உலகளாவிய தொற்றுநோயை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு நிதிச் சேவை மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்வந்து இந்தப் பேரிடரை கடக்க மக்களுக்கு உதவ பொறுப்பு ஏற்றிருக்கின்றன.
மிகப் பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), தொடர்ந்து கடன் வழங்கும் செயல்முறையை உறுதி செய்துள்ளது.
சுய உதவிக் குழுக்கள்- கோவிட்19 : ரூ1 லட்சம் கடன் உதவி
சுய உதவிக்குழுக்கள்- கோவிட்19 (SHGs-COVID19) திட்டத்தின் கூடுதல் உத்தரவாதத்தின் கீழ், தற்போதுள்ள சுய உதவிக் குழுகளுக்கு ரொக்க கடன் / ஓவர் டிராஃப்ட் / கால கடன் / தேவை கடன் வடிவில் வங்கி கடன் உதவி வழங்கும். குறைந்தபட்ச கடன் தொகை, ஒரு சுய உதவிக்குழுவிற்கு 30,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச கடன் தொகை, ஒரு சுய உதவிக் குழுவிற்கு 1 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்தக் கடனை 24 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் திருப்பிச் செலுத்தும் காலம், மாதம் / காலாண்டு அடிப்படையில் இருக்கும். மேலும், கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதம் கழித்து கடனை செலுத்த தொடங்கினால் (moratorium) போதும்.
வைப்பு வட்டி விகிதங்களையும் பேங்க் ஆப் பரோடா குறைத்துள்ளது. ரூ. 2 கோடிக்கு கீழே உள்ள என்.ஆர்.ஓ, என்.ஆர்.இ உள்ளிட்ட வைப்புத்தொகைக்கு வட்டியை இது 2020, ஏப்ரல். 9 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ரோனா வைரஸ்-க்கு எதிரான போராட்டத்திற்காக பி.எம் கேர்ஸ் (PM-CARES) நிதிக்காக வங்கியின் ஊழியர்கள் சார்பாக 20 கோடி ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றாக, நாம் வெல்வோம்
கேள்விப்படாத, இதற்கு முன்னர் காணப்படாத ஒரு சூழ்நிலைக்கு எதிரான போரில் உலகம் ஒன்றிணைந்துள்ளது. நிதி சுற்றுச்சூழலை தளர்த்துவது மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கடன் உதவியை வழங்குவதற்கான பொறுப்பை வங்கிகள் ஏற்க வேண்டும். முழு நிதித் துறையும் ‘புதிய இயல்பு’நிலைக்கு தயாராகி வருவதால், இந்திய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிப்பதில் பல்வேறு முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் விரிவான நிதி உதவியை வழங்க பேங்க் ஆப் பரோடா உறுதிபூண்டிருக்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக