மருத்துவமனை கட்டணங்கள் இப்போது எளிதாகிறது
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் ஆரோக்கிய இஎம்ஐ (ஹெல்த் ஈ.எம்.ஐ.) அட்டைகளை வழங்க பஜாஜ் ஃபின் செர்வ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது!!
இந்த சுகாதார ஈ.எம்.ஐ. அட்டையானது மருத்துவ சிகிச்சைகளுக்கு தடையற்ற நிதி வசதியை ஏற்படுத்தித் தருகிறது சென்னை, ஜனவரி 21, 2020:- மருத்துவமனை அவசரநிலைகள் ஒருபோதும் திட்டமிடப்படுவதில்லை.
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான முழு செயல்முறைக்கான சவால்களில் ஒன்று நிதி ஏற்பாடு செய்வது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான சுகாதாரப் பாதுகாவலராக திகழும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுவும், பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவமனையில் தொந்தரவு இல்லாத கட்டண வழிவகை வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல் முறையை மேற்கொண்டுள்ளன.
பஜாஜ் ஃபின்சர்வ் குழுமத்தின் கடன் வழங்கும் பிரிவான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கூட்டு பிராண்டட் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டையை அறிமுகம் செய்வதாக அப்பல்லோ மருத்துவமனைகள் குழு அறிவித்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் பின்சர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டையானது, ஆசியாவின் சிறந்த மருத்துவ சேவையை, நிதி பற்றி கவலைப்படாமல் எளிதாக அணுகுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இந்த கூட்டு பிராண்ட் ஹெல்த்கேர் அட்டையின் பயனர்கள், தங்கள் மருத்துவச் செலவுகளை 12 மாத காலத்திற்குள் திருப்பிச் செலுத்தக்கூடிய எளிதான, செலவு இல்லாத வகையில் (மாதாந்திரத் தவணைத் தொகை - EMI - Equated Monthly Installment) ஈ.எம்.ஐ.-களாக மாற்றிக் கொள்ள முடியும். அப்பல்லோ மருத்துவமனைகள் - பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை, எளிதான ஈ.எம்.ஐ நிதி மற்றும் விரைவான கடன் செயலாக்கத்தை குறைந்தபட்ச காகித செயல் நடைமுறைகளுடன் வழங்குகிறது.
இதன் மூலம் ஆவணங்கள் அதிகம் கேட்கப்படும் தொந்தரவு தவிர்க்கப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டையானது உடனடி செயல்படுத்தல், ரூபாய் நான்கு லட்சம் (ரூ. 4 லட்சம்) வரை அதிக கடன் வரம்பு, அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள அவசர நடைமுறைக்கான முறை, முன்னுரிமை அணுகல் போன்ற கூடுதல் நன்மைகள் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை, தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் கூப்பன்கள் உள்ளிட்டவற்றையும் இந்த அட்டை வழங்குகிறது. முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய, அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை அனைத்து அப்பல்லோ மருத்துவமனைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழு மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனம் ஆகியவை ஏற்கெனவே அனைத்து சுகாதார மற்றும் நோய் கண்டறியும் சேவைகளுக்கு 100% நிதி வழங்க கைகோர்த்து இணைந்து செயல்பட்டன.
இந்த புதிய முன்முயற்சியானது, மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ளும் மக்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய முடியாதவர்களுக்கும் உதவும் வகையில் அமையும். அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை, ஆரோக்கிய காப்பீடு (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) இல்லாத நோயாளிகளுக்கும் அல்லது சிகிச்சைக் கட்டணத்தை விட காப்பீட்டு வரம்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கும் பயனளிக்கும்.
இந்த அட்டையின் தேசிய அளவிலான வெளியீட்டு விழாவில் பேசிய அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, “நாட்டின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையாக செயல்பட்டு, உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையை அனைவருக்கும் கிடைக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். குறிப்பாக உயிருக்கு ஆபத்தான அவசரகாலத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறையான மருத்துவ விளைவுகளுக்கு இடையில் வேறுபடுத்தும் காரணியாக கவனிப்பு மற்றும் பராமரிப்பின் தரம் அமைகிறது. அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை. நோயாளிகள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் நேரத்தில் சிகிச்சை செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த உலகத் தரம் வாய்ந்த மேம்பட்ட சுகாதார சேவையை அணுக அவர்களுக்கு உதவும் வகையில் அமையும். நோய் கண்டறியும் சேவைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை இந்த அட்டை எளிதில் வழங்கும். அறுவை சிகிச்சைக்கு முன்கூட்டியே பணம் சேகரிக்க காத்திருப்பது நிலைமையை மோசமாக்கக் கூடும். அதற்குக் காத்திருக்காமல் உடனடியாக சிகிச்சையைத் தொடர இந்த அட்டை உதவும்,” என்றார்.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சுனிதா ரெட்டி கூறுகையில், “மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது எளிமையான அணுகல் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான எங்கள் நோக்கமும் செயல்பாடும் தொடர்கிறது. இந்த அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை மூலம், தேவையான இடங்களில் உடனடி உதவியை எங்களால் வழங்க முடியும். சுகாதார காப்பீட்டைப் பொறுத்தவரை இந்தியாவில் காப்பீடு குறைவாக உள்ளது,
இது சிகிச்சைக்கான சூழல் ஏற்படும்போது நிதி திரட்ட போராடும் சூழலை குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக மருத்துவ அவசரகால சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் இந்த சிக்கல் அதிகரிக்கிறது. அப்பல்லோ மருத்துவமனைகள்-பஜாஜ் ஃபின்செர்வ் ஹெல்த் ஈ.எம்.ஐ அட்டை, பல குடும்பங்களுக்கு அழுத்தத்தைக் குறைக்கவும் சிகிச்சையில் கவனம் செலுத்தவும் உதவும். பணத்தை உடனடியாகச் செலுத்தாமல், எளிதான செலவு இல்லாத ஈ.எம்.ஐ.கள் மூலம் கட்டணம் செலுத்துவதன் மூலம் சிக்கல் தவிர்க்கப்படும்.” என்றார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ஜெயின் கூறுகையில், “அப்பல்லோ மருத்துவமனைகளுடன் இணைந்து கூட்டு பிராண்ட் ஹெல்த் இ.எம்.ஐ அட்டையை வெளியிடுவது இது முதல் முறையாகும். வாடிக்கையாளர்கள் தரமான சுகாதார சேவையை அணுகவும், அவர்கள் எளிதில் பணம் செலுத்துவதற்கு உதவும் வகையிலும் இந்த அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதான இ.எம்.ஐ நிதி மற்றும் விரைவான கடன் செயலாக்கத்தைப் பெறவே இந்த அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டையைப் பெறுவதற்கு எளிதான தகுதிகள் மற்றும் அணுகல் நடைமுறைகளை எங்கள் குழு உறுதி செய்துள்ளது. 21 முதல் 60 வயதுக்குட்பட்ட, வழக்கமான தொடர் வருமானம் உள்ள எந்தவொரு நபரும் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்த அட்டையைப் பெற்று இந்த முயற்சியின் மூலம் பயனடையலாம்.” என்றார்.
பான் அட்டை, ஆதார் அட்டை, ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் முறையாக கையொப்பமிடப்பட்ட ஈ.சி.எஸ் ஆணை போன்ற ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி கே.ஒய்.சி ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த சுகாதார ஈ.எம்.ஐ அட்டையைப் பெறலாம்.
நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் சென்று அட்டைக்கு விண்ணப்பித்து அதைப்பெறக்கூடிய வகையில் அப்பல்லோ மருத்துவமனைகள் அனைத்திலும் இதற்காக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை பற்றி….:
சென்னையில் 1983 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழுமமாக அப்பல்லோ குழுமம் திகழ்கிறது.
தற்போது 72 மருத்துவமனைகளில் சுமார் 12,000 படுக்கைகள் உள்ளன. 3,400 மருந்தகங்கள், 90 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் 110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன.
இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தெற்கு ஆசிய பகுதியிலேயே முதலாவதான ப்ரோட்டான் சிகிச்சை மையத்தை சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை அண்மையில் நிறுவியுள்ளது.
ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது.
இந்திய அரசாங்கம் அப்பல்லோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த அதிநவீன சிகிச்சையை, மருத்துவ தொழில்நுட்பங்களை வழங்குவதில் தலைமைத்துவத்துடன் அப்பல்லோ முன்னணி வகிக்கிறது. அப்பல்லோ குழுமம் மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும், நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
மேலும்
விவரங்களுக்கு www.apollohospitals.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
டுவிட்டர்: @HospitalsApollo
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் பற்றி…..:
பஜாஜ் ஃபின்சர்வ் குழுமத்தின் கடன் வழங்கும் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், நாடு முழுவதும் 36 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பன்முகப்படுத்தன்மை கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி.) ஆகத் திகழ்கிறது.
புனேவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் நுகர்வோர் நீண்ட கால கடன்கள், வாழ்க்கை முறை நிதி உதவி, டிஜிட்டல் நிதி உதவி, தனிநபர் கடன்கள், சொத்துகளுக்கு எதிரான கடன்கள், சிறு வணிக கடன்கள், வீட்டுக் கடன்கள், கடன் அட்டைகள், இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனக் கடன்கள், வணிக கடன் / சிறு குறு நடுத்தர நிறுவனக் கடன்கள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது.
நிதி ஆவண பத்திரங்களுக்கு எதிரான கடன்கள், கிராமப்புற வளர்ச்சிக்கான கடன்கள் நகைக் கடன்கள், நிலையான வைப்புத் தொகையுடன் கூடிய வாகன மறுநிதியளிப்பு கடன்கள் உள்ளிட்டவற்றையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டில் எந்தவொரு வங்கி சாரா நிதி நிறுவனமும் (என்.பி.எஃப்.சி.) பெறாத வகையில் எஃப்.ஏ.ஏ.ஏ / ஸ்டேபிள் என்ற மிக உயர்ந்த கடன் தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்த நிறுவனம் நீண்ட கால நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய சர்வதேச ‘பிபிபி’ மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த மதிப்பீட்டை இந்தியாவில் பெற்ற ஒரே வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி.) பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகும்.
மேலும் தகவல் அறிய https://www.bajajfinserv.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம்.
Media Contact: Violet Vaz, Bajaj Finserv, violet.vaz@bajajfinserv.in Ayushi Kakkar, Bajaj Finserv, ayushi.kakkar@bajajfinserv.in Kamalprit Singh, Bajaj Finserv, kamalprit.singh@bajajfinserv.in Aarthi Rajendran, Adfactors PR, aarthi.rajendran@adfactorspr.com Jayasankar S, Adfactors PR, jayasankar.s@adfactorspr.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக