மொத்தப் பக்கக்காட்சிகள்

அட சிரிச்சுட்டு போங்கப்பா....!


 அட சிரிச்சுட்டு போங்கப்பா....!

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

இப்ப மருந்து கொட்டிடுச்சி.

****

என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!

அய்யோ...!! அப்பறம்?

சாத்திட்டா

**** 
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்
காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....

****
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?

போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!

**** 
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

****

வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

**** 

"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"


**** 
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்
கோடீஸ்வரனாகி விடுவான்,
கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி
ஏழையாயிடுவாரு…!

 ****
தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

**** ****


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...