கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பாதிப்பால் பலராலும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியத்தை கட்ட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்திய காப்பீட்டுத் துறையின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI), கொரோனா பாதிப்பு காரணமாக இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கான கெடுத் தேதியை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை கேட்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பிரீமியம் செலுத்தவேண்டிய தேதியை 30 நாள்கள் அதிகமாக நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி நிறுவனம்
பொதுத் துறையை சேர்ந்த எல்.ஐ.சி நிறுவனம் பிரீமியம் கட்டுவதற்கான தேதியை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு மேலும் ஒரு மாதம் நீடித்துள்ளது.
எல்.ஐ.சி அதன் டிஜிட்டல் பேமென்ட் முறையில் பிரீமியம் கட்ட எந்தக் கூடுதல் சேவைக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளது.
மேலும், இணையத் தளத்தில் பாலிசிதாரகள் பதிவு செய்யத் தேவையில்லை. சில அடிப்படை விவரங்களை கொடுத்தால் போதும்.
எல்.ஐ.சியின் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பிரீமியம் கட்டலாம்.
மேலும் பிரீமியம் கட்ட வழக்கமான நெட் பேங்கிங், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் உடன் பேடிஎம், கூகுள் பே, போன் பே ஆகியவற்றின் மூலமும் பணம் செலுத்த முடியும்.
ஐ.டிபி.ஐ பேங்க், ஆக்ஸிஸ் வங்கிகளின் கிளைகள் மூலமும் பிரீமியம் கட்ட முடியும்.
முன்னணி தனியார் காப்பீட்டு நிறுவனங்களான எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் போன்ற நிறுவனங்களும் பிரீமியம் கெடு தேதியை நீட்டித்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக