குறுகிய கால ஏற்ற இறக்கத்த்திற்கு ஏற்ற ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள்
பங்குச் சந்தையின் அதிக ஏற்ற இறக்கம் காரணமாக, முதலீட்டாளர்களின் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் (Arbitrage funds) பக்கம் திரும்பி இருக்கிறது.
முதலீட்டாளர்கள், தங்களது குறுகிய கால உபரி நிதியை குறைவான இடர்ப்பாடு, குறிப்பிட்ட இடைவெளியில் வருமானம் மற்றும் வரிச் சலுகை ஆகியவற்றுடன் மூலதன ஆதாய அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட, இந்த ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை (Equity portfolio) முழுமையாக பாதுகாப்பதாக (Hedge) ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகள் இருக்கின்றன. இது, பங்குச் சந்தையின் எந்த திசை போக்கின் இடர்ப்பாட்டையும் குறைக்கிறது.
யூ.டி.ஐ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (UTI Arbitrage Fund) என்பது 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ஆரம்ப கட்ட ஃபண்ட்களில் ஒன்றாகும். இப்போது வெவ்வேறு சந்தை சுழற்சிகளில் 13 ஆண்டு கால சாதனை படைத்துள்ளது.
இந்த ஃபண்ட் அதன் வழக்கமான மற்றும் நேரடி திட்டங்களின் (Regular and Direct plans) கீழ் மாதம்தோறும் டிவிடெண்ட் வழங்கியுள்ளதோடு நல்ல கண்ணியமான செயல்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஃபண்ட் அதன் வழக்கமான குரோத் ஆப்ஷனின் கீழ் தினசரி அடிப்படையில் 6 மாத காலத்தில் சராசரியாக 6.48% (Rolling returns) வருமானம் தந்துள்ளது (செப்டம்பர் 2014 முதல் செப்டம்பர் 2019 வரையிலான கால கட்டத்தில்). அதே காலகட்டத்தில், இந்த ஃபண்ட் 6 மாத தினசரி ரோலிங் வருமானம் அடிப்படையில் 4.95% (குறைந்தபட்சம்) முதல் 9.37% (அதிகபட்சம்) வரையில், எதிர்மறையான வருவாய் (Negative returns.) எதுவும் இல்லாமல் வருமானத்தை ஈட்டியுள்ளது.
கூட்டு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில், இந்த ஃபண்ட் அதன் வழக்கமான திட்டத்தின் கீழ் 6.11% க்கும் மேலாகவும், நேரடி திட்டத்தில் 6.63%-க்கும் மேலாகவும் மற்றும் 1 / 3 /5 ஆண்டு அடிப்படையில் வருமானம் வழங்கியுள்ளது. (30 செப்டம்பர் 2 019 நிலவரப்படி). கடன் சந்தை சார்ந்த ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஃபண்ட் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களுக்கு உரிய வரியை (மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் விநியோகம்) பெறுகிறது.
மாதாந்திர டிவிடெண்ட் விநியோகம் குறித்த நியாயமான வரலாற்றை இந்த ஃபண்ட் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட கால வருமானமாக முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் பெற்றது, தங்கள் நிதி தேவைகளை ஒரு முழுமையான முறையில் திட்டமிட உதவும். இது தவிர நிகர சொத்து மதிப்பு (NAV) அதிகரிப்பு ஒட்டுமொத்த வருவாயையும் கூட்டுகிறது. கடன் பிரச்னை மற்றும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிக இடர்ப்பாடு இருக்கும் தற்போதைய சூழலில், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் குறுகிய காலத்தில் முதலீடு செய்ய, ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீட்டு வழியை வழங்க முடியும். பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை முழுமையாக பாதுகாப்பதாகவும் அதிக வருமானத்தை பெற ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளும் இருக்கின்றன.
கடன் சந்தை சார்ந்த முதலீடுகளில், நிதி மேலாளர் (Fund manager), 175-250 நாட்கள் குறைந்த முதிர்வு காலத்துடன் கூடிய தரமான கடன் திட்டங்களில் (AAA, A1 + போன்ற தரக்குறியீடு) கவனம் செலுத்தி வருகிறார்.
யூ.டி.ஐ ஆர்பிட்ரேஜ் ஃபண்ட், அதன் சாதனைப் பதிவின் அடிப்படையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக இருக்ககூடும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபண்டின் நிர்வகிக்கப்படும் நிதி அளவு கணிசமாக வளர்ந்துள்ளது, அதாவது ஆகஸ்ட் 2018 இல் ரூ. 1,170 கோடியாக இருந்த, இதன் நிர்வகிக்கும் தொகை ( AUM), 2019 செப்டம்பர் 30 ஆம் தேதியில் ரூ. 2,751 கோடியாக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக