மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆப்பிள், கூகிள், டெஸ்லா, அமேசான், மெர்சிடிஸ் பென்ஸ் சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு...!


அப்ஸ்டாக்ஸ், 25 நாடுகளில் 60+  பங்குச் சந்தைகளுடன் உலகளாவிய முதலீட்டு சேவை அறிமுகம்
·         சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும்  இந்தியப் பங்கு  தரகு நிறுவனங்களில் ஒன்று

·         அமெரிக்க பங்குகளில் ஜீரோ கமிஷன் வர்த்தகத்தை வழங்குகிறது
ஆர்.கே.எஸ்.வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RKSV Securities India Private Limited), {பதிவுசெய்யப்பட்ட பிராண்ட் அப்ஸ்டாக்ஸ் (Upstox)} இந்தியாவின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பங்கு தரகு (broking) நிறுவனங்களில் ஒன்றாகும். இது, ஒரு புதிய உலகளாவிய முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 25 நாடுகளில் 60க்கும் மேற்பட்ட பங்குச் சந்தைகளில் ஒரே தளத்தில் (platform) முதலீடு செய்யும் வசதியை இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதுபோன்ற பரந்த அளவிலான பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் சில இந்திய தரகு நிறுவனங்களில் ஒன்றாக அப்ஸ்டாக்ஸ் உருவாகி இருக்கிறது. தற்போது, உலகளாவிய பங்குச் சந்தைகள் 90 டிரில்லியன் டாலர் மதிப்புடையது. மேலும் உலகம் முழுவதும் 60 முக்கிய பங்குச் சந்தைகள் உள்ளன. இப்போது, அப்ஸ்டாக்ஸ்-ன் புதிய உலகளாவிய முதலீட்டு தளத்துடன், இந்திய முதலீட்டாளர்கள் நாஸ்டாக், டவ் ஜோன்ஸ் அல்லது ஹேங் செங் (NASDAQ, Dow Jones or the Hang Seng) போன்ற எந்தவொரு பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம்.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்களான ஆப்பிள், கூகிள், டெஸ்லா, அமேசான், மெர்சிடிஸ் பென்ஸ் அல்லது டீவா  (Apple, Google, Tesla, Amazon, Mercedes-Benz, or Teva) போன்றவற்றின் பங்குகளில் அவர்கள் முதலீடு செய்ய முடியும். கூடுதலாக, முதலீட்டாளர்கள் பூஜ்ஜிய கமிஷனில் அமெரிக்காவின் எந்தப்  பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யலாம்.
மேலும், முதலீட்டாளர்கள் இந்தச் சர்வதேச பங்குகளின் முழு பங்குகளையும் வாங்க தேவையில்லை. பகுதியளவு முதலீட்டைப் பயன்படுத்தி, அவர்கள் ஒரு பங்கின் ஒரு சிறிய பகுதியாகக் கூட முதலீடு செய்யலாம், மேலும் இனி வரையறுக்கப்பட்ட முதலீட்டு  கட்டுப்பாடு இல்லை. இது முதலீட்டாளர்கள் தங்கள் இடர்ப்பாட்டை (risk) பரவலாக்கவும், அவர்களின் முதலீட்டுக் கலவையை (portfolio) பல்வகைப்படுத்தவும், வெவ்வேறு நாடுகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.
அப்ஸ்டாக்ஸ்-ன்  இணை நிறுவனர் ரவி குமார், (Ravi Kumar, Co-Founder of Upstox), கூறும் போது,“ பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஆதாரங்களை ஒதுக்குவது முதலீட்டாளர்களின் நீண்டகால முதலீட்டு நோக்கங்களை அடைய உதவுவதில் அர்த்தமுள்ள பங்கைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்திய முதலீட்டாளர்களுக்கு பங்கு வர்த்தகத்தை எளிதாக அணுக அனுமதிக்கும் எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அப்ஸ்டாக்ஸ் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Upstox Global Investments) ஆரம்பித்திருப்பதாகும். இந்தச் சேவை உலகளாவிய முதலீட்டிற்கு பரந்த அளவில் குறிப்பிடத்தக்க மற்றும் கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகிறது."
அப்ஸ்டாக்ஸ்- இணை நிறுவனர் ரவி குமார்,

இந்திய
முதலீட்டாளர்கள் பொதுவாக இந்திய நிறுவனப் பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளில் (mutual funds) முதலீடு செய்கிறார்கள். இதன் அர்த்தம் அவர்கள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் லாபத்தை இழக்கிறார்கள் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு அதிகமாக உள்ளனர். சர்வதேச நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை சேர்க்கிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...