Corona
தனிமைப்படுத்திக் கொள்வதே, சிறந்த
நோய்த்தடுப்பு!
-
சுகாதாரத்துறை செயலர்
பீலா
ராஜேஷ்.
---------------------------------------
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர்
பீலா
ராஜேஷ்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அண்மையில் கூட்டாக
பேட்டியளித்தனர்.
பேட்டி விவரம்
வருமாறு.
"உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய,
மாநில
அரசுகளின் துறை நிபுணர்களின் ஆலோசனையின்படி தமிழ்நாட்டில் கொரோனா
விழிப்பு உணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், முதல்
அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தல்படி
அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன்
சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
5 அடி இடைவெளி
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக பொதுமக்களுக்கு சில
முக்கியமான தகவல்களை தெரிவிக்க விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட அயல்நாடுகள் அனுபவப்படி, நோய் கிருமிகளை பரப்புவதில் கைகள்
முக்கிய பங்கு
வகிப்பதால், ஒவ்வொருவரும் தங்கள்
கைகளை
சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நம்மை அறியாமல் ஓஎ
இடத்திற்கு போகும்போது படிக்கட்டு கைப்பிடி, மேஜை, நாற்காலி, பேருந்து இருக்கைகள், ரயில்
இருக்கைகள் போன்ற
வற்றின் மீது
கைகளை
வைக்கிறோம். அந்த
இடங்களில் நோய்தொற்று உடையவரின் கை
ஏற்கனவே பட்டிருக்கும்பட்சத்தில் கிருமி தொற்ற
வாய்ப்பு உள்ளது. எனவேதான் " அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
கைகளை சுத்தம் செய்ய
வீடுகளில் உள்ள
சோப்
போதுமானது. அந்த
சோப்பைக்கொண்டு சுமார்
30 வினாடிகள் கைகளின் இருபுறமும் நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும் போது
சுமார்
5 அடி
தொலைவு
விட்டு
மற்றவருடன் பேச
வேண்டும்.
தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்…!
முடிந்தவரை "நம்மை நாமே
தனிமைப்படுத்திக் கொண்டு
இருப்பது மிகவும் நல்லது."
சிறு குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , உடல்
உபாதைகளால் சங்கட்
படுபவர்கள் பொது
இடத்திற்கு வருவதை
கூடுமானவரை தவிர்க்க வேண்டும். இத்தகையோர் கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற
நிலையில் ' மாஸ்க்'
அணிந்து கொள்ளலாம். கார்,
பேருந்து, ரயில்,
விமான
பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
'மாஸ்க்' அனைவரும் அணிய
வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டியிருக்கிறது.
மருத்துவப் பணியில் இருப்பவர்கள் இரண்டு வகையான மாஸ்க்
பயன்படுத்துகிறார்கள். அது
அவர்களுக்கு அத்தியாவசியமான தேவை.
அவர்களைத் தவிர
நோய்த்தொற்று உடையவர்களும் நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடிய வயோதிகர்களும் வெளியில் வரும்போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
சத்தான உணவு
மற்றும் உடற்பயிற்சி நோய்த் தடுப்புக்கு மிகவும் உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க் வழங்கிய
யுனிசெப் அமைப்பு.
இந்த
நிகழ்ச்சியின் போது ஐக்கிய
நாடுகள் மன்றத்தின் யுனிசெஃப் அமைப்பு சார்பில், நெருக்கமான இடங்களில் நின்று
செய்தி
சேகரிக்கச் செல்லும் பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கு 'மாஸ்க்'குகள்
வழங்கப்பட்டன.
வீடியோ மூலம்
விழிப்புணர்வு தகவல்களையும் அந்த
அமைப்பு வழங்கியது. நோய்
எதிர்ப்பு சக்தி
நன்றாக
இருந்தால் கொரானா
வைரஸ்
என்ன
அதை
மீறிய
வைரஸ்
உம்
நம்மை
ஒன்றும் செய்ய
இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக