முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் {Muthoot Homefin (India) Limited - MHIL }:
எம்.ஹெச்.ஐ.எல், தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டுவசதி நிதி நிறுவனம். இது முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு துணை
நிறுவனமாகும். எம்.ஹெச்.ஐ.எல்-ன் பிரதான குறிக்கோள், குறைந்தது
முதல் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முறையான வீட்டு
வசதிக் கடன் வழங்குவதாக உள்ளது. இது வாங்கக் கூடிய விலையுள்ள வீடுகளுக்கு கடன் வழங்குவதில் (Affordable
Housing Finance) கூடுதல் கவனம் செலுத்துகிறது. ஆரம்ப காலத்தில் இது சில்லறை
வீட்டுக் கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் கார்ப்பரேட் அலுவலகம்
மும்பையில் உள்ளது. மேலும், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (Hub and Spoke’) மாதிரியில்
ஒருங்கிணைந்த செயல்முறையில் இயங்குகிறது.
எம்.ஹெச்.ஐ.எல், 14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் செயல்படுகிறது – மகாராஷ்டிரா (மும்பை உட்பட), குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ஹரியானா, சண்டிகர், உத்தரப்
பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், தமிழ்நாடு, டெல்லி மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது. எம்.ஹெச்.ஐ.எல், அதன் கமர்சியல்
பேப்பர் திட்டத்திற்கான குறுகிய கால கடன் மதிப்பீட்டை இக்ரா (ICRA)
நிறுவனத்திடமிருந்து ‘ஏ 1 +’ என பெற்றிருக்கிறது. கொண்டுள்ளது. இது “நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் செலுத்துவது மற்றும் மிகக் குறைந்த கடன் இடர்ப்பாட்டைக் கொண்டு மிகவும் வலுவான பாதுகாப்பைக் குறிக்கிறது” என்பதைக் குறிக்கும்.
கிரிசில் லிமிடெட், இந்த நிறுவனத்தின்
பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கான 'கிரிசில் ஏ / (நிலையானது)' என்பதிலிருந்து
'கிரிசில் ஏஏ / (நேர்மறை)' (‘CRISIL AA/(Stable)’ to ‘CRISIL AA/(Positive)’) என நீண்ட கால கடன் மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை உயர்த்தி
உள்ளது. இது "நிதிக் கடமைகளை சரியான நேரத்தில் வழங்குவதில், மிகக் குறைந்த இடர்ப்பாட்டில் அதிக அளவு பாதுகாப்பைக் குறிக்கிறது. ”
முக்கிய நிதி நிலை அம்சங்கள் (ரூ. மில்லியன்கள்)
விவரங்கள்
|
9M FY20
|
கிளைகளின் எண்ணிக்கை
|
107
|
விற்பனை அலுவலங்கள் எண்ணிக்கை
|
107
|
பணியாளர்கள் எண்ணிக்கை
|
438
|
|
|
வழங்கப்பட்ட கடன்கள்
|
20248
|
|
|
மூலதன தன்னிறைவு விகிதம்
|
50%
|
|
|
மொத்த வருமானம்
|
2401
|
மொத்த செலவு
|
1983
|
வரிக்கு முந்தைய லாபம்
|
418
|
வரிக்கு பிந்தைய லாபம்
|
306
|
பங்குதாரர்களின் நிதி
|
4248
|
மொத்த கடன் நிலுவைகள்
|
15286
|
மொத்த சொத்துகள்
|
19534
|
|
|
மூன்றாம் நிலை கடன் சொத்துகள்
|
335
|
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள் %
|
1.87
|
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
|
270
|
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
|
341
|
மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு%
|
1.91
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக