எம்.எஸ்.எம்.இ (MSME) மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, குறுகிய கால கடன் / தேவை கடன்கள் (Short- Term Loan / Demand Loans.) போன்ற அவசர கடன்களை வழங்குவதற்காக இந்த வங்கி ‘பரோடா கோவிட் எமர்ஜென்சி கிரெடிட் லைன் (பி.சி.இ.சி.எல் - ‘Baroda COVID
Emergency Credit Line (BCECL)’)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, தற்போதுள்ள நிதி அடிப்படையிலான நடைமுறை மூலதன வரம்புகளில் (Fund Based Working
Capital Limits -FBWC) அதிகபட்சம் 10% ஐ, அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் வரை கடன் வழங்க
இந்த வங்கி
முடிவு செய்துள்ளது.
இது
தற்போதுள்ள அட்ஹாக் / கூடுதல் எஸ்.எல்.சி / கோல்டு கார்ட் (Adhoc
/excess/SLC/Gold Card) வரம்புக்கு கூடுதலாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வட்டி விகிதம் நிலையான பிரீமியம் இல்லாமல் ஒரு வருட எம்.சி.எல்.ஆர் 8.00% ஆகவும், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு வட்டி விகிதம் பி.ஆர்.எல்.எல்.ஆர்-ல் 7.25% ஆகவும் இருக்கும்.
வேளாண் பிரிவைப் பொறுத்தவரை, பெண்கள் சுய உதவிக்குழுக்கள், உடனடி நிதி உதவியை உறுதி செய்வதற்காகவும், அவர்களின் குடும்ப மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பேங்க் ஆப் பரோடா பல்வேறு திட்டங்களை உருவாக்கி இருக்கிறது மற்றும் விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO / FPC) கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமனா பாதிப்பால் பணப் பிரச்சனையை
சந்தித்து வந்தால், அவர்களுக்கு அவசர கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.