மொத்தப் பக்கக்காட்சிகள்

செல்வ உருவாக்கம் மற்றும் வரிச் சேமிப்பு- இரட்டை பலன்கள் Equity Linked Savings Scheme -ELSS


செல்வ உருவாக்கம் மற்றும் வரிச் சேமிப்பு-  இரட்டை பலன்கள்
நேரம் மிக விரைவாக கடந்து, நிதியாண்டு 2019-20 விரைவில் முடிவுக்கு வருகிறது. மேலும் வரி செலுத்துவோர்களில் பெரும்பாலானவர்கள் விஷயங்களை ஒழுங்காக வைத்திருப்பது குறித்து பீதியுடன் இருக்கிறார்கள்.வருமான வரியைக் குறைக்க உதவும் பல்வேறு வழிகளை அறிய அவர்கள் தங்கள் நிதி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்களை அணுகத் திட்டமிட்டிருக்கலாம்மேலும்,ஒருவர் எவ்வாறு வரிச் சுமைகளை  குறைந்தபட்சமாகஎவ்வளவு குறைக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் உண்மையில் அவரின் வரிச் சுமையைக் குறைக்க முடியும்அவர், வரியைக் குறைக்க மத்திய  அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தலாம்.வருமான வரியைச் சேமிக்க, பங்குச் சந்தையுடன்  இணைந்த சேமிப்பு திட்டம் (Equity Linked Savings Scheme -ELSS) மிகவும் நம்பிக்கைக்குரிய வழிகளில் ஒன்றாகும்.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகையாகும்இது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டின் பல பலன்களைப் பெற உதவுகிறது. இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்,வழங்கும் வரிச் சலுகை மிகவும் பிரபலமானதுமேலும்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதன் பலன்களும் இந்த ஃபண்டின் மூலம் கிடைக்கும்.
இதே போன்ற வரிச் சலுகையை வழங்குவதால்,பெரும்பாலானவர்கள் பி.பி.எஃப்என்.எஸ்.சிஎஃப்.டி போன்ற பிற வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், இ.எல்.எஸ்.எஸ் மற்ற வரிச் சேமிப்பு திட்டங்களை விடப் பல பலன்களைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், வரிக்கு உட்பட்ட மொத்த வருமானத்தில் ரூ. 1.50 லட்சம் கழித்துக்கொள்ள முடியும். இது செல்வத்தை உருவாக்குவதன் ஒருவரின் எதிர்கால தேவைகள் / குறிக்கோள்களை நிறைவேற்ற  உதவக்கூடும். மேலும், இ.எல்.எஸ்.எஸ் –ன் முதலீட்டு பூட்டு (Lock-in period) காலம் 3 ஆண்டுகள். சந்தை ஏற்ற இறக்கம் மூலம் ஏற்படும்  இடர்ப்பாட்டைக் குறைக்கும்.


யூ.டி.ஐ. லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (டேக்ஸ் சேவிங்) {UTI Long Term Equity Fund (Tax Saving)}, இது போன்ற ஒரு வரிச் சலுகையை 1999 டிசம்பர் முதல் வழங்கி வருகிறது. இந்த ஃபண்ட், பங்குச் சந்தையுடன்  இணைந்த சேமிப்பு திட்டம் (Equity Linked Savings Scheme -ELSS) ஆகும்.  இது, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நல்ல வருமானத்துக்கான வாய்ப்பு மற்றும் வரியைச் சேமிக்க என இரட்டை பலன்களை வழங்குகிறது. இந்த ஃபண்ட் 2019 நவம்பர் 30, நிலவரப்படி 1,200 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறதுஇதில் முதலீடு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை1.72 லட்சத்துக்கும் அதிகமாகும். இதில்,இடர்ப்பாட்டை ஈடு செய்த சிறந்த வருவாயை வழங்கும் நோக்கத்துடன், நல்ல  வருவாய் விகிதங்கள், பணப் புழக்கம் மற்றும் சிறந்த நிர்வாகம் கொண்ட வணிகங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த ஃபண்ட், அனைத்து பிரிவு பங்குச்  சந்தை மதிப்பை (market capitalization) கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்டாக (multi-cap fund) உள்ளது. 2019 நவம்பர் 30, நிலவரப்படி, இந்த ஃபண்டில் திரட்டப்பட்ட நிதியில் சுமார் 62%  மிகப் பெரிய நிறுவனப் பங்குகளிலும் மீதி மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவையில் (portfolio) ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் லிமிடெட், ஆக்சிஸ் பேங்க் லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐ.டி.சி லிமிடெட், இண்டஸ்இந்த் பேங்க், குஜராத் கேஸ் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட், மற்றும் என்.டி.பி.சி லிமிடெட், ஆகிய நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு 44%-க்கும் அதிகமாக உள்ளது.
யூ.டி.ஐ. லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (டேக்ஸ் சேவிங்), அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் உள்ள மூன்றாண்டு கால முதலீட்டுப் பூட்டுக் காலம் நீண்ட காலத்தில் இடர்ப்பாட்டை ஈடு செய்து நல்ல வருமானத்தை பெற்றுத் தரக்கூடும். மேலும்இந்தத் திட்டத்தில்  செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80சி கீழ்  நிதி ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...