மொத்தப் பக்கக்காட்சிகள்

கடன் 3 மாத தவணை சலுகை : கிரெடிட் கார்ட் கடனுக்கு உண்டா? – ஆர்.பி.ஐ விளக்கம்

பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு,144 தடை போன்றவற்றால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.


இந்த நிலையில் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ, ரிசர்வ் ரெப்போ, சி.ஆர்.ஆர் குறைத்துள்ளது.

இதனால் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். கூடவே டெபாசிட் வட்டி வருவாயும் குறையும்.

 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான தவணை தொகை(EMI) அடுத்த மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது.

 இந்த அமல் 2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத தவணை தொகைக்கு என சொல்லப்பட்டுள்ளது.

 அனைத்து வணிக வங்கிகளுக்கும் (கிராமப்புற வங்கிகள், நிதி வங்கிகள், உள்ளூர்  வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதிச் சேவை நிறுவனங்கள் (வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் உட்பட) மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

சொல்லப்பட்ட தவணை சலுகை அனைத்து வங்கிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வங்கிகள் தான் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலனை அளிக்க வேண்டும். தவணை காலம் மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை உள்ள காலமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

தாமதமாக துவங்கும் தவணையால் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL Score) எந்த மாற்றமும் இருக்காது, இது வாராக் கடனாக மாறாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின்  கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களும் மூன்று மாத தவணை சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் படி, ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது.

இது ஓர் அனுமதி கடிதம் தான் தவிர, வங்கிகள் தான் இதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும்.

 பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவித்தால், சில வங்கிகள் மட்டுமே அந்தப் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதுவும் அது போன்று நடக்க வாய்ப்புள்ளது.

 வங்கி வாடிக்கையாளர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கிகளிடம் செயல்முறையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

In ENGLISH

வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைக்கான காலம் தான் தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தவணை தொகை கழித்து கொள்ளப்படவில்லை. எனவே இது ஒரு கடன் தள்ளுபடி இல்லை.. தவணைத்தொகை எனும் போது, அசலுடன் வட்டியும் சேர்த்து தான்.

வீட்டுக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், விவசாய கடன், வாகன கடன், வீட்டு  உபயோகப் பொருட்கள் கடன், இதர கடன்களுக்கு சொல்லப்பட்ட மூன்று மாத தவணை தொகை சலுகை பொருந்தும்.

 கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு சுழலக்கூடிய கடன் (Revolving Credit) என சொல்லப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி கிரெடிட் கார்டுக்கான நிலுவை தொகைக்கு இந்தச் சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இதனை வங்கியில் உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். தாமதமாக செலுத்தப்படும் தவணைத்தொகையால் வாடிக்கையாளர்களின் சிபில் மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதன் காரணமாக வருங்காலங்களில் புதிய கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தவணை தொகைக்கான காலம் மார்ச் 1, 2020 முதல் என ரிசர்வ்வங்கி கூறியுள்ளது.

In ENGLISH

பெரும்பாலானோர் 2020 மார்ச் மாத தவணை தொகையை கட்டியிருக்கலாம்.

இது சம்பந்தமான சந்தேகங்களை உங்கள் வங்கி மேலாளரிடம் அல்லது அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு, முறையான தகவலை பெற்று, அதன் பின் தவணையை செலுத்தாமல் இருக்கலாம்.

 உங்களால் கடன் தவணையை செலுத்த முடியும் என்றால் தாராளமாக கட்டலாம். எது எப்படி இருந்தாலும் இந்தக் கடனை வட்டியுடன் நீங்கள்தான் கட்டப் போகிறீர்கள். வீட்டுக் கடன் போன்ற கடன்களுக்கு வரிச் சலுகை இருக்கிறது என்பதால், வரிச் சலுகை பெற நிதி ஆண்டு இறுதியில் உங்களால் மொத்தமாக கட்டுவதில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.

 வணிக நிறுவனங்களால் வாங்கப்பட்ட அனைத்து மூலதன கடன்களுக்கும் வட்டி தொகையை செலுத்துவதற்கு காலத்தை ஆர்.பி.ஐ. நீட்டித்துள்ளது. 

இவற்றை செலுத்துவதற்கான காலம் (2020 மார்ச் 1 முதல்) மூன்று மாதம் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்பு வட்டி சேர்க்கப்பட்டு செலுத்த வேண்டும்.

In ENGLISH
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...