கொரோனா வைரஸ் பாதிப்பு ; யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் முதிர்வு காலம் தள்ளி வைப்பு- ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதிரடி
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை அதிக வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
இந்த நிலையில், பங்குச் சந்தை
சார்ந்த யூலிப் (ULIP) இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் யூனிட் மதிப்பு அதிகமாக வீழ்ச்சிக் கண்டுள்ளளது.
இந்த நிலையில், இப்போது முதிர்வடையும் யூலிப் பாலிசிகளின் முதிர்வை 2020 மே 31 வரை
தள்ளி வைக்க காப்பீட்டு நிறுவனங்களை இந்திய காப்பீட்டுத் துறையின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களின்
விருப்பத்தை எஜென்ட்கள், தரகர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் பெற வேண்டும்.
பாலிசிதாரரும் விழிப்பாக இருந்து, சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது அதிக லாபத்துடன் வெளியே வர முயற்சி செய்வது அவசியம்.