பெல்ஸ்டார் மைக்ரோஃபைனான்ஸ் லிமிடெட்
(Belstar Microfinance Limited -BML):
(Belstar Microfinance Limited -BML):
பி.எம்.எல், 1988 ஜனவரியில் பெங்களூரில் நிறுவப்பட்டது. மேலும் இந்த
நிறுவனம் 2001 மார்ச்
மாதத்தில் வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டது. 2013 டிசம்பர்
11 முதல் இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ- அமைப்பால் “NBFC-MFI” என
மறுவகைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது பி..எம்.எல்,
நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (equity share
capital) 70.01% முத்தூட்
ஃபைனான்ஸ் வசம் உள்ளது. பி.எம். எல், 2008 செப்டம்பரில் ஹேண்ட் இன் ஹேண்ட் (Hand
in Hand) குழுமத்தை கையக்கப்படுத்தியது. இந்த நிறுவனம், அதன் முதல் கடனை
கர்நாடாக மாநிலம், ஹேவிரி மாவட்டத்தில் 2009 மார்ச் மாதத்தில் 3 சுய உதவி
குழுக்களை சேர்ந்த 22 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 0.2 மில்லியன் கடன் வழங்கப்பட்டது. கடந்த
பத்து ஆண்டுகளாக, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, உருவாக்கிய குழுக்களுக்கு சுய உதவி
குழுக்கள் மாதிரியில் (SHG model) கடன் உதவி அளித்து வருகிறது. 2015 ஜனவரி முதல் கூட்டு பொறுப்பு
குழுக்கள் (JLG - Joint Liability Groups) மாதிரியில்
கடன் உதவி அளித்து வருகிறது. பி.எம்.எல், இதனை மஹாராஷ்ட்ரா
மாநிலம் புனே மாவட்டத்தில் தொடங்கியது.
2019 டிசம்பர் 31, நிலவரப்படி, பி.எம்.எல்-ன் செயல்பாடுகள் 16 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன்
பிரதேசத்தில் (தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் புதுச்சேரி).
இது 573 கிளைகள், 101 பிராந்திய அலுவலகங்கள், 4,269 பணியாளர்களை
கொண்டுள்ளது. அதன் மொத்த வழங்கப்பட்ட கடன் 2009 மார்ச் மாதத்தில் ரூ. 0.20 மில்லியனிலிருந்து 2019 டிசம்பரில் ரூ. 22,849 மில்லியனாக வளர்ந்துள்ளது. 2019-20 ஆம் நிதி
ஆண்டின் ஒன்பது மாதங்களில் வரிக்குப் பிந்தைய
நிகர லாபம் ரூ.769 மில்லியன் மற்றும் நிகர மதிப்பு ரூ .4,748 மில்லியன் ஆக உள்ளது.
முக்கிய நிதி நிலை அம்சங்கள்
|
(ரூ.
மில்லியன்கள்)
|
|
விவரங்கள்
|
9M FY20
|
|
கிளைகள் எண்ணிக்கை
|
573
|
|
பணியாளர்கள் எண்ணிக்கை
|
4269
|
|
|
|
|
மொத்தம் வழங்கப்பட்ட கடன்
|
22849
|
|
|
|
|
மூலதன தன்னிறைவு விகிதம்
|
27%
|
|
|
|
|
மொத்த வருமானம்
|
3681
|
|
மொத்த செலவு
|
2654
|
|
வரிக்கு முந்தைய லாபம்
|
1027
|
|
வரிக்கு பிந்தைய லாபம்
|
769
|
|
பங்குதாரர்களின் நிதி
|
4748
|
|
மொத்த கடன் நிலுவைகள்
|
20022
|
|
மொத்த சொத்துகள்
|
24770
|
|
|
|
|
மூன்றாம் நிலை கடன் சொத்துகள்
|
258
|
|
மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள்%
|
1.13
|
|
மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
|
230
|
|
எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
|
347
|
|
மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு%
|
1.52
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக