மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை அண்ணா நகர், அம்பத்தூர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவை அதிகரிக்க என்ன காரணங்கள்?


 சென்னையின்  குடியிருப்பு விலைகள், 2020 –ம் ஆண்டின் முதல் காலாண்டில், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும் போது 6.7% அதிகரித்துள்ளது. 

உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மேம்பட்ட போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி தூண்டப்பட்டிருகிறது. இந்த விவரம்,  மேஜிக்பிரிக்ஸ்’ பிராப்இண்டெக்ஸ் (Magicbricks’ PropIndex) (முதல் காலாண்டு, 2020) –ன் சமீபத்திய பதிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. 


பிராப்இண்டெக்ஸ் (PropIndex) சென்னையில், ஓ.எம்.ஆர் மைக்ரோ மார்க்கெட் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதாகவும், வாங்குபவர்களால் அதிகம் விரும்பப்படுவதாகவும் குறிப்பிடுகிறது. 

தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காணப்படுகிறது.



அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் மைக்ரோ சந்தைகளில்  2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேவை கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த இடங்களின் எதிர்கால வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் மெட்ரோ ரெயில் பாதைகளை வாங்குவோர் எதிர்பார்த்ததால் இந்தத் தேவை உயர்ந்துள்ளது.

மேஜிக்பிரிக்ஸ் பிராப்இண்டெக்ஸின்படி, குடியிருப்பு பிரிவு முதன்மையாக மூன்று முக்கியமான காரணிகளால் இயக்கப்படுகிறது:

·        சிறப்பான மெட்ரோ ரெயில் சேவை இணைப்பு மவுண்ட் பூந்தமல்லி சாலையை ஐடி நிறுவனங்களுக்கு ஓ.எம்.ஆர் 2.0 ஆக மாற்றுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரிக்கும்.

·        இரண்டு படுக்கை அறை (2 BHK) வீடுகளுக்கான தேவை 2020 முதல் காலாண்டில் அதிகமாக இருந்துள்ளது. இந்தப் பிரிவில் நகரத்தின்  தேடல்கள் 56% ஆக இருந்தன.
·      
  வெளிப்புற வளைய சாலை (Outer ring road) நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை நீட்டிப்பு, மற்றும் பூஞ்சேரி சந்திப்பை எண்ணூர் துறைமுகத்துடன் இணைக்கும் புற வளைய சாலை (peripheral ring road) ஆகியவை 2020 ஆம் ஆண்டில் நிறைவடையக்கூடும்

அதேநேரத்தில், கோவிட்-19  பரவலிருந்தும், அதன் பின்னர் வரும்  நாடு தழுவிய ஊரடங்கிலிருந்தும் ரியல் எஸ்டேட் சந்தை மீண்டு வருவதால் இந்தக் காரணிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகள் குடியிருப்புப் பிரிவுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று மேஜிக்பிரிக்ஸ் ஆராய்ச்சி கணித்திருக்கிறது. நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள பெரும்பாலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் மத்திய அரசின் ரூ.250 பில்லியன் நிதியின் உதவியுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், முக்கிய மெட்ரோ  ரெயில் பாதைகளை நிறைவு செய்வது, புற நகர் மற்றும் வணிக பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை எளிதாக்கி,  ரியல் எஸ்டேட்-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கடைசியாக, கோவிட் -19 நிலைமை சீராகி வந்தவுடன், இந்தச் சோதனை நேரங்களைத் தாங்கி, மேலும் வலுவாக தயாராவது ரியல் எஸ்டேட் துறைக்கு  கட்டாயமாகும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...