மொத்தப் பக்கக்காட்சிகள்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் : புதிய பங்கு வெளியிட செபியிடம் விண்ணப்பம்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், செபி அமைப்பிடம் பங்கு வெளியிட அனுமதி கேட்டு விண்ணப்பம் 
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (Equitas Small Finance Bank Limited - Equitas SFB), கிளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும். மேலும், 2018-19 ஆம் நிதி ஆண்டு நிலவரப்படி, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மற்றும் மொத்த வைப்பு நிதியின் அடிப்படையில் (assets under management and total deposits) இரண்டாவது ரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும்.(ஆதாரம்கிரிசில் அறிக்கை). இந்த வங்கி, பங்கு வெளியிட அனுமதி (DRHP - Draft Red Herring Prospectus) கேட்டு செபி (SEBI) அமைப்பிடம்  விண்ணப்பம்  செய்திருக்கிறது. 
ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி, ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆக மாற்றப்பட்ட பிறகு அதன் கடன் வழங்குவதைப் பரவலாக்கி இருக்கிறது. மற்றும் நுண்கடன் வணிகங்களுக்கு (microfinance business) கொடுத்திருக்கும் கடன் அளவை இதர நுண்கடன் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது குறைத்திருக்கிறது.  (ஆதாரம்கிரிசில் அறிக்கை) இந்தியாவில் நிதிச் சேவையைப் பெறாத வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதை மையமாகக் கொண்டு அவர்களுக்குப்  பலவிதமான வங்கி திட்டங்கள் மற்றும் சேவைகளை  இந்த சிறிய வங்கி வழங்கி வருகிறது. இந்தப் பிரிவுகளுக்குள் அனைவருக்கும்  நிதிச் சேவை வழங்குவதில்  இந்த நிறுவனம் வலிமையான உள்ளது. 2007 ஆம் ஆண்டில் அவர்களின் குழுமம், ஈ.எம்.எஃப்.எல் (ஈக்விடாஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்- Equitas Micro Finance Limited) மூலம் நுண் நிதிக் கடன்களை வழங்கும் ஒரு வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனமாக ( என்.பி.எஃப்.சிசெயல்பட்டது.
இந்த ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (Initial Public Offering - IPO) ரூ. 5,500 மில்லியன் (“புதிய வெளியீடு”) மற்றும் ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (“நிறுவனர் விற்பனை செய்யும் பங்குகள் மற்றும் அது போன்ற “விற்பனைக்குள்ள பங்குகள் ”) 80,000,000 வரை பங்குகளை விற்பனை செய்வதாகும். இந்தப் பங்கு வெளியீடு என்பது தகுதியான .ஹெச்.எல் பங்குதாரர்களுக்கு (“.ஹெச்.எல் பங்குதாரர் இட ஒதுக்கீடு”) ரூ.1,000 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்றும் தகுதியான பணியாளர்களுக்கு (“பணியாளர் இட ஒதுக்கீடு”). ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி,வங்கியின் எதிர்கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வங்கியின் அடுக்கு I  மூலதனத்தை (Tier I capital) அதிகரிப்பதற்கான நிதியைத் திரட்ட இந்தப் பங்கு வெளியீட்டில் இறங்குகிறது. ஜே.எம்ஃபைனான்சியல் லிமிடெட்எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ..எஃப்.எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியவை இந்தப் பங்கு வெளியீட்டின்  முன்னணி மேலாளர்கள் (Book Running Lead Managers - BRLMs) உள்ளனர்.
இந்தப் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகியவற்றில் 
பட்டியலிடப்படும்
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்  பற்றி..
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் (Equitas Small Finance Bank Limited -(Equitas SFB) கிளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும். மேலும், 2018-19 ஆம் நிதி ஆண்டு (Fiscal 2019) நிலவரப்படி, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மற்றும் மொத்த வைப்பு நிதியின் அடிப்படையில் (assets under management and total deposits) இரண்டாவது பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும். (ஆதாரம்கிரிசில் அறிக்கை).
ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி, ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆக மாற்றப்பட்ட பிறகு அதன் கடன் வழங்குவதைப் பரவலாக்கி இருக்கிறது. மற்றும் நுண்கடன் வணிகங்களுக்கு (microfinance business)கொடுத்திருக்கும் கடன் அளவை இதர நுண்கடன் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது குறைத்திருக்கிறது. (Source: CRISIL Report). (ஆதாரம்கிரிசில் அறிக்கை)
இந்தியாவில் நிதிச் சேவையைப் பெறாத வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதை மையமாகக் கொண்டு அவர்களுக்குப்  பலவிதமான வங்கி திட்டங்கள் மற்றும் சேவைகளை  இந்த சிறிய வங்கி வழங்கி வருகிறது.
இந்தப் பிரிவுகளுக்குள் அனைவருக்கும்  நிதிச் சேவை வழங்குவதில்  இந்த நிறுவனம் வலிமையான உள்ளது. 2007 ஆம் ஆண்டில் அவர்களின் குழுமம், ஈ.எம்.எஃப்.எல் (ஈக்விடாஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்- Equitas Micro Finance Limited) மூலம் நுண் நிதிக் கடன்களை வழங்கும் ஒரு வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனமாக (என்.பி.எஃப்.சிசெயல்பட்டது. ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பி, 2011 ஆம் ஆண்டு முதல் .எச்.எஃப்.எல் மூலம் வீட்டு நிதி வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் 2012 ஆம் ஆண்டில்  பெற்ற அதன் சொத்து நிதி உரிமத்தின் (asset finance license) மூலம் முந்தைய வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனம் மூலம் வாகனக் கடன் மற்றும் எம்.எஸ்.இ கடன்களை வழங்கி வருகிறதுஇந்தக் கடன்களை  முதன்மையாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுக்கு அளித்து வருகிறது. வணிக மாதிரி காலப் போக்கில் மாற்றப்பட்டாலும்நிதிச் சேவை பெறாதவர்களுக்குக் கடன் வழங்குவதை முக்கிய சேவையாக மேற்கொண்டு வருகிறது.

செபி விண்ணப்பம் (DRHP) இணைப்பு: https://www.jmfl.com/docs/default-source/default-document-library/draft-red-herring-prospectus327fb681d5a0683b8507ff0300a28ed8.pdf?sfvrsn=0


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...