கார்வி பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள்
இப்போது என்ன செய்ய வேண்டும்?
பங்கு முதலீட்டாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து,
கடன்
பெற்ற
கார்வி
நிறுவனத்துக்குப் புதிய
முதலீட்டாளகளைச் சேர்க்கவும், பங்கு
வர்த்தகத்தில் ஈடுபடவும் செபி
அமைப்பு 2019 நவம்பர் 22-ம்
தேதி
தடை
விதித்தது.
சுமார் 83,000 முதலீட்டாளர்களுக்கு அடமானம் வைக்கப்பட்ட பங்குகள், அவர்களின் டீமேட்
கணக்குகளில் மீண்டும் வரவு
வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார்
7,000 முதலீட்டாளர்களுக்குப் பங்குகளைத் திருப்பி அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, முதலீட்டாளர்களின்
டி.பி கணக்கில் பங்குகள் இருந்தால், பிரச்னை எதுவும் இல்லை.
அப்படியல்லாமல்
தரகு
நிறுவனத்தின் பூல்
(Pool) கணக்கில் பங்குகள் இருந்தால், அவை
அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை
‘ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’-ஐ
வைத்து
தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு, முதலீட்டாளர்கள் டீமேட்
கணக்கு
வைத்திருக்கும் கார்வி
கிளையை
அணுகி
‘ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’ பெறலாம்.
ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்டை
அனைத்து முதலீட்டாளர்களும் ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.
கார்வி
பங்கு அடமானப் பிரச்சினையில் செபி அமைப்பு 2020 ஜனவரி 6 ஆம்
தேதி இறுதி முடிவை
அறிவிக்க கூடும் என்கிறார்கள்.