கோவிட்
– 19 பரவலுக்கு இடையே, சென்னையின் குடியிருப்பு விலை 6.7% வளர்ச்சி, மேஜிக்பிரிக்ஸ்
பிராப்இண்டெக்ஸ் முதல்
காலாண்டு, 2020
மூலம் வெளிப்பாடு
-
அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் மைக்ரோ சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு
-
கட்டுமானம்
நடந்துக்கொண்டிருப்பது மற்றும் உடனடியாக குடியேறக் கூடிய வீடுகளின் விலை சதுர அடி ரூ.
7,000 மற்றும் அதற்கு அதிகமாக உள்ளது.
கோவிட் -19 பரவலுக்கு இடையே, சென்னையின் குடியிருப்பு விலைகள், 2020 –ம் ஆண்டின் முதல் காலாண்டில், முந்தைய ஆண்டின்
இதே காலாண்டோடு ஒப்பிடும் போது 6.7% அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மேம்பட்ட போக்குவரத்து இணைப்பு
ஆகியவற்றால் இந்த வளர்ச்சி தூண்டப்பட்டிருகிறது. இந்த விவரம், மேஜிக்பிரிக்ஸ்’
பிராப்இண்டெக்ஸ் (Magicbricks’
PropIndex) (முதல் காலாண்டு, 2020) –ன் சமீபத்திய பதிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
கோவிட் -19 (COVID-19) இன் உலகளாவிய பரவல் மற்றும் அதன் தொடர்ச்சியான ஊரடங்கு ஆகியவை இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையை பாதித்தாலும், சென்னையின் குடியிருப்பு ரியல் எஸ்டேட் தேவை 2020 ஜனவரி-பிப்ரவரி-மார்ச் காலத்தில் 6.4% உயர்ந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில், சென்னை-பெங்களூரு உள்கட்டமைப்பு பாதை (Chennai-Bengaluru
infrastructure corridor) மற்றும் புற சாலை வழியாக இணைப்புகளை மேம்படுத்துவது குறிப்பாக புறநகர்களில் குடியிருப்பு சந்தையை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்கிறது.
கட்டுமானம் நடந்துக்கொண்டிருப்பது (Under
Construction -UC)) மற்றும் உடனடியாக குடியேறக் கூடிய (Ready-to-Move
- RM)) வீடு ஆகிய
இரு சொத்து பிரிவுகளிலும் அனைத்து விலை பிரிவுகளிலும் 2020 முதல் காலாண்டில் தேவை அதிகரித்துள்ளது. பெரிய அளவிலான இந்தியப் பொருளாதார மந்த நிலையின் பயத்தையும் தாண்டி இந்த விலை
அதிகரிப்பு நடந்துள்ளது. கட்டுமானம் நடந்து வரும் வீடுகளின் விலை 2% அதிகரித்துள்ளது.
சென்னை நகரில் பிரீமியம் பிரிவுக்கான (premium
segment) தேவை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. சதுர அடிக்கு ரூ.9,000க்கும் அதிகமான விலையுள்ள சொத்துகளுக்கான நுகர்வோர் தேடல்கள் 20%
அதிகரித்து காணப்பட்டிருக்கிறது.
பிராப்இண்டெக்ஸ் குறித்து கருத்து தெரிவிக்கையில், மேஜிக்பிரிக்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுதிர் பாய்
( PropIndex, Sudhir Pai, CEO, Magicbricks), கூறும் போது, “கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சொத்து சந்தையில் இதன் நீண்டகால தாக்கம் நிச்சயமற்றதாக இருக்கிறது. இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், இது வீட்டு வாங்குபவர்களின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை என்று தெரிகிறது. குடியேற தயாராக இருக்கும் வீடுகள் பிரிவில் 80% தேடல்கள் நடக்கிறது. மீதி கட்டப்பட்டு வரும் வீடுகளாக இருப்பதாக எங்கள் தரவு குறிப்பிடுகிறது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக