Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
சகோதர சகோதரிகளே
கொரோனா - பாசிடிவ் என்று அறிந்த மாத்திரம்
ஒரு ஒவ்வாமை
ஒரு அறுவறுப்புணர்ச்சி
ஒரு சங்கடம்
ஒரு பயம்
எல்லாம் மனதில் வருகிறதல்லவா??
இதே உணர்வு தான்
எச்.ஐ.வி பாசிடிவ் என்று தெரிந்த பின்பும் ஒருகாலத்தில் வந்தது
இதனால் நாம் அடைந்ததை விட
இழந்ததே அதிகம்
நேற்று ஒரு இளைஞன் கொரோனா அறிகுறியுடன் இருந்ததால் தனக்கு ஏதோ பெரிய நோய் வந்து விட்டதென்று எண்ணி
"தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுடில்லியில்
கொரோனாவை எதிர்த்து போரிடும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதுகில்
குத்தும் செயலாக வீட்டை விட்டு வெளியேறக் கூறினர்
வீட்டுக்குச்சொந்தக்காரர்கள்
இவற்றைத்தான் SOCIAL STIGMA என்போம்
உண்மையில் இந்த கோவிட்-19 பற்றி நாம் புரிந்து கொண்டால் மனதளவில் கூட யாரையும் நாம் அறுவறுக்கத் துணிய மாட்டோம்
கோவிட்-19 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
✅புதிய
கொரோனா வைரஸால் பரவும் கோவிட்-19 நோயானது நமக்கு சீசன் நேரங்களில் வரும்
ப்ளூ வைரஸ் காய்ச்சலை விட இரண்டு மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டது
Transmission speed is double than seasonal flu infection
சீசனல் வைரஸ் காய்ச்சலால் ஆயிரத்தில் ஒருவர் மரணமடைகிறார் என்றால்
கோவிட்-19 காய்ச்சலால் ஆயிரத்தில் ஏழு முதல் ஐம்பது பேர் வரை மரணமடைய வாய்ப்புள்ளது.
Mortality rate is seven to fifty times more than seasonal flu infection
மேற்சொன்ன இரண்டு காரணங்களுக்காகத்தான் நாம் இத்தனை பெரிய தனிமைப்படுத்துதல் முடிவை எடுத்து வீடுகளுக்குள் அடங்கியிருக்கிறோம்
சரி...
கோவிட்-19 நோயை ஏன் அறுவறுக்கத்தக்கதாக பார்க்கக் கூடாது???
காரணம்
இந்த
நோய் வந்த 80% பேருக்கு ரத்தம் மூலம் முறையான ஆண்ட்டிபாடி
(ரஸ்க்கு
எதிராக நமது எதிர்ப்பு சக்தி மண்டலம் உருவாக்கிய காவல்படை) பரிசோதனை செய்து
பார்க்காத வரை
நமக்கு இந்த நோய் வந்து சென்றது என்பதை நம்மால் அறிய முடியாது.
அந்த தேவையும் இல்லை.
ஏனெனில்
நோய் பாதித்த 80% பேருக்கு சாதாரண சீசனல் வைரஸ் காய்ச்சல் போல வந்து
சென்றுவிடும். மரணத்தை உண்டாக்காது. ஏன்..? மருத்துவமனைக்கு கூட செல்லும்
அளவு பிரச்சனையாக கூட உருவெடுக்காது ( இதை ILI என்போம் Influenza Like
Illness)
மீதி உள்ள 20%பேரில்
15%
பேருக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் SARI எனும் தீவிர
சுவாசப்பாதை தொற்றாக மாறும் (Severe Acute Respiratory Infection)
இவர்களுக்கு ஆக்சிஜன்/ நெபுலைசேசன் ( புகை மூலம் நுரையீரலுக்கு தேவையான
மருந்துகளை கொடுக்கும் முறை) தேவைப்படலாம்.
இன்னும் 5% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்
அவர்களுள்
1% பேருக்கு அதி தீவிர சிகிச்சையும் வெண்டிலேட்டர் போன்ற செயற்கை
சுவாசக்கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இது நம் உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் தொற்று நோய்
இந்த நோய்
ஆறு அடிக்கு குறைவான தூரத்தில் இருந்து இருமுவது/ தும்முவது
வைரஸ்கள் உயிர்ப்புடன் இருக்கும் பொருள்களை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதாலும் தான் பரவுகிறது
எனவே
நமது பகுதியில்
நமது தெருவில்
நமது அண்டை வீட்டில்
நமது குடும்பத்தில் யாருக்கேனும்
கோவிட்-19 பாசிடிவ் என்று கண்டறியப்பட்டால்
அத்தோடு அவர்கள் வாழ்க்கை முடிந்து போய் விடுவதில்லை.
கோவிட்-19 பாசிடிவ் என்றவுடனே காலன் கதவைத் தட்டிவிட்டான் என்றும் அர்த்தமில்லை.
கோவிட்-19 பாசிடிவ் என்று அறிந்தால்
இதுவரை அம்மை நோய்க்கு நாம் என்ன செய்வோமோ அதையே தான் இதற்கும் செய்கிறோம்.
தனிமைப்படுத்துதல் (ISOLATION)
அவர்களுடன் தொடர்புடைய குடும்பத்தாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்துகிறோம் ( QUARANTINE)
இதைத்தான் நாம் CHICKEN POX (அம்மை)
நோய்க்கும் செய்வோம்
அம்மை நோய்க்கு ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் தனிமைப்படுத்துவோம்
இந்த கொரோனா வைரஸ்க்கு இருபத்து எட்டு நாட்கள் அவ்வளவே.
அந்த 28 நாட்கள் முடிந்த பிறகு அவரும் எப்படி அம்மை நோய் தாக்கியவர் குணமாகிவிடுவாரோ அதே போல் குணமாகிவிடுகிறார்.
அந்த
28 நாட்கள் இந்த வீட்டு மக்களுக்கு தேவையான உணவு / அத்தியாவசியப்பொருட்கள்
சார்ந்த உதவிகளை ஆறடி தூர இடைவெளி விட்டு நாம் தாராளமாக செய்யலாம்
செய்ய வேண்டும்..
ஆம்
நாம் தான் செய்ய வேண்டும்.
நம்மையன்றி யார் செய்வார்???
உடலால் தூரமானாலும்
மனதால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தால்
நம்மால் இந்த வைரஸை எளிதாக முறியடிக்க முடியும்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக