சிறு முதலீட்டாளர் நாள் நவம்பர் 3
தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நவம்பர் 3 ஆம் தேதியை சிறு முதலீட்டாளர் தினம் ஆக கொண்டாட முடிவு செய்துள்ளது.
இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 3, 1994 அன்று உலகின் முதல் டீமேட் கணக்குகளை கொண்ட பங்குச் சந்தை ஆக தேசிய பங்குச் சந்தை (NSE), உருவானது. அதாவது, அன்று முதல் என்.எஸ்.இ.-ல் பங்குகள் எலெக்ட்ரானிக் முறையில் டீமேட் வடிவில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதன் நினைவாக ஆண்டு தோறும் நவம்பர் 3 ஆம் தேதியை அது சிறு முதலீட்டாளர் தினம் ஆக கொண்டாடுகிறது.
சில்லறை முதலீட்டாளர் தினம் என்எஸ்இ -யின் குறிக்கோள், தொலைநோக்கு பார்வை, அனைவருக்கும் நிதிக் கலவி ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. இதன் விளைவாக நாட்டில் மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்கள் நிதி மற்றும் முதலீட்டு அறிவைப் பெறுவார்கள் எனலாம்.