இந்திய நுகர்வோர் கடன் சந்தையில் மந்தநிலை தொடர்கிறது;
பாதுகாப்பற்ற கடன் மீதான கவலை அதிகரிக்கிறது
சமீபத்திய டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை, சில நுகர்வோர் கடன் திட்டங்களில்
இடர்ப்பாடுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது
மும்பை, அக்டோபர் 30, 2019 – பாதுகாப்பான கடன்
திட்டங்களால் இயக்கப்படும், இந்தியாவின் நுகர்வோர் கடன் சந்தையின் வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அத்துடன், வங்கிசாரா நிதி நிறுவனங்களும் (non-banking financial
companies –NBFCs) அழுத்தத்தில் இருக்கின்றன. காரணம், அதிக இடர்ப்பாடு கொண்ட பாதுகாப்பற்ற கடன்களுக்கு
(higher-risk
unsecured credit) அவற்றின் சமீபத்திய போர்ட்ஃபோலியோ
மாற்றப்பட்டதாக இருக்கிறது. புதிதாக வெளியிடப்பட்ட
2019 ம் காலண்டர் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான, டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL CYQ2
2019) தொழில் நுண்ணறிவு அறிக்கையில் (Industry Insights
Report -IIR) இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நுகர்வோர் கடன் (consumer credit) வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த என்.பி.எஃப்.சி-கள், வங்கிகளுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறைவை கண்டுள்ளன. என்.பி.எஃப்.சி-கள் தொடர்ந்து நிதித்
திரட்டுவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டன.
இதன் விளைவாக பெரிய மதிப்புக் கொண்ட கடன்களை வழங்குவதை குறைத்துக்கொண்டு சிறிய அளவிலான தனிநபர் கடன்களுக்கு (personal loans) மாறி
வருகின்றன.
அனைத்து முக்கிய கடன் திட்டங்களிலும் நுகர்வோர் கடன் நிலுவைகள் 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 17.1% (YOY) அதிகரித்துள்ளன. இந்த
வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 23.5% ஆக
இருந்தது.
வாகனக் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்துகளுக்கு எதிரான கடன்கள் (எல்ஏபி) ஆகியவற்றின்
அதிகரிப்பை விட கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களின் வளர்ச்சி அதிகரிப்பு கணிசமாக
அதிகமாக உள்ளது.
கடன் கேட்டு அணுகிய மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 21.7% அதிகரித்துள்ளது, இது உலகெங்கிலும் உள்ள மிகப் பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் அதிகமாக இருக்கிறது.
2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின்
வளர்ச்சியான 26.3% உடன்
ஒப்பிடும்போது குறைவாகும்.
பெரும்பாலான நுகர்வோர் கடன் திட்டங்களில் தவணை சரியாக
கட்டாத விகிதங்கள் 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டு கணக்கில் குறைந்துவிட்டன. இதில், சொத்துகளுக்கு எதிரான கடன்கள்
மட்டும் விதிவிலக்கு.அதேநேரத்தில், அதிக கடன் வளர்ச்சி இந்த விகிதத்தை
குறைக்ககூடும்.
இந்தக் குற்றங்களை நிவர்த்தி செய்ய, டிரான்ஸ்யூனியன் பல நிலையான
கடன் கணக்குகளை
ஆய்வு செய்தது. இந்த நிலையான மொத்த
பகுப்பாய்வு (static pool
analysis)-வின்டேஜ் பகுப்பாய்வு
(vintage analysis) என்றும் அழைக்கப்படுகிறது . தவணை
தவறுவது பொதுவாக மேம்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், என்.பி.எஃப்.சிகள் வழங்கிய சிறிய அளவிலான
தனிநபர் கடன்கள் மற்றும் வாகனக் கடன்களில் இது மேம்பட்டுள்ளது.
“என்.பி.எஃப்.சிகளின்
நிதி புழக்க நெருக்கடி
(liquidity crisis) ஒரு தீவிர கவலையாகி வருகிறது, ஏனெனில் இது பரந்த பொருளாதார நடவடிக்கைகளில் பாதகமான
மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்” என டிரான்ஸ்யூனியன் சிபில்-ன்
ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் துணைத் தலைவர் அபய் கெல்கர் (Abhay Kelkar, vice president of research
and consulting for TransUnion CIBIL) தெரிவித்தார்.
“இந்த பொருளாதார மந்தநிலையிலும் ஒட்டுமொத்த நுகர்வோர்
கடன் தவணை குறைபாடுகள் பெரும்பாலும்
நிலையானதாக இருக்கிறது. இருந்தபோதிலும், என்.பி.எஃப்.சி நிறுவனங்களில் சில அழுத்தங்கள் இருப்பதை
எங்கள் தரவு குறிக்கிறது. கடன் வழங்கும் சந்தையின் ஆரோக்கியத்திற்கு வலுவான கடன் இடர்ப்பாடு மேலாண்மை
கொள்கைகள் எப்போதும் முக்கியமானதாகும். கடன் போர்ட்ஃபோலியோ செயல்திறனை பலவீனப்படுத்துவதன் தாக்கத்தை
குறைக்க விழிப்புஉணர்வு கண்காணிப்பு மற்றும் சிந்தனை உத்திகள் அவசியம்.”
பாதுகாப்பற்ற கடன் வகைகளில்,
கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களின் வலுவான வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின்
இரண்டாவது காலாண்டிலும் தொடர்ந்தது.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் புதிய கிரெடிட் கார்ட்களின்
ஆரோக்கியமான வளர்ச்சி அதிகரிப்பு 30.2% ஆக உள்ளது. இதனால், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் மொத்த கிரெடிட் கார்டு கணக்குகளின் எண்ணிக்கையில் 29.5% வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அதே காலகட்டத்தில், மொத்த கிரெடிட் கார்டு நிலுவைகள் 34.3% அதிகரித்துள்ளன.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில், புதிய
கிரெடிட் கார்ட்கள் வழங்குவது அதிக இடர்ப்பாடு பிரிவுக்கு மாறியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில், 32.1% புதிய கார்ட்களை பெற்ற
நுகர்வோர் அதிக இடர்ப்பாட்டை கொண்டவர்களாக (below-prime risk tiers- subprime and near prime)
இருக்கிறார்கள். இது, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 26.4% ஆக இருந்தது.
பிலோ – பிரைம் நுகர்வோர் (Below-prime consumer)
என்பவர்கள், கடன் வாங்குபவர்களில்
அதிக இடர்ப்பாடுகளை கொண்டவர்கள். இவர்கள், டிரான்ஸ்யூனியன் சிபில் வி 2 கிரெடிட் ஸ்கோர்
700 அல்லது அதற்கும் குறைவாக கொண்டிருப்பவர்கள். முழு பட்டைகள்
(bandings) இப்படி வரையறுக்கப்படுகின்றன: சப்பிரைம் = 300-650, பிரைம்
அருகில் = 651-700, பிரைம் = 701-750, பிரைம்
பிளஸ் = 751-800, மற்றும்
சூப்பர் பிரைம்= 801-900. அதிக மதிப்பெண்கள் குறைந்த இடர்ப்பாட்டைக் குறிக்கின்றன.
கடந்த ஆண்டில் அதிக இடர்ப்பாடு கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு மாறியப்போதிலும், கிரெடிட் கார்டு
குற்றங்கள் 2019 இரண்டாம் காலாண்டில் 0.27% மேம்பட்டு 1.62% ஆக உள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளில் நிலுவை
நிலை தவணை தவறும் குற்றங்கள் 1.85-1.90% ஆக உள்ளன.
விண்டேஜ் பகுப்பாய்வு, அனைத்து
இடர்ப்பாடு அடுக்குகளிலும் இந்தத்
தவறு மேம்படுவதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், கடன் போர்ட்ஃபோலியோ நிலையில் அதிகமாக காணப்படவில்லை. தனிநபர் கடன் நிலுவைகள், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 35.0% வளர்ச்சியடைந்துள்ளன. கூடவே
புதிதாக தனிநபர் கடன் வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும்
அதிகரித்துள்ளன. அதாவது, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 139.4% அதிகரித்துள்ளது. இந்த பிரிவின் வளர்ச்சியின் முதன்மை இயக்கியாக தொடர்ந்து என்.பி.சி.எஃப்
நிறுவனங்கள் இருந்தன.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் என்.பி.சி.எஃப்
நிறுவனங்களின் தனிநபர் கடன் நிலுவைகள் 51.4% அதிகரித்துள்ளது, இதே
காலக் கட்டத்தில் புதிய கடன் வாங்கியதன் மொத்த சதவிகித எண்ணிக்கை என்.பி.சி.எஃப்
நிறுவனங்களில் 72.1% அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பு, 2018 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 48.4% ஆக
இருந்தது.
என்.பி.சி.எஃப் நிறுவனங்கள் வழங்கிய
தனிநபர் கடன்களின்
சராசரி (average ticket
size - ATS) 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் ரூ. 41,000 ஆக குறைந்துள்ளது. இது, 2018 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் ரூ.1.1 லட்சமாக இருந்தது.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில், என்.பி.எஃ.ப்.சி நிறுவனங்களில் புதிதாக கடன் வாங்கியவர்களில்
கிட்டத்தட்ட 50% பேர் பிலோ – பிரைம் பிரிவை சார்ந்தவர்களாவர்கள். இந்த அதிகரிப்பு 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 8.5% ஆக இருந்தது.
இரண்டாம் காலாண்டில், பொதுத்துறை (PSU) மற்றும் தனியார் துறை (PVT) வங்கிகளின் தனிநபர் கடன் குறைபாடுகள், என்.பி.எஃப்.சி குற்றங்களில் 0.06% அதிகரிப்பை
விட அதிகமாக உள்ளது. இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக குற்ற விகிதம்
குறைந்துள்ளது.
வின்டேஜ் பகுப்பாய்வுபடி, குற்றங்கள் மற்றும் மோசமாவது, பொதுத்துறை நிறுவனம் (-0.12%)
மற்றும் தனியார் துறை
(-0.22%) ஆக உள்ள நிலையில் என்.பி.எஃப்.சி கூட்டு செயல்திறன் நன்றாக (+0.51%)
உள்ளது. கடன் அளவுகளின்படி பார்க்கும் போது, டிரான்ஸ்யூனியன் சிபில்-ன்
பகுப்பாய்வில், ரூ.50,000-க்கும் குறைவான என்.பி.எஃப்.சி கடன்களில் தவணை தவறுவது
போன்ற பிரச்னைகள் +1.91% அதிகரித்துள்ளன.
இது என்.பி.எஃப்.சி புதிய தனிநபர் கடன்களில் சுமார் 80% ஆக உள்ளது.
“கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் நிலுவைகளில் பிலோ-பிரைம்
மற்றும் நடுத்தர
இடர்ப்பாடு கொண்ட கடன்தாரர்களின் வளர்ச்சி, ஒட்டுமொத்த சந்தையை விட அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருந்தன,” என்றார் கெல்கர்.
“இது, அதிக
இடர்ப்பாடு கொண்டவர்களுக்கு பாதுகாப்பற்ற கடன்களை அதிகமாக வழங்க கடன் வழங்கும்
நிறுவனங்கள் அதிக விரும்பத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. நாம் பார்த்தபடி, இந்த
அணுகுமுறை நிச்சயமாக வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால், தொடர்ச்சியான அடிப்படையில் ஒழுங்காக
நிர்வகிக்க நிலையான மற்றும் பயனுள்ள இடர்ப்பாட்டு மேலாண்மை உத்திகள் தேவை.”
வாகனக்
கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்து அடமானக் கடன்கள் பிரிவுகளில்
சுமாரான வளர்ச்சி
பயணிகள் வாகன விற்பனை மந்தமாக தொடர்வது, வாகனக் கடன் வளர்ச்சியை பாதித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வோர் கடன் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வாகன கடன் நிலுவைகள், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 10.9% வளர்ச்சிக்கண்டுள்ளது.
இது, 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் வளர்ச்சியான 23.3% உடன் ஒப்பிடும் போது, கணிசமாகக் குறைந்துள்ளது.
வாகன கடன்கள், அனைத்து முக்கிய கடன் வகைகளின் வளர்ச்சி விகிதத்தில், குறைவான வளர்ச்சியை 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் பதிவு செய்துள்ளன.
பொதுத்துறை (PSU) மற்றும் தனியார் துறை (PVT) வங்கிகளில்,
2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் வாகனக் கடனுக்கான குற்றங்கள் நிலுவை நிலை மேம்பட்டுள்ளது. இது குறைவான
இடர்ப்பாடுகளை கொண்டவர்களுக்கு தொடர்ந்து கடன் வழங்குவதில் கவனம் செலுத்துவதை
பிரதிப்பலிக்கிறது.
என்.பி.எஃப்.சிகளின் கடன் குற்றங்கள்,
ஆண்டுக்கணக்கில் 0.07 அதிகரித்துள்ளன. வின்டேஜ் பகுப்பாய்வு, அனைத்து
இடர்ப்பாடு அடுக்குகளில் என்.பி.எஃ.சி
நிறுவனங்களின் (+1.14%) குற்றங்கள் அதிகரிப்பை காட்டுகிறது. என்.பி.எஃப்.சி வின்டேஜ் குற்றத்தின் அதிகரிப்பு ரூ. 2.5 லட்சத்துக்கு குறைவான
கடன்களில் கணிசமாக (+1.64%) அதிகரித்துள்ளது.
இது என்.பி.எஃப்.சி வாகனக்
கடன் கையகப்படுத்துதல்களில் கிட்டத்தட்ட 55% ஆகும்.
வீட்டுக் கடன் சந்தையில்,
இளைய தலைமுறையினரிடையே வாங்கக்
கூடிய தகுதிகள் (affordability constraints), 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் குறைந்திருந்ததால், ஒட்டுமொத்த வீடு வாங்குவது குறைந்திருக்கிறது.
மேலும், இது கடன் வளர்ச்சியையும்
குறைத்திருக்கிறது. புதிதாக கடன் வாங்கும் எண்ணிக்கை மற்றும் நிலுவை மீண்டும் 2019
ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் குறைந்திருக்கிறது. வீட்டுக் கடன்
திரும்பச் செலுத்துவதில் உள்ள குறைபாடுகள் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கண்டன.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த வீட்டுக் கடன் நிலுவைகள் 14.5% அதிகரித்துள்ளன, இது 2018
ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 20.6% அதிகரிப்புடன் காணப்பட்டது. காரணம், புதிதாக கடன்
வாங்குவது குறைந்திருப்பதாகும்.
இந்தக் காலகட்டத்தில் என்.பி.எஃப்.சி வீட்டுக் கடன் நிலுவைகளின் வளர்ச்சி 13.6% ஆக குறைந்தது. இது
இது 2018
ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 24.1% ஆக இருந்தது.
2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்
புதிய கடன்களின் எண்ணிக்கை 11.9% குறைந்துள்ளது. மேலும், புதிய கடன்களின் நிலுவையும் தொடர்ந்து
குறைந்து (6.3% குறைவு)
வருகிறது.
என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் வழங்கிய
கடன்களின் நிலுவை, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 17.9% குறைந்துள்ளது.
இது, 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 16.3% வளர்ச்சியாக
இருந்தது.
“கடந்த ஆண்டின் இதே காலாண்டு உடன் ஒப்பிடும்போது,
நிலுவை குறைபாடுகள், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 0.03% உயர்ந்து 1.68% ஆக அதிகரித்துள்ளது,”என்றார் கெல்கர்.
“அதை உடைத்து, பொதுத்துறை நிறுவன கடன் வழங்குநர்களுக்கான குற்றச்செயல் விகிதங்கள் 0.34% மேமட்டிருக்கின்றன.
தனியார் துறை கடன் வழங்குபவர்களில் இது அதிக மாற்றமில்லாமல் இருக்கிறது. சிறிதாக
0.03% மேம்பட்டிருக்கிறது; இதே காலக் கட்டத்தில், என்.பி.எஃப்.சி நிறுவனங்களின்
போர்ட்ஃபோலியோவில் கடனை திரும்பக் கட்டுவது தொடர்பான தவறுகள் மற்றும் குற்றங்கள்
0.27% அதிகரித்துள்ளது.”
சொத்து சந்தையில் காணப்பட்ட மோசமான நம்பிக்கைகள்
மற்றும் உணர்வுகளால் சொத்து
அடமானக் கடன்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, புதிதாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து
வருகிறது.
சொத்து அடமானக் கடன்களின் நிலுவை,
2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 16.7% ஆக அதிகரித்துள்ளது. இது, 2018 ஆம்
ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 26.4% ஆக இருந்தது.
இது பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து
அடமானக் கடன் நிலுவைகளின் வளர்ச்சியில் அதிக மந்தநிலையை பிரதிபலித்தது. அதாவது,
2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 35.4% ஆக இருந்தது, 2019 ஆம் ஆண்டின்
இரண்டாம் காலாண்டில் 14.9% ஆக குறைந்துள்ளது.
இதனால், புதிய கடன்களின் நிலுவை, 2019 ஆம்
ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 20.9% ஆக குறைந்துள்ளது.
“சந்தை அழுத்தங்கள்,
புதிய சொத்து அடமானக் கடன்களின் கலவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. புதிய
நிலுவைகள், 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்
பொதுத்துறை வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி நிறுவனங்களில் முறையே 31% மற்றும்
36% குறைந்திருக்கிறது.
அதேநேரத்தில், புதிய நிலுவைகள் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனங்களில் 12% வளர்ச்சிக்கண்டுள்ளது,” எனவும் கெல்கர்
குறிப்பிட்டார்.
“தனியார் துறை கடன்
வழங்கும் நிறுவனங்களில் புதிய
சொத்து அடமானக் கடன் வாங்குவதன் பங்களிப்பு, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்
37% ஆக
உள்ளது. இது, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம்
காலாண்டில் 26% ஆக
இருந்தது.”
முக்கிய நுகர்வோர் கடன்களில் கடந்த ஆண்டில் சொத்து அடமானக் கடனில்தான் குற்றங்கள் மிக குறிப்பிடத்தக்க
அளவு அதிகரிப்பு கண்டது.
நிலுவை நிலை கடன் குற்ற விகிதங்கள் 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 0.25%
அதிகரித்து 3.47% ஆக
அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு பொதுத் துறை, தனியார் துறை மற்றும்
என்.பி.எஃப்.சி நிறுவனங்களில் முறையை 0.29%, 0.27% மற்றும் 0.49% அதிகரித்து காணப்பட்டது.
இந்தக் குற்றங்கள் அதிகரிப்பு, முதன்மையாக 1 கோடி ரூபாயை விட பெரிய கடன்களில் ஏற்பட்டிருக்கிறது.
“இந்திய நுகர்வோர் கடன் சந்தை, மற்ற பெரிய நாடுகளை விட அதிக விகிதத்தில் தொடர்ந்து விரிவடைகிறது. ஆனால், அந்த விரிவாக்கத்துடன் தொடர்புடைய வலிகள் அதிகரித்து வருகின்றன
பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட கடன்களில்
புதிய கடன்கள் மற்றும் நிலுவை
வளர்ச்சி தொடர்ந்து வலுவாக உள்ளன.
ஆனால் இந்த வளர்ச்சியின் அதிக பங்கு அதிக இடர்ப்பாடு கொண்ட கடன் வாங்குபவர்கள்
மூலமானதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குற்ற விகிதங்கள் பொதுவாக நிலையானதாகவே இருக்கின்றன.
கடன் சந்தையில் அதிக இடர்ப்பாடுகள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அவற்றை கடன் வழங்குநர்கள்
புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அவற்றுக்கு திறம்பட தீர்வு வழங்க, அவர்களின் உத்திகளை
சரிசெய்ய வேண்டும்” என்றார் கெல்கர்.
“இன்றைய சவாலான கடன் சந்தையில்,
கடன் வழங்குநர்கள் அதிகரித்து வரும், அதிநவீன பகுப்பாய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. வின்டேஜ் பகுப்பாய்வு போன்றவை, அவற்றின் கடன் போர்ட்ஃபோலியோவின் அடிப்படை ஆரோக்கியத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும்,” எனவும்
கெல்கர் குறிப்பிட்டார்.
“இத்தகைய
பகுப்பாய்வு, ஏற்றுக்கொள்ள கூடிய ரிஸ்க், கடன் மூலமான இழப்புகளை மேலாண்மை செய்வது,
மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றை மாற்றி அமைக்க உதவிகரமாக இருக்கும்.”
டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றிய
கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள https://www.transunioncibil.com/insights-events பார்வையிடவும்
டிரான்ஸ்யூனியன் சிபில்
தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றி..!
டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் தொழில்
நுண்ணறிவு அறிக்கை (TransUnion
CIBIL’s Industry Insights Report) என்பது மிகவும் ஆழமானது. முழுமையான
மக்கள்தொகை தீர்வாக ஒவ்வொரு காலாண்டும் டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் கடன் பெற்ற
நுகர்வோர் விவரங்களின் அடிப்படையில் புள்ளி விவர தகவலாக அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக்கணக்கான கடன்
விவரங்களை கொண்டிருப்பததோடு, நுகர்வோர் கடன் பயன்பாட்டு மற்றும் செயல்பாடு பற்றி
விளக்கி சொல்லி இருக்கும். இந்த நுண்ணறிவு தொழில் அறிக்கையை நிதி உதவி அளிக்கும்
பல்துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், கடன் சந்தை பற்றியும் வணிக சுழற்சி பற்றியும்
நுகர்வோர் மனநிலை பற்றியும் காலத்துக்கு காலம் இந்தியா முழுக்க அறிந்து கொள்ள
முடியும்.
வணிகம் சார்ந்த விவரங்கள் மற்றும்
கூடுதல் விவரங்களை பெற, தொழில் நுண்ணறிவு அறிக்கைக்கு சந்தா கட்டவும் https://www.transunioncibil.com/insights-events பார்வையிடவும்.
டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி..!
இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாகவும் (Credit
Information Company) உலக அளவிலான கடன்
தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளதாகவும் டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது.
இதில், அனைத்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
தனிநபர்கள் மற்றும் வணிக
நிறுவனங்களின் 1,000 மில்லியனுக்கும் மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து
வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் - வணிகம் விரைவாக நடக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு குறைந்தக்
கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக உள்ளது.
உறுப்பினர்களுக்கு
கடன் சார்ந்த இடர்பாட்டை (risk) நிர்வகிக்க உதவுவதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் பொருத்தமான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது. நுகர்வோர்
மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து,
தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கான முடிவை சுலபமாக
எடுக்க உதவுகிறது.
தகவல்களின் சக்தி (power
of information), டிரான்ஸ்யூனியன் சிபில்,
அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு,
அனைவருக்கும் நிதிச் சேவை மூலம் வலுவான பொருளாதாரத்தைஉருவாக்க உதவுகிறது. இந்தத் தகவலை நல்லது
(Information for Good) என்று இந்த அமைப்பினர் அழைக்கிறார்கள்.
For further information contact:
Namrata Parashar
namrata.parashar@transunion.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக