முத்தூட்
ஃபைனான்ஸ் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் (Standalone Results of Muthoot Finance Ltd and its subsidiaries)
முத்தூட்
ஃபைனான்ஸ் நிறுவனம்
(Muthoot Finance Ltd -MFIN), தங்க
நகைக் கடன் வழங்குவதில், வழங்கப்பட்ட கடன் தொகையின் அடிப்படையில் இந்தியாவின்
பெரிய நிறுவனம். இதன் நிகர லாபம் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 50% அதிகரித்து ரூ.2,191 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.1,461
கோடியாக
இருந்தது. கடன்
சொத்துகள் டிசம்பர் 31, 2019 நிலவரப்படி 19% வளர்ச்சி கண்டு ரூ.38,498 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது, டிசம்பர் 31, 2018
நிலவரப்படி ரூ.32,470 கோடியாக இருந்தது. காலாண்டில், தங்கக் கடன் சொத்துகள் ரூ. 2,783 கோடி அதிகரித்துள்ளது.
முத்தூட் ஹோம்ஃபின்
(இந்தியா) லிமிடெட் {Muthoot Homefin (India) Ltd –MHIL}, முழுமையான துணை நிறுவனம். இதன் வழங்கப்பட்ட கடன், 10% அதிகரித்து ரூ.2,025 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,835 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 2019-20 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின்
ஒன்பது மாதங்களில் முறையே ரூ.88 கோடிகள் & ரூ. 240 கோடிகள் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.57
கோடிகள் மற்றும் ரூ.161 கோடிகளாக இருந்தன.
நிகர லாபம், 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.11 கோடிகள் & ரூ.31 கோடிகள் ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.9
கோடிகள் மற்றும் ரூ.30 கோடிகளாக இருந்தன. மொத்த
கடன் சொத்துக்கும் இதன் அதன் மூன்றாம் நிலை (Stage III) சொத்துக்குமான விகிதம் டிசம்பர் 31, 2019 நிலவரப்படி
1.87% ஆக இருந்தது.
பெல்ஸ்டார் மைக்ரோஃபைனான்ஸ் லிமிடெட் { Belstar Microfinance
Limited –BML},
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்ய்யப்பட்ட
மைக்ரோ ஃபைனான்ஸ் என்.பி.எஃப்.சி (micro finance NBFC) மற்றும் துணை நிறுவனமாகும். இதன்
பங்கு மூலதனத்தில் 70.01% பங்குகளை முத்தூட் ஃபைனான்ஸ் வைத்திருக்கிறது.
வழங்கப்பட்ட கடன், 46% அதிகரித்து
ரூ.2,285 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.1,563
கோடியாக இருந்தது. 2019-20
ஆம் நிதி
ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வழங்கப்பட்ட ரூ.178 கோடிகள்
அதிகரித்துள்ளது.
நிகர லாபம், 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.26 கோடிகள் & ரூ.77 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில்
ரூ.24 கோடிகள் மற்றும் ரூ.53 கோடிகளாக இருந்தன. மொத்த
கடன் சொத்துக்கும் இதன் அதன் மூன்றாம் நிலை (Stage III) சொத்துக்குமான விகிதம் டிசம்பர் 31, 2019 நிலவரப்படி
1.137% ஆக இருந்தது.
முத்தூட் இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Muthoot Insurance Brokers Pvt Limited -MIBPL), ஐ.ஆர்.டி.ஏ.ஐ-ல் பதிவு செய்யப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் நேரடி புரோக்கர் நிறுவனம். இது முற்றிலும்
சொந்தமான துணை நிறுவனமாகும். மொத்த பிரீமிய வசூல் (total premium collection), 2019-20
ஆம் நிதி
ஆண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.85 கோடிகள் & ரூ.217 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.62
கோடிகள் மற்றும் ரூ.179 கோடிகளாக இருந்தன.
இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.5 கோடிகள் & ரூ.12 கோடிகளாக இருந்தன. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.4
கோடிகள் மற்றும் ரூ.10 கோடிகளாக இருந்தன.
இலங்கை துணை நிறுவனம்-
ஆசியா அஸெட் ஃபைனான்ஸ் பி.எல்.சி( Asia Asset Finance PLC - AAF) . இந்த நிறுவனத்தின் முத்தூட் ஃபைனான்ஸ்-ன் பங்கு மூலதனம் 72.92%
ஆக உள்ளது. வழங்கப்பட்ட கடன், இலங்கை ரூபாய் மதிப்பில் (LKR) 12% அதிகரித்து ரூ.1,163 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் 1,301c கோடிகளாக இருந்தது. மொத்த வருமானம், 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே இலங்கை ரூபாய்
மதிப்பில் ரூ.86
கோடிகள் & ரூ.252 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.71
கோடிகள் மற்றும் ரூ.209 கோடிகளாக இருந்தன
நிகர லாபம், 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே இலங்கை ரூபாய்
மதிப்பில் ரூ.4
கோடிகள் & ரூ.9 கோடிகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே கால
கட்டத்தில் ரூ.3
கோடிகள் மற்றும் ரூ.7 கோடிகளாக இருந்தன
முத்தூட்
மணி லிமிடெட் (Muthoot Money Ltd - MML), 2018 அக்டோபர் மாதத்தில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முழு துணை நிறுவனமானது.எம்.எம்.எல் என்பது ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இது முக்கியமாக வாகனங்களுக்கான கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.
இதன் நடவடிக்கைகள் இப்போது ஹைதராபாத்தை மையமாகக் கொண்டுள்ளன. சமீபத்தில், இந்த நிறுவனம் வணிக வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கான கடன்களை வழங்கத் தொடங்கி உள்ளது. 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டில் இதன் வழங்கப்பட்ட கடன் ரூ. 492 கோடியாக அதிகரித்துள்ளது. 2019-20 ஆம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டில் வழங்கப்பட்ட கடன் ரூ. 65 கோடி அதிகரித்துள்ளது. மொத்த
வருமானம், 2019-20
ஆம் நிதி
ஆண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் முறையே ரூ.18 கோடிகள் & ரூ.49 கோடிகளாக இருந்தது.
நிர்வாகத்தின்
கருத்து
நிதி நிலை முடிவுகள் குறித்து, சேர்மன் எம்.ஜி ஜார்ஜ் முத்தூட் (M G George Muthoot,
Chairman) கூறும் போது, “ குழுமத்தின் ஒருங்கிணைந்த கடன் சொத்துகள்
2019-20 ஆம்
நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 21% அதிகரித்து ரூ.43,436 கோடிகளாக
அதிகரித்துள்ளதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இது கடந்த
ஆண்டின்
இதே காலக் கட்டத்தில் ரூ.35,939
கோடிகளாக
இருந்தது.
ஒருங்கிணைந்த லாபம் 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில் 49% அதிகரித்து ரூ.2,321 கோடிகளாக
அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின்
இதே காலக் கட்டத்தில் ரூ.1,554
கோடிகளாக
இருந்தது. இந்தக் காலாண்டில் முத்தூட் ஃபைனான்ஸின்
வழங்கப்பட்ட கடன் ரூ.2,783
கோடிகள் அதிகரித்து
ரூ.37,724
கோடிகளாக
உயர்ந்துள்ளது. 2019
டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 9 மாதங்களில் முத்தூட் ஃபைனான்ஸின் தனித்த லாபம் 50% அதிகரித்து ரூ.2191 கோடியாக உயர்ந்துள்ளது”
நிதி நிலை
முக்கிய அம்சங்கள்(MFIN) :
9M FY20
|
9M FY19
|
YOY
|
|
(ரூ. கோடிகளில்)
|
(ரூ. கோடிகளில்)
|
||
மொத்த வருமானம்
|
6312
|
5000
|
26%
|
வரிக்கு முந்தைய லாபம்
|
2944
|
2283
|
29%
|
வரிக்கு பிந்தைய லாபம்
|
2191
|
1461
|
50%
|
ஒரு பங்கு வருமானம் (அடிப்படை) ரூ.
|
54.68
|
36.50
|
50%
|
கடன் சொத்துகள்
|
38498
|
32470
|
19%
|
கிளைகள்
|
4536
|
4422
|
3%
|
விவரம்
|
9M FY20
|
9M FY19
|
கடன் சொத்துகளின் சராசரி வருமானம்
|
8.10%
|
6.24%
|
பங்கு மூலதனம் மீதான
சராசரி வருமானம்
|
27.57%
|
22.86%
|
ஒரு பங்கின் புத்தக மதிப்பு (ரூ.)
|
284.15
|
231.46
|
விவரம்
|
Q3
FY20
|
Q3
FY19
|
மூலதன தன்னிறைவு
விகிதம்
|
26.51
|
25.74
|
பங்கு மூலதனம் மற்றும்
கையிருப்புகள் (ரூ.கோடி)
|
11399
|
9278
|
விவரம்
|
9MFY20
|
கிலை நெட் ஒர்க்
|
4536
|
தங்கக் கடன்
நிலுவை (ரூ.கோடிகளில்)
|
37724
|
கடன் இழப்புகள் (ரூ.கோடிகளில்)
|
50
|
நிர்வகிக்கும் மொத்த கடன் சொத்து
மதிப்பில் கடன் இழப்புகள் %
|
0.13%
|
ஒரு கிளையின் சராசரி
தங்கக் கடன் (ரூ. கோடிகளில்)
|
8.32
|
கடன் கணக்குகளின் எண்ணிக்கை (லட்சத்தில்)
|
80
|
அடமானம் வைக்கப்பட்டுள்ள
தங்க நகைகளின்
மொத்த எடை (டன்களில்)
|
173
|
கடன் சராசரி அளவு
|
47008
|
பணியாளர்களின் எண்ணிக்கை
|
25149
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக