மொத்தப் பக்கக்காட்சிகள்

கொரானா வைரஸ் பாதிப்பால் பங்குகள் விலை வீழ்ச்சி: இப்போது வாங்கினால் லாபமா? வ.நாகப்பன் விளக்கம்


கொரானா வைரஸ் பாதிப்பால் பங்குகள் விலை வீழ்ச்சி: இப்போது வாங்கினால் லாபமா? வ.நாகப்பன் விளக்கம்

பங்குச் சந்தை நிபுணர் திரு. வ.நாகப்பன், அவரின் முக நூலில் (https://www.facebook.com/nagappan.valliappan)  

‘’உன் மூலமா இப்ப ஷேர் வாங்கற உன் க்ளையெண்ட் எல்லோரும் 10 வருசத்துக்கு அப்புறம் உன்ன நிச்சயமா வாழ்த்துவாங்கப்பா!” என்றார்கள் அப்பச்சி !

அது 1992-ம் ஆண்டு; அதற்கு முன்னரே கல்லூரி காலங்களிலேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறேன். என்றாலும், ஒரு பங்குத் தரகராக, பங்குச் சந்தையில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்த நேரம்.
கல்ஃப் வார்; ஹர்ஷத் மேத்தா காலகட்டம்.
பங்குச் சந்தை நிபுணர்
 திரு. வ.நாகப்பன்

ஹர்ஷத் மேத்தாவின் தில்லுமுல்லுகள் தொடர்ந்து செய்தித்தாள்களில் வெளிவந்துகொண்டிருந்த நேரம்.

அடுத்தடுத்து பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருந்த நேரம் அது.

எங்கு பார்த்தாலும் பெசிமிஸம்; சுற்றிலும் நெகட்டிவிட்டி.
என் சக தரகர்கள் பலரும்கூட புதிதாக வந்திருந்த என்னைப் பாவமாகத்தான் பார்த்தார்கள்.

அவர்கள் எல்லோரும் இத்துறையில் கால்பதித்து பல ஆண்டுகளாகப் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள்.  என்னடா இது, தப்பான நேரத்தில் துவங்கியிருக்கிறோமோ என ஒரு கட்டத்தில் நினைக்க வைத்தது.

வாடிக்கையாளர்கள் குறைந்து வருமானமும் குறைந்த கால கட்டம் அது.
அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள் அப்பச்சி; ஷேர் வாங்க ஆர்டர் கொடுத்துவிட்டு யோசனையாக அமர்ந்திருந்த என்னிடம் சொன்ன வார்த்தைகள்தான் மேலே சொன்னவை !

அப்பச்சி மறைந்து நேற்றோடு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இருந்தால் அவர்களுக்கு 108 வயது !

இப்போதைய பங்குச் சந்தையின் வீழ்ச்சியின்போது அப்பச்சி சொன்னதுதான் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது !

அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை இன்றும் நான் மறக்கவில்லை !


( அப்பச்சி புகைப்பட விளக்கம்: எங்கள் யாருக்கும் கான்பிக்காமல் எங்கோ வைத்திருந்த இந்த இளம் வயதுப் புகைப்படம், அப்பச்சி இறந்த பின்பு கண்டெடுத்தோம் - அவர்களுக்குள் இப்படி ஒரு வித்தியாசமான ஸ்டைல் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது பிள்ளைகள் யாருக்கும் தெரியாத ரகசியம் )

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...