மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய வணிக பிரீமிய வசூல் 35% உயர்ந்து ரூ. 12,787 கோடி


எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் புதிய வணிக பிரீமிய வசூல் 35% உயர்ந்து ரூ. 12,787 கோடி

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் புதிய வணிக பிரீமிய வசூல் 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட ஆரோக்கியமாக 35% உயர்ந்து ரூ. 12,787 கோடியாக அதிகரித்துள்ளது.


 நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக  எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance) உள்ளதுஇதன் புதிய வணிக பிரீமிய வசூல் 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் 35% அதிகரித்து ரூ. 12,787 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய 2018 ஆம் ஆண்டின் இதே காலத்தில் இது ரூ. 9,470 கோடியாக இருந்தது.

இந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாதுகாப்பு (protection) பாலிசிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பாதுகாப்பு பாலிசிகள் மூலமான புதிய வணிக பிரீமிய வசூல், 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் ரூ1,444 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட இது 37% அதிகமாகும். அந்தக் காலத்தில் இது ரூ. 1,056 கோடியாக இருந்தது. 


தனிநபர் புதிய வணிக பிரீமிய வசூல் 27% அதிகரித்து ரூ. 8,394  கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது ரூ.6,597 கோடியாக இருந்தது.

எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் (நிகர லாபம்), 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் ரூ. 892 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் சால்வன்ஸி விகிதம் (solvency ratio) 2019 டிசம்பர் உடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில் தொடர்ந்து  2.30 ஆக சிறப்பாக உள்ளது. சட்டப்படி இந்த விகிதம் 1.50 ஆக இருந்தால் போதுமானது

எஸ்.பி.ஐ லைஃப்  நிறுவனம், நிர்வகிக்கும் தொகை (AUM) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது 2019 டிசம்பரில் 22% அதிகரித்து ரூ. 1,64,191 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 1,34,153கோடியாக இருந்தது. நிறுவனத்தின் கடன்:பங்கு மூலதன விகிதம் ( debt-equity mix) 76:24 ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் 93%  கடன் பத்திர முதலீடுகள் AAA  தரக்குறியீடு மற்றும் சாவரின் ஆவணங்களாக (Sovereign instruments) உள்ளன.

இந்த நிறுவனம், பரந்துபட்ட விநியோக நெட் ஒர்க் (diversified distribution network) கொண்டு உள்ளது. 1,80,525  பயிற்சி பெற்ற காப்பீடு நிபுணர்களுடன் நாடு முழுக்க 923   அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும், வங்கிகள் மூலம் பாலிசி விநியோகம்  (bancassurance channel), முகவர்கள் மூலம் விநியோகம்தரகர்கள், நுண்  முகவர்கள், பொது சேவை மையங்கள், இணைய தளங்கள், இன்ஷுரன்ஸ் சந்தைப்படுத்தும் அமைப்புகள், நேரடி வணிகம் என பல வகைகளில் பாலிசியை விநியோகம் செய்து வருகிறது.

2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிந்த  ஒன்பது மாத  செயல்பாடுகள் (Performance for the nine months ended December 31, 2019)

புதிய வணிக பிரீமியம் (NBP) மற்றும் தனிநபர் புதிய வணிக பிரீமியம் முறையே  35% மற்றும் 27%  அதிகரிப்பு
  ஆண்டு பிரீமியம் சம நிலை (APE) 22% அதிகரித்து ரூ.  6,597 கோடியிலிருந்து  ரூ. 8,048 கோடியாக உயர்ந்துள்ளது
தனிநபர் பாதுகாப்பு பாலிசி புதிய வணிக பிரீமியம்  71% மற்றும் மொத்த பாதுகாப்பு  புதிய வணிக பிரீமியம் 37% வளர்ச்சியடைந்தது
ஆனுட்டி வணிகம் (Annuity busines) 320% வளர்ந்துள்ளது. இது புதிய வணிக பிரீமியத்தில் 6% பங்களிப்பு செய்கிறது
புதிய வணிகத்தின் மதிப்பு (VoNB) 27%  அதிகரித்து ரூ. 1,295 கோடியிலிருந்து ரூ. 1,646 கோடியாக  உள்ளது   
புதிய வணிக மதிப்பின் லாப வரம்பு (VoNB Margin),0.90% ( 90 பிபிஎஸ்) அதிகரித்து  19.6%லிருந்து  20.5% ஆக  அதிகரித்துள்ளது.
நிலைத்தன்மை அதிகரிப்பு விகிதம்: 13வது மாத நிலைத்தன்மை 2.38% அதிகரித்து 85.71%  ஆக உள்ளது.
25வது மாத நிலைத்தன்மை 2.57% அதிகரித்து  77.70%  ஆக உள்ளது.
·  செயல்பாட்டு  செலவு விகிதம் (Operating expense ratio) 6.9% -லிருந்து 6.1% ஆக குறைவு

Disclaimer

Except for the historical information contained herein, statements in this release which contain words or phrases such as 'will', ‘expected to’, etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward-looking statements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results, opportunities and growth potential to differ materially from those suggested by the forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to, the actual growth in demand for insurance and other financial products and services in the countries that we operate or where a material number of our customers reside, our ability to successfully implement our strategy, including our use of the Internet and other technology our exploration of merger and acquisition opportunities, our ability to integrate mergers or acquisitions into our operations and manage the risks associated with such acquisitions to achieve our strategic and financial objectives, our growth and expansion in domestic and overseas markets, technological changes, our ability to market new products, the outcome of any legal, tax or regulatory proceedings in India and in other jurisdictions we are or become a party to, the future impact of new accounting standards, our ability to implement our dividend policy, the impact of changes in insurance regulations and other regulatory changes in India and other jurisdictions on us. SBI Life Insurance Company Limited undertakes no obligation to update forward looking statements to reflect events or circumstances after the date thereof.
This release does not constitute an offer of securities.

For investor queries please call Sangramjit Sarangi at + 91 22 6191 0281or email investorrelations@sbilife.co.in

For further press queries please call Santosh Setty at +91-22-6191 0034 / Minakshi Mishra at +91-22-6191 0140or email santosh.setty@sbilife.co.in /  minakshi.mishra@sbilife.co.in



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...