மொத்தப் பக்கக்காட்சிகள்

லஷ்மி விலாஸ் வங்கி நிகர இழப்பு 31 டிசம்பர் 2019 –ல் ரூ.334 கோடியாக குறைந்துள்ளது


லஷ்மி விலாஸ் வங்கியின்  
நிகர இழப்பு 31 டிசம்பர் 2019 –ல் 
முடிந்த மூன்றாம் காலாண்டில் 
ரூ.334 கோடியாக குறைந்துள்ளது

   முக்கிய நிதி நிலை முடிவுகள் 
ü  வங்கியின் மொத்த வணிகம்  ரூ. 41,100 கோடி
ü  மொத்த டெபாசிட்டில் காசா 25.88%
ü  கூடுதல் வாராக் கடன் இல்லை. இரண்டாம் காலாண்டில் இது நிகர அடிப்படையில் ரூ.534 கோடி.
ü  நிகர வாராக் கடன் 10.47%. லிருந்து 9.81% ஆக குறைந்துள்ளது.
ü  நிகர வட்டி வருமானம், இரண்டாம் காலாண்டில் ரூ.109.67 கோடியாக இருந்தது. இது மூன்றாம் காலாண்டில் ரூ.125.91 கோடியாக அதிகரித்துள்ளது.
ü   மூன்றாம் காலாண்டில்  செயல்பாட்டு மற்றும் நிகர இழப்பு குறைந்துள்ளது.
முக்கிய நிதி நிலை முடிவுகள் :

±வங்கியின் மொத்த வணிகம் 31/12/2019  நிலவரப்படி ரூ.41,100 கோடியாக உள்ளதுஇது 2018, டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 54,910 கோடியாக இருந்தது.
± மொத்த டெபாசிட்டில் காசா, 31/12/2019  நிலவரப்படி 25.88% ஆக இருந்தது. இது  31.12.2018 –ல் 22.85%  ஆக இருந்தது.
± வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 17,535 கோடியாக உள்ளது. இது, 31/12/2018 –ல் ரூ.24,123 கோடியாக இருந்தது. இது 27.31%. குறைவாகும்.
± மொத்த டெபாசிட் 31/12/2018 இல் ரூ.30,787 கோடியாக இருந்தது. இது, 31/12/2019  இல் ரூ.23,565 கோடியாக குறைந்துள்ளது..
± வங்கியின் நிகர வட்டி வரம்பு (Net Interest Margin - NIM) 2019-20 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மேம்பட்டு 1.97% ஆக உள்ளது. இது 2019-209 ஆம் நிதி ஆண்டின்  இரண்டாம் காலாண்டில் 1.47%  ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 1.65 %  ஆக இருந்தது.
± வங்கியின் செயல்பாட்டு இழப்பு (Operating loss) குறைந்து,31/12/2019 இல் முடிந்த காலாண்டில் ரூ.19.85 கோடியாக உள்ளது. இந்த இழப்பு 30/09/2019 இல் முடிந்த காலாண்டில் ரூ. 40.37  கோடியாக இருந்தது. செயல்பாட்டு இழப்பு 31/12/2018 இல் முடிந்த காலாண்டில் ரூ.25.10 கோடியாக இருந்தது.
± வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio), 2019-20 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்  110.38% ஆக குறைந்துள்ளது. இது  2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 124.07%  ஆக இருந்தது. செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம், 2018-19 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 112.56% ஆக இருந்தது.
± 31/12/2019 இல் முடிந்த காலாண்டில் வரிக்கு முந்தைய இழப்பு ரூ. 334.48 கோடியாக குறைந்துள்ளது. இது  30/09/2019 இல் முடிந்த காலாண்டில் ரூ. 357.17  கோடியாகவும், 31/12/2018  இல் முடிந்த காலாண்டில் ரூ. 456.49  கோடியாகவும் இருந்தது.

மூலதன தன்னிறைவு  (Capital Adequacy):

வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio-CAR), பேசல் III விதிமுறைகளின்படி (Basel III guidelines) 31/12/2019 நிலவரப்படி 3.46%  ஆக உள்ளதுஇது 30/09/2019 நிலவரப்படி 5.56%  ஆகவும், 31/12/2018   நிலவரப்படி 7.57% ஆகவும்  இருந்தது

வாராக் கடன் (NPA)

மொத்த வாராக் கடன் (Gross NPA), 31/12/2019 நிலவரப்படி, 23.27 ஆக உள்ளது. இது, 30/09/2019 நிலவரப்படி21.25%  ஆக இருந்தது.  நிகர வாராக் கடன் (Net NPA)  குறைந்து 9.81% ஆக உள்ளது. இது 30/09/2019 இல் 10.47% ஆக இருந்தது. வாராக் கடன் ஒதுக்கீடு கவரேஜ் விகிதம்   (provision coverage ratio) மேம்பட்டு 68.70%  ஆக உள்ளது. (30/09/2019 இல் 62.28% மற்றும் 30/06/2019 இல் 63.08%  மற்றும்  31/12/2018 இல் 55.93%).

இதர மேம்பாடுகள்:.

இந்திய ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 27, 2019 தேதியிட்ட கடிதம் மூலம்  லட்சுமி விலாஸ் வங்கியில் உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளைத் (Prompt Corrective Action) தொடங்கியது. இந்த உடனடி சீரமைப்பு நடவடிக்கை வங்கியின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் வைப்பு நிதிகளை ஏற்றுக்கொள்வது / திருப்பிச் செலுத்துவது உட்பட வங்கியின் சாதாரண  தினசரி  நடவடிக்கைகளில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த வங்கி 200%க்கும் அதிகமான பணமாக்கும் பாதுகாப்பு விகிதத்துடன், அதன் பண வரவு செலவை நன்கு நிர்வகித்தது. 


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அடல் பென்ஷன்  திட்ட செயலாக்கத்துக்காக இந்த வங்கி, சிறந்த செயல்திறன் கொண்ட தனியார் வங்கி விருதை பெற்றுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆர்.டி.), இந்தியாவின் ஓய்வூதிய ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய அரசால் நிறுவப்பட்டது  மற்றும் நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறையால் அங்கீகரிக்கப்பட்டது.

தேசிய பணப்பட்டு வாடா நிறுவனம் (NPCI) மற்றும்  எலெக்ட்ரானிஸ்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அதிகரித்து வரும் பற்று அட்டை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் 100%-க்கும்  அதிகமாக சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் சிறந்த 10 வங்கிகளில்  ஒன்றாக இந்த வங்கி இடம் பெற்றுள்ளது.

இந்த வங்கி, எல்.வி.பி -இன் முதல் பிரத்தியேக சலுகை தளத்தை (Exclusive Offer Platform) அறிமுகப்படுத்தியுள்ளது: எல்.வி.பி ஜாய் (LVB JOY –“Just Offers for You “)  என்கிற இந்தச் சலுகைகள்,  தற்போதுள்ள வாடிக்கையாளர்களுடனான வங்கியின் பிணைப்பை வலுப்படுத்தும் மற்றும் முக்கிய பிரிவுகளில் 40+ க்கும் மேற்பட்ட பிரபலமான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பிராண்டுகளின் சலுகைகளைக் கொண்டுள்ளது. .

எல்.வி.பி ஜாய்  - இன் முக்கிய நோக்கம்

·         வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வருவது
·         இந்த மையப்படுத்தப்பட்ட  காசா பிரிவுகளில் எல்.வி.பி டெபிட் கார்டு பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் முதன்மை அட்டை நிலையைப் பெறுதல் (primary card status), இதனால் இந்தக் கணக்குகளில் நிலுவைகள் அதிகரிக்கும்.

வங்கியால் எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்:-

1.      கடன் வழங்குவதில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களிடமிருந்து எம்.ஆர்.சி (MRC) மற்றும் சில்லறை கடன்களுக்கு கவனத்தை மாற்றும் பணியில் வங்கி ஏற்கனவே இறங்கி உள்ளது.

2.      சாத்தியமான இடங்களில் செலவைக் குறைப்பு, தலைமை அலுவலகத்தில் செலவுகளை மையப்படுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. மற்றும்  இதர வருமானத்தை உயர்த்த  நடவடிக்கை எடுத்தது.வங்கி ஊழியர்களின் எண்ணிகையைக் குறைத்துள்ளது. நிர்வாக அலுவலக பணியாளர்களை குறைத்து அவர்களை கிளைகளில் பணி அமர்த்தி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் வேலையில் ஈடுபடுத்தி வருவதோடு, கடன் மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் வருமானத்துக்கும் செலவுக்குமான விகிதத்தை குறைக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

3.      தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு (QIP) பங்குகளை ஒதுக்கீடு செய்தது மூலம் 2019 மார்ச் மாதத்தில் வங்கி சிஇடி -1 மூலதனம் ரூ .459.59 கோடி திரட்டியது.  முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு மூலம் ஜூலை 2019 இல் சி..டி I மூலதனம் ரூ.188.16 கோடியை திரட்டியது.  

செப்டம்பர் 27, 2019 அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM), வங்கியின் பங்குதாரர்கள் சி..டி I மூலதனத்தின் மூலம்  ரூ.1,000 கோடியும், மேலும் கடன் மூலதனம் ரூ.500 கோடியும் திரட்டும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர், அதே நேரத்தில் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ..500 கோடியிலிருந்து ரூ .650 கோடியாக அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மூலதனத்தை அதிகரிக்க வங்கி பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறது

வங்கி கிளைகள்

இந்த வங்கிக்கு 31/12/2019 நிலவரப்படி, 571 கிளைகள், 5 விரிவாக்க கவுண்டர்கள், 18 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசத்தில் 1,019 ஏ.டி.எம்கள்  உள்ளன, இந்த வங்கி பல்வேறு நித் திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. நீண்ட காலத்தில் நிலையான மற்றும் உயர் தரமான வணிகத்தை மேற்கொள்ள இந்த வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. வணிகத்தில் தொடர்ந்து தமிழகம் முன்னணியில் இருக்கிறது. 

லஷ்மி விலாஸ் பேங்க்-ன் இயக்குநர் குழு, 2019 டிசம்பர் 31 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2020 பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...