மொத்தப் பக்கக்காட்சிகள்

பரோடா தனிநபர் கடன் கோவிட் 19

மிகப் பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை கடன் வழங்கும் வங்கியான பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)தொடர்ந்து கடன் வழங்கும் செயல்முறையை உறுதி செய்துள்ளது.


தற்போதுள்ள கடன்களுக்கு (existing loans), பி.ஆர்.எல்.எல்.ஆருடன் இணைக்கப்பட்ட மாதாந்திர இடைவெளியில் வெளிப்புற அளவுகோலின் கீழ் வட்டி விகிதம்  மாற்றி அமைக்கப்படும். இருப்பினும், மார்க்-அப் / பேஸ் ஸ்ப்ரேட் அல்லது ஸ்ட்ரஜிக் பிரீமியம் (mark-up /base spread or strategic premium) பிரிவில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆ.ர்பி.ஐ) கோவிட் 19 ஒழுங்குமுறை தொகுப்பு அறிவிப்பை (regulatory package announcement) தொடர்ந்து, 2020 மார்ச் 01 முதல் 2020 மே 31 வரையிலான அனைத்து கடன் தவணைகளையும் செலுத்துவதற்கு வங்கி மூன்று மாத கால அவகாசத்தை (moratorium) வழங்கியுள்ளது. இது பெரு நிறுவனங்கள் (corporate), நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.), விவசாயக் கடன் மற்றும் வீட்டுவசதிக் கடன், வாகனக் கடன், கல்வி மற்றும் தனிநபர் கடன் போன்ற சிறு கடன்கள் உள்ளிட்ட அனைத்து கால கடன்களுக்கும் (term loans) பொருந்தும்.
கடன் தள்ளி வைப்பு காலப்பகுதியில், கடன்களின் நிலுவைத் தொகை அடிப்படையில் வட்டி தொடர்ந்து சேரும். இந்த நடவடிக்கைகள் கோவிட் 19 வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் இடையூறு காரணமாக கடன் தாமதத்தை தவிர்க்கவும், தொடர்ச்சியாக வணிகம் நடைபெறுவதை  உறுதிப்படுத்தவும் உதவும். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாத தவணைகளை கட்டுவதற்கான நிலையான வழிமுறைகள் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே கட்டிய 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாத தவணைகளைத் திரும்பப் பெறுவது, மே மாதம் வரை தவணையை ஒத்தி வைக்க விரும்புவது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.


மேலும், வங்கி தற்போதுள்ள சிறு கடன் வாடிக்கையாளர்களுக்காக (வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் சொத்துகளுக்கு எதிரான கடன் வாங்கியவர்கள்) “பரோடா தனிநபர் கடன் கோவிட் 19” (“Baroda Personal Loan COVID 19”) திட்டத்தை  அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் நோக்கம், தற்போது வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் பணப் பிரச்சனையிலிருந்து வெளியே வருவதாக இருக்கிறது. 

இந்த தனிநபர் கடனை, அதிகபட்ச வரம்பாக ரூ. 5 லட்சம் வரை பெற வாடிக்கையாளர் தங்களின் தற்போதைய வங்கிக் கிளைகளை அணுகலாம். இது ஒரு சிறப்பு தனிநபர் கடனாக (special personal loan) இருப்பதால், வங்கி அதன் வழக்கமான தனிநபர் கடன் திட்டங்களை விட பரோடா ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்தில் (பி.ஆர்.எல்.எல்.ஆர்), மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் 2020 செப்டம்பர் 30 வரை இந்தத் திட்டத்தின் கீழ்  பயன் பெறலாம்.
தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேம்பட்ட மற்றும் தடையற்ற வங்கிச் சேவையை வழங்குவதற்கும் மூன்று மாதங்களுக்கு சிறு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் எதையும்  பேங்க் ஆப் பரோடா வசூலிக்காது.  பாதுகாப்பாக இருங்கள். வங்கி பாதுகாப்பானது(‘Stay Safe. Bank Safe’). வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறை வங்கிக்கு ஊக்குவிப்பதும், கிளைக்குச் செல்லாமல் தொலைதூர இடத்திலிருந்து வங்கியின் சேவைகளைப் பெறுவதற்கு ‘Khushiyon Ka Remote Control’ முன்முயற்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...