service@franklintempleton.com எனும் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.
------------------
பொறுப்புத்துறப்பு
இந்த செய்தியில் உள்ள தகவல்கள், எல்லா உண்மைகளின் முழுமையான விளக்கம் அல்ல. மேலும் இவை தகவலுக்காக மட்டுமே. இந்த செய்தியில் "செய்யும்", "நடக்கும்", "எதிர்பார்க்கலாம்", "நடக்கலாம்" "நம்புகிறோம்" என்பது போன்ற சொற்களைக் கொண்டுள்ள கூற்றுகள்/பரிந்துரைகள் "நம்புகிறோம் என்பதை உணர்த்தும் கூற்றுகளே". நம்புகிறோம் என்பதை உணர்த்தும் அத்தகைய கூற்றுகள் தெரிவிக்கும் தகவல்கள், உண்மையான நடப்புகளில் இருந்து பெருமளவில் மாறக்கூடும். எங்கள் சேவை மற்றும்/அல்லது முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மார்கெட் ரிஸ்க்கால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு, இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் நிலவும் பொதுவான பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள் போன்றவை (ஆனால் இவை மட்டுமே அல்ல) குறித்த எங்கள் எதிர்பார்ப்புகளின் நிச்சயமற்ற தன்மை அல்லது ரிஸ்க் இதற்குக் காரணமாகலாம். இந்த செய்தி தெரிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு செக்யூரிட்டியை பாதிக்கக்கூடிய மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். இந்த ஸ்கீம்களில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு, அசல் திரும்பிக் கிடைப்பது அல்லது வருமானம் கிடைப்பது பற்றிய உத்தரவாதம் அல்லது உறுதியளிப்பு எதையும் AMC, ட்ரஸ்ட்டீ, அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் அல்லது ஹோல்டிங் நிறுவனங்கள் எவரும் வழங்கவில்லை. முதலீடு குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு ஸ்கீம் தகவல் ஆவணத்தை முழுமையாகவும் கவனமாகவும் படிக்கவும். மேலும் தகவலுக்கு http://www.franklintempletonindia.com எனும் எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்.
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக