மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்: குறுகிய கால முதலீடு, ரிஸ்க் குறைவு, நடுத்தர அளவு வருமானம், வரிச் சலுகை

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்

முதலீட்டாளர்கள், தங்களது குறுகிய கால உபரி தொகையை குறைவான இடர்ப்பாடு, குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் மற்றும் வருமான வரிச் சலுகை ஆகியவற்றுடன் மூலதன ஆதாய அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Arbitrage Fund) -ல் முதலீடு செய்லாம். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையில் (Equity Portfolio), பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க இடர்ப்பாட்டை இந்த ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகள் பாதுகாப்பதாக இருக்கின்றன. அதாவது, இது, பங்குச் சந்தையின் எந்த திசை போக்கின் இடர்ப்பாட்டையும் குறைக்கிறது.

 தற்போதைய சந்தை சூழலில், கடன் பத்திரப் பிரச்னைகள் மற்றும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிக இடர்ப்பாட்டை தவிர்க்கும் விதமாக, ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள், குறுகிய காலத்துக்கு பணத்தை போட்டு வைக்க ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீட்டு வழியாக இருக்கிறது. இந்தப் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவை முதலீட்டாளர்களின் கவலையை போக்கி அதிக வருமானத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

கடன் மியூச்சுவல் ஃபண்ட்-க்கு கடன் பத்திரங்கள் தேர்வில், நிதி மேலாளர் 175-250 நாட்கள் குறைந்த முதிர்வு காலத்துடன் தரமான கடன் பத்திரங்களில் (தரக்குறியீடு AAA, A1 + போன்றவை) கவனம் செலுத்துகிறார். யூ.டி.ஐ ஆர்பிட்ரேஜ் (UTI Arbitrage Fund) என்பது கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்ப கால ஃபண்ட்களில் ஒன்று. இப்போது வெவ்வேறு கடன் சந்தை மற்றும் பங்குச் சந்தை சுழற்சிகளில் 13 ஆண்டு கால சாதனையை படைத்துள்ளது.

இந்த ஃபண்ட் அதன் வழக்கமான மற்றும் நேரடி திட்டங்களின் (Regular and Direct plans) கீழ் மாதம்தோறும் டிவிடெண்ட் வழங்கியுள்ளதோடு நல்ல வருமான செயல்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறது இந்த ஃபண்ட் அதன் வழக்கமான குரோத் ஆப்ஷனின் கீழ் தினசரி அடிப்படையில் 6 மாத காலத்தில் சராசரியாக 6.47% (Rolling returns) வருமானம் தந்துள்ளது (அக்டோபர் 2014 முதல் அக்டோபர் 2019 வரையிலான கால கட்டத்தில்). அதே காலகட்டத்தில், இந்த ஃபண்ட் 6 மாத தினசரி ரோலிங் வருமானம் அடிப்படையில் 4.95% (குறைந்தபட்சம்) முதல் 9.37% (அதிகபட்சம்) வரையில், எதிர்மறையான வருமானம் (Negative Return) எதுவும் இல்லாமல் வருமானம் தந்திருக்கிறது.
 கூட்டு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில், இந்த ஃபண்ட் அதன் வழக்கமான திட்டத்தின் கீழ் 6.40% மற்றும் நேரடி திட்டத்தில் 6.92% வருமானம் ஓராண்டு அடிப்படையில் வருமானம் வழங்கியுள்ளது. (31 அக்டோபர் 2 019 நிலவரப்படி).கடன் சார்ந்த ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு உரிய வரியை (மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் விநியோகம்) பெறுகிறது.


மாதாந்திர டிவிடெண்ட் விநியோகம் குறித்த நியாயமான வரலாற்றை இந்த ஃபண்ட் கொண்டுள்ளது. குறிப்பிட்ட கால வருமானமாக முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் பெற்றது, தங்கள் நிதி தேவைகளை ஒரு முழுமையான முறையில் திட்டமிட உதவும். இது தவிர நிகர சொத்து மதிப்பு (NAV) அதிகரிப்பு, ஒட்டுமொத்த வருமானத்தையும் கூட்டுகிறது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...