முதலீட்டாளர்களின்
பங்குகளை அடமானம் வைத்து
நிதி
திரட்டும் மோசடியில் ஈடுபட்டதால் கார்வி
பங்கு
தரகு நிறுவனத்தின் அனைத்து தரகு
உரிமங்களும் ரத்து
செய்யப் பட்டுள்ளன.
பங்குச் சந்தைகளான என்.எஸ்.இ, பி.எஸ்.இ இரண்டும் இந்த
நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஹைதராபாத்தை தலையிட
மாகக்
கொண்ட
கார்வி
நிறுவனம் நாட்டின் முன்னணி தரகு
நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது 2016-ம்
ஆண்டு
முதல்
முதலீட்டாளர்களின் ரூ.2,300
கோடி
மதிப்பிலான பங்குகளை முறைகேடாக பயன்
படுத்தி நிதி
திரட்டி உள்ளது.
இந்த நிதியை
வேறு
கணக்குக்கு மாற்றி
மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதை
தேசிய
பங்குச் சந்தை (என்.எஸ்.இ) சமீபத்தில் கண்டுபிடித்தது.
இதையடுத்து கார்வி
நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு சந்தை
கட்டுப்பாட்டு ஆணையமான செபி
தடை
விதித்தது.
புதிய முதலீட்டாளர்களைச் சேர்க்கவும், முதலீட்டாளர்கள் நிதி
மற்றும் பங்குகளை வர்த்தகம் செய்யவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் தற்போது கார்வி
நிறுவனத்தின் பங்கு
தரகு
உரிமங்கள் ரத்து
செய்யப்பட்டுள் ளன.
இதன்படி கேப்பிட்டல் மார்க்கெட், எஃப்
அண்ட்
ஓ,
கரன்சி
டெரிவேட்டிவ்ஸ், கடன்
சந்தை,
எம்.எஃப். எஸ்.எஸ் மற்றும் கமாடிட்டி டெரிவேட்டிவ் என
அனைத்துவிதமான வர்த்தக உரிமங்களும் ரத்து
செய்யப்பட்டுள்ளன.
தற்போது கார்வியில் வர்த்தக கணக்குகளை வைத்திருப்பவர்கள், பிற
தரகு
நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என
என்.எஸ்.இ, பி.எஸ்.இ தெரிவித்துள்ளன.
அதேசமயம், கார்வி
நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை
வழங்க
‘பவர்
ஆஃப்
அட்டர்னி’ நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள
அனுமதி
வழங்குமாறு செபியிடம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், இந்த
மனுவை
செபி
நிராகரித்துள்ளது. தொடர்ந்து கார்வி
நிறுவனத்தின் செயல்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கார்வி மோசடி
விவகாரத் தில்
செபியின் உடனடி
நடவடிக்கைகளால், அந்த நிறுவனத்தில் கணக்கு
வைத்திருந்த 90 சதவிகித முதலீட் டாளர்களின் பங்குகள் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று
என்.எஸ்.டி.எல் தெரிவித்துள் ளது.
மொத்தமான 95,000 முதலீட்டாளர்களில் ஏறக்குறைய 83,000 முதலீட்டாளர்களின் பங்குகள் திரும்ப கிடைத்துள்ளன. மீதமுள்ள முதலீட்டாளர்களின் பங்குகள் விரைவில் வழங்க
நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக