பத்து ஆண்டுகளில் 1,600% வருமானம் தந்த பாட்டா இந்தியா
பங்கில் இப்போதும் முதலீடு செய்யலாமா?
தாராளமாக முதலீடு செய்யலாம். முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனம் பாட்டா இந்தியா. இதன் பங்கு விலை, 2009 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளில் 1,600% உயர்ந்திருக்கிறது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் பங்கானது ஐந்து ஆண்டுகளில் 168.12% மூன்று ஆண்டுகளில் 290% ஒரு வருடத்தில் 54.44% விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது பி.எஸ்.இ-ன் சென்செக்ஸ் குறியீட்டு வளர்ச்சியை விட அதிகம்.
பாட்டா இந்தியாவின் ஃபண்டமென்டல்கள் வலிமையாக இருப்பதால் இந்த நிறுவனப் பங்கில் எப்போதும் முதலீடு செய்யலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். பல தரக்குறியீட்டு மற்றும் பங்கு தரகு நிறுவனங்கள், இந்தப் பங்கில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றன.