மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைவருக்கும் அனைத்து காலத்துக்கும் அனைத்து இலக்கும் ஏற்ற ஃபண்ட்



டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், டாடா மல்டி  அஸெட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் அறிமுகம்

~ மியூச்சுவல் ஃபண்ட்  துறையில் கமாடிட்டி டெரிவேடிவ்களில் முதலீடு செய்யும் முதல் ஃபண்ட் ~

முக்கிய அம்சங்கள்:
·         பங்குச் சந்தை,  எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கமாடிட் டெரிவேடிவ்ஸ் மற்றும் கடன் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்யும் திட்டம். எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும் மற்றும் வெளியேறும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட்  திட்டம்

·         போர்ட்ஃபோலியோ ரிஸ்க்-ஐ குறைக்க, இடர்ப்பாட்டை ஈடுகட்டி சிறந்த வருமானத்தை வழங்க, பரவலாக்கம் மற்றும் ஒன்றுக்கு ஒன்று குறைவான தொடர்புடைய பங்குச் சந்தை, பண்டக பொருட்கள், நிலையான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

·         கமாடிட்டி டெரிவேட்டிவ்களில் முதலீடு செய்யும் முதல் மியூச்சுவல் ஃபண்ட். நிறுவனப் பங்குகளில் அதிக முதலீடு, கூடவே ஆர்பிட்ரேஜ் முதலீடு.

·         இது ஒரு மாறும் சொத்துப் பிரிவு முதலீட்டுகளின் ஒதுக்கீடு அல்ல. சொத்து ஒதுக்கீடு பொதுவாக நிலையானது என்பதால், முதலீட்டாளர்கள் ஒரு சொத்து பிரிவின் மூலம் கிடைக்கும் திடீர் லாபத்தை இழக்க மாட்டார்கள். இருப்பினும், முதலீட்டாளருக்கு வருமான வரி விதிப்பு தாக்கமின்றி முதலீட்டை மறுசீரமைத்தல் இங்கே ஒரு முக்கிய கருத்தாகும்.

·         புதிய ஃபண்ட் வெளியீடு பிப்ரவரி 14, 2020 அன்று ஆரம்பித்து, 2020 பிப்ரவரி 28 அன்று நிறைவடைகிறது



மும்பை, பிப்ரவரி 14, 2020: டாடா மியூச்சுவல் ஃபண்ட் (Tata Mutual Fund), நிறுவனம், 'டாடா மல்டி  அஸெட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்' ('Tata Multi Asset Opportunities Fund'), என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இது மியூச்சுவல் ஃபண்ட் துறையில், எக்சேஞ்ச் டிரேடட் கமாடிட்டி டெரிவேடிவ்களில் (exchange traded commodity derivatives) முதலீடு செய்யும் முதல் ஃபண்ட் ஆகும்.

கமாடிட்டி டெரிவேடிவ்களில்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்ய செபி அமைப்பு அனுமதி கொடுத்தப் பிறகு இது சாத்தியமாகி இருக்கிறது. டாடா அஸெட் மேனேஜ்மென்ட், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் புதிய போக்கை உருவாக்கும் நிறுவனமாக இருக்கும். இந்த ஃபண்ட், மூன்று சொத்து பிரிவுகளில் (asset classes) பரவலாக முதலீடு செய்யும்பங்குச் சந்தை (Equity), கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் (Commodity Derivatives) மற்றும் கடன் சந்தை (Debt) . இந்த சொத்து பிரிவுகள் ஒவ்வொன்றும் முதலீட்டாளருக்கு ஒரு தனித்துவமான கருத்தை முன்வைக்கின்றன.

இந்திய பண்டக பொருட்கள் (commodity) துறை முதன்மையாக தங்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. எக்சேஞ்ச் டிரேடட் கமாடிட்டி டெரிவேடிவ்கள் (Exchange-traded commodity derivatives - ETCDs), முதலீட்டாளருக்கு அடிப்படை உலோகங்கள், வேளாண் விளை  பொருட்கள், தொழில்துறை ரசாயனங்கள், கச்சா எண்ணெய் போன்ற பிற பண்டக பொருட்களை தேர்வு செய்ய அனுமதிக்கின்றன.

செபி அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இந்த ஃபண்டில் அதன்  நிரிவகிக்கும் சொத்து மதிப்பில் (Asset Under Management - AUM) 25% வரை  ஈ.டி.சி.டீகளில் முதலீடு செய்யும். அதில்  ஒரு பண்டக பொருளின் ஏ.யூ.எம் 10% ஆகும்.

புதிய ஃபண்ட் வெளியீடு பற்றி டாடா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் (Prathit Bhobe, CEO & MD, Tata Asset Management) கூறும்போது, " டாடா மல்டி  அஸெட் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்  வெளியீடு, எங்களின் வலிமையான மற்றும் வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மற்றுமொரு திட்ட அறிமுகமாகும். ரூ. 100 டிரில்லியன் முதலீட்டுக்கு வாய்ப்புள்ள இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சிறிய பங்களிப்பாக இது இருக்கும். இந்தத் திட்டம் ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஆர்வத்தை உருவாக்கும். மேலும், புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்

எங்கள் செயற்கை நுண்ணறிவு / இயந்திர கற்றல் (AI / ML) மூலமான  குவாண்ட் ஃபண்டிற்குப் (Quant Fund) பிறகு, இந்த நிதியாண்டில் நாங்கள் திட்டமிட்ட புதுமையான தயாரிப்புகளில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது. எங்களின் மல்டி அஸெட் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பங்குச் சந்தை, கமாடிட்டி டெரிவேடிவ்கள் மற்றும் கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்ட் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இந்தப் பிரிவில் முதல் ஃபண்ட் ஆகும். மேலும், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க புதிய சொத்து பிரிவில் முதலீடு செய்ய வழி செய்கிறது."

டாடா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி - ஈக்விட்டிஸ் ராகுல் சிங் (Rahul Singh, CIO-Equities, Tata Asset Management) கூறும்போது "வெவ்வேறு சொத்து பிரிவுகளுக்கு இடையிலான எதிர்மறையான தொடர்பு அனைத்து முதலீடுகளும், ஒரே நேரத்தில் தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அதாவது முதலீட்டுக் கலவையின் வருமானம் எதிர்மறையாக இருக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.

பரவலாக்கம் மற்றும் நிறுவனப் பங்குகள், பண்டக பொருள்கள், நிலையான வருமானம் தரும் திட்டங்கள் இடையேயான குறைவான ஒற்றுமை, கமாடிட்டி ஆர்பிட்ரேஜ் (commodity arbitrage) மூலமான வருமானம் போன்றவை முதலீட்டு மீதான ரிஸ்க்-ஐ குறைப்பதோடு, வருமானத்தின் ஏற்ற இறக்கத்தையும் குறைத்து நிலையான வருமானம் கொடுக்க உதவும். சொத்து ஒதுக்கீடு (asset allocation) பொதுவாக நிலையானது என்பதால், முதலீட்டாளர்கள் ஒரு சொத்து பிரிவின் மூலம் கிடைக்கும் திடீர் லாபத்தை இழக்க மாட்டார்கள். நிறுவனப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யும் அதேநேரத்தில் ஈக்விட்டி ஆர்பிட்ரேட் அனுமதிக்கப்படுகிறது. இந்த ஃபண்டில்  வருமான வரி விதிப்பு என்பது பங்குச் சார்ந்த ஃபண்ட்களுக்கு உரியது என்பதால் முதலீட்டாளருக்கு நல்ல வருமானம் கிடைப்பதை உறுதி செய்கிறது.”

டாடா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் – பண்டக பொருள்கள் முதலீடு உத்தி அரோபிந்த பிரசாத் கியான் (Aurobinda Prasad Gayan, Head-Commodities Strategy, Tata Asset Management)  கூறும் போது, " பண்டக பொருள்கள் மூலம் ஆர்பிட்ரேஜ் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திகள் மூலம் அனைத்து சந்தை சுழற்சிகளிலும் நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்பை உருவாக்குகிறது. பண்டக பொருள்களில் மேற்கொள்ளப்படும் ஆர்பிட்ரேஜ் என்பது ரிஸ்க்-ஐ ஈடுகட்டி நல்ல வருமானம் பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. சில பங்கேற்பாளர்கள், குறைந்த பணம் வழங்கல் மற்றும் பொருட்களுக்கான அதிக தேவை ஆகியவை பண்டக பொருட்களில் அதிக பரவலுக்கு வழிவகுக்கிறது. கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த விலைகள் (Commodity Futures contract prices) சந்தை விலையிலிருந்து (spot prices) பெறப்படுகின்றன.


இந்த ஃபண்டில் குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ. 5,000 மற்றும் ரூ.1-ன் மடங்குகளில். இந்த ஃபண்ட் டாடா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சொத்து பிரிவு சார்ந்த தலைவர்கள் நிர்ணயிக்கிறார்கள். - ராகுல் சிங், முதன்மை முதலீட்டு அதிகாரி, ஈக்விட்டீஸ், மூர்த்தி நாகராஜன்,  தலைவர் – ஃபிக்ஸட் இன்கம்,  அரோபிந்த பிரசாத் கியான், ஹெட்- கமாடிடிட்டீஸ் ஸ்ட்ரஜி மற்றும்  ஃபண்ட் மேனேஜர் சைலேஷ் ஜெயின்  ஆகியோர் நிர்வகிக்கிறார்கள்.

டாடா அஸெட் மேனேஜ்மென்ட் பற்றி..! (About Tata Asset Management):

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் (Tata Mutual Fund) முதலீட்டு மேலாளரான டாடா அஸெட் மேனேஜ்மென்ட்  நிறுவனம் (Tata Asset Management Ltd) கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இது 20 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களை (2020 ஜனவரி 31 நிலவரப்படி) கொண்ட இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் நம்பகமான நிதி மேலாண்மை  நிறுவனங்களில் ஒன்றாகும்.  டாடா மியூச்சுவல் ஃபண்ட் சிறுவயது முதல் ஓய்வுக் காலம் வரை சாதாரண மனிதர்களின் முதலீடுகளை நிர்வகிப்பதில் பெருமை கொள்கிறது.

இது முதலீட்டாளர்களின் இடர்ப்பட்டை சந்திக்கும் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு தேவைக்கும் பரந்த நிதித் தேர்வை வழங்குகிறது. பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்கள், கலப்பின ஃபண்ட் திட்டங்கள் மற்றும் நிலையான வருமான ஃபண்ட்கள் ஆகியவை இதில் அடங்கும்.

For further information, contact:
Heena Uttamchandani
Tata Asset Management
Corporate Communications

Tel: 022 – 66578243 / huttamchandani@tataamc.com
Tata Multi Asset Opportunities Fund.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...