நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு
7.25% வட்டியில் கடன்:
பேங்க் ஆப் பரோடா அதிரடி
உலகளாவிய தொற்றுநோயை (global pandemic) அடுத்து, நாட்டில் ஊரடங்கு (lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு நிதிச் சேவை மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்வந்து இந்தப் பேரிடரை கடக்க மக்களுக்கு உதவ பொறுப்பு ஏற்றிருக்கின்றன. புதிய நெறிமுறைகள், சவால்கள் மற்றும் பொறுப்புகளுடன் “புதிய இயல்பான”( “New Normal”) ஓர் ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குவதில் நிதிச் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன. மிகப் பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), தொடர்ந்து கடன் வழங்கும் செயல்முறையை உறுதி செய்துள்ளது.
மாறி வரும் நிலைமை மற்றும் வாடிக்கையாளரின் தேவை எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக தொடர்ச்சியான வசதிகள் மற்றும் முன்முயற்சிகளை இந்த வங்கி அறிவித்திருக்கிறது. வங்கியின் கிளைகள், வணிக பொறுப்பாளர்கள் (Business
Correspondents) மற்றும் ஏ.டி.எம் மையங்கள் வழக்கம்போல் செயல்படுகின்றன, அனைவரின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை தொடர்ந்து நிரப்புகின்றன.
வங்கியின் முன்முயற்சிகள்
பேங்க் ஆப் பரோடா, 9,000க்கும் மேற்பட்ட கிளைகளையும், 18,000-க்கும் மேற்பட்ட வங்கி பொறுப்பாளர்களையும் (Banking
Correspondent- BC) கொண்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை வழங்கி
வருகிறார்கள்.
வங்கி பொறுப்பாளர்களுக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க அவர்களுக்கு நிதி உதவி வழங்கி வங்கி அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளிடையே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முன்முயற்சி, கோவிட்-19 (COVID-19) பாதிப்பிலிருந்து வங்கியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அதன் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வணிக பொறுப்பாளர்கள் பாதுகாப்பாக
இருக்க எடுக்கப்பட்டுள்ளது.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் பி.சி. முகவர்களுக்கு (BC agents) சுத்திகரிப்பான்கள், கிருமிநாசினிகள், முகமூடிகள், கையுறைகள் (sanitizers,
disinfectants, masks, gloves)
போன்றவற்றை வாங்குவதற்காகவும் அவர்களின் பணி இடங்களில் சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் 2,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, செயல்பட்டுக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு பி.சி. முகவர்களுக்கும் போக்குவரத்து செலவுக்காக
வேலை நாள் ஒன்றுக்கு கூடுதலாக 100 ரூபாய் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (பி.எம்.ஜே.டி.ஒய் - Pradhan Mantri Jan
Dhan Yojana -PMJDY)-ன் கீழ் வங்கி கணக்கு வைத்திருக்கும்
அனைத்து பெண்களுக்கும்,
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் (Pradhan Mantri Garib
Kalyan) உதவித் திட்டத்தின் மூலம்
அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்க மத்திய அரசாங்கத்தால்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தப் பெண்களின் வங்கி கணக்கில் சேர்க்க இந்த வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொகை, அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். மேலும், இந்தத் தகவல் அவர்களுக்கு
குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். அதில், எந்தத் தேதியில் அருகிலுள்ள கிளை அல்லது பி.சி முகவர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்கிற
விவரமும் இருக்கும்..
வங்கியின் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of Funds Based Lending Rate -
MCLR) 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.00% ஆக உள்ளது. 2020 ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. .அதன் சிறு வாடிக்கையாளர்களுக்காக
(retail customers), வங்கி தனது பரோடா ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (பி.ஆர்.எல்.எல்.ஆர் - Baroda Repo Linked
Lending Rate - BRLLR) 2020 மார்ச் 28 முதல் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வட்டி 7.25%
இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிததை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 5.15 சதவிகிதத்திலிருந்து 4.40 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதனைத்
தொடர்ந்து ரெப்போ
வீதத்துடன் இணைக்கப்பட்ட பி.ஆர்.எல்.எல்.ஆர் குறைக்கப்பட்டுள்ளது. கடன்களைப் பெற வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதும், அனைத்து கடன் தேவைகளையும் மிகவும் வசதியாக பூர்த்தி செய்ய எல்லா நேரங்களிலும் கடன் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.ஆர்.எல்.எல்.ஆர் என்பது,
அனைத்து தனிநபர் கடன்கள் மற்றும் அனைத்து சொத்து பிரிவுகளின் சிறு கடன்களுக்கான புதிய மாறுபடும் வட்டி விகிதம் (floating rate) பொருந்தும். நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (Micro, Small and
Medium Enterprises) மாறுபடும் வட்டி கடன் விகிதம் இப்போது 7.25% ஆகும்.