மொத்தப் பக்கக்காட்சிகள்

மாஸ்க் அணிவதால் சுவாசப் பிரச்னை ஏற்படுமா? சிறப்பு மருத்துவர் விளக்கம்


மாஸ்க்  அணிவதால் சுவாசப் பிரச்னை ஏற்படுமா? சிறப்பு மருத்துவர் விளக்கம்

கோவை அரசு மருத்துவமனை டி.பி. மற்றும் நுரையீரல் நோய்( Pulmonologist)  சிறப்பு மருத்துவர் வாணி

நாம் அணியும் ஆடையைப் போல், இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. மாஸ்க் அணிவதால், சுவாசப்பிரச்னை ஏற்படும் என்று, சில 'அறிவுஜீவிகள்' புரளி கிளப்பி விடுகின்றனர்..


இதை நம்பும் சிலர், மாஸ்க் அணிவதை தவிர்ப்பதாக, பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்க் அணிவதால் சுவாசப்பிரச்னையோ, ஆக்சிஜன் குறைவோ ஏற்படாது. கெரோனா வைரஸ் உட்பட, எந்த நோய் கிருமியும், பரவ வாய்ப்பில்லை.

அறையில் தனியாக இருந்தாலோ, .சி., காரில் தனியாக பயணித்தாலோ, மாஸ்க் அணிய வேண்டியதில்லை.

இருவர் பயணித்தால், கட்டாயம் இருவரும் மாஸ்க் அணிய வேண்டும்.. .சி.,அறைக்கும் இது பொருந்தும்.

துணி மாஸ்க்குகளை பயன்படுத்துபவர்கள், நான்கு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன் பின் துவைத்து, பயன்படுத்த வேண்டும்..

திரும்ப, திரும்ப ஒரே மாஸ்க்கை பயன்படுத்துவதால், நோய் தொற்று அதிகரிக்கும். 

மாஸ்க்கின் வெளிப்பகுதியில் மட்டுமே, கைகளால் தொட்டு அப்புறப்படுத்த வேண்டும். உட்பகுதியில் தொடக்கூடாது.  

ஆக்சிஜன் .3 மைக்ரான் அளவுக்கும் குறைவானது. ஆனால் நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமி .3 மைக்ரான் அளவை காட்டிலும் அதிகமானது. அதனால் மாஸ்க் நம் உடலினுள், கிருமிகளை அனுமதிக்காது. ஆக்சிஜனை அனுமதிக்கும். 
மாஸ்க் அணிவதால், நாசித்துவாரங்களின் வழியாக, உள்ளே இழுக்கும் காற்றின் விசை (ப்ளோ ரேட்) குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், நாம் பேசும்போதும், நுகரும்போதும் அந்த விசை அளவு சரிக்கட்டப்படும். 
என் 95' மாஸ்க்கில், தரமான சான்றளிக்கப்பட்ட சுவாச கருவி (ரெஸ்பிரேட்டரி) பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இதை அணிபவர் வெளியேற்றும் சுவாசக்காற்று, அருகே இருப்பவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.   பிற மாஸ்க்குகளால், நோய்க்கிருமி உடலின் உள்ளேயும் செல்லாது; வெளியேவும் வராது. நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால், ரத்தத்தில் ஆக்சிஜன் குறைய வாய்ப்புகள் இல்லை.  

மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவோ, அழுத்தமோ குறையாது. அப்படியானால் நாள் முழுக்க மாஸ்க் அணிந்திருக்கும் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமே.

நன்றி: தினமலர்                     


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...